என் மலர்
அரியலூர்
- காதல் திருமணம் செய்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுத்தவர் கைது செய்யப்பட்டார்
- வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சேர்ந்து வாழ மறுத்தது தெரிய வந்தது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் கீழக்கவட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுமணி (வயது 26). இவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்தபோது திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த ராகுலன் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கீழக்கவட்டாங்குறிச்சியில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராகுலன் பணி நிமிர்த்தம் காரணமாக கும்பகோணம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னுமணியை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்ததுள்ளார்.
இதையடுத்து, பொன்னுமணி தனது காதல் கணவரிடம் இதுபற்றி கேட்டு உள்ளார். அப்போது அவர் தற்போது பழகி வரும் பெண்ணுடன் தான் வாழ்வேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னுமணி அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காதல் திருமணம் செய்த பெண்ணுடன் வாழ மறுத்த ராகுலனை கைது செய்தார். பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
- உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் ராஜேஸ்வரி (வயது 27). இவருக்கும் மேல் திரு தத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவரது கணவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டர். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு தகாத பழக்கம் ஏற்பட்டு ராஜேஸ்வரி கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக ராஜேஸ்வரி ஊருக்கு திரும்பிய நிலையில், தாய் வீட்டில் தங்கிய உள்ளார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக ராஜேஸ்வரி தனது வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று இறந்து கிடந்தார். அவரது 4 மாத ஆண் குழந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்துள்ளது.அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள் குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரி மற்றும் 4 மாத குழந்தையின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து உறவினர்களிடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 809 விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
- எம்.எல்.ஏ. கண்ணன் 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார்
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற இந்த விழாவில், ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை, மற்றும் அரசு உதவி பெறும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளை சேர்ந்த 309 மாணவர்களுக்கும், 500 மாணவிகளுக்கும் சேர்த்து 809 மாணவர்களுக்கு, ரூ.32 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்ஜெயா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்வில் அரியலூர் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் செல்வகுமார், ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் தனசேகர், மணிமாறன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்தையன், நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், மீனாட்சி நடராஜன், வெற்றிவேலன், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
- திருநடன திருவிழாவை முன்னிட்டு பெண்கள் அக்னி சட்டி ஊர்வலம்
- மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலை அடிபல்ல தெருவில் உள்ள வட பத்ர காளியம்மன் கோவிலில் திருநடனத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அக்னிசட்டி, கரகங்கள் ஏந்தி ஜெயங்கொண்டம் முழுவதும் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
- இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
அரியலூர்,
அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்குவதோடு, அந்த தொகையை பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகைகால போனாஸ் ரூ.5 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்கு முன்பாக வழங்கிட வேண்டும். விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தானம், மாவட்ட துணைச் செயலர் பி.சி.தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டும் முழக்கமிட்டனர்.
- அரியலூரில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டமிடப்பட்டுள்ளது
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடுபொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில், 5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருமானூர் வட்டார விவசாயிகளுக்கு இடுபொருட்களான ரசாயன உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறுவை மாற்றுப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள், எண்ணெய் வித்து விதைகள் மற்றும் பயிர் வகை விதைகள் வழங்கப்பட்டும், குறுவை நெல் சாகுபடி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களை அணுகி பயன்பெற வேண்டும் என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வேளாண் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளான பலரும் கலந்து கொண்டனர்.
- மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது
- போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா(வயது 36). இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அவர் வீட்டுக்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்தப் பகுதியில் உள்ளவர்களை மிரட்டி சத்தம் போட்டு உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து, டவர் மீது ஏறி அவரிடம் சமாதானம் பேசி கீழே இறங்க செய்தனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- அரியலூரில் 2 வீடுகளில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலுவின் மனைவி சுதா(வயது 28). ராஜவேலு வெளிநாட்டில் உள்ளதால், சுதா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் ஆடி அமாவாசையையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாகனங்களில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.பின்னர் வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் மாடியில் இருந்த கதவுகள் மற்றும் அறைக்குள் இருந்த பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டு கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 9½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இதேபோல் செந்துறை அருகே உள்ள தளவாய் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(40). இவர் வயலில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது தந்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக தனது மனைவி கவுசல்யாவை, அவரது சொந்த ஊரான பெண்ணாடம் பூவனூருக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டை பூட்டி விட்டு தனது தந்தையை அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் மகாதேவனின் தாய் கஸ்தூரி, அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த முக்கால் பவுன் மோதிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
- அரியலூர் கோர்ட்டில் விஷம் தின்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
- தன்னை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறி, கையில் மறைத்து வைத்திருந்த எலிபசையை தின்றார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா(வயது 22). இவருக்கும், வானதிராயன்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த பாபு(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு இவரது உறவினர்கள் பேசி, திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, விவாகரத்து கோரி அரியலூரில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த ஸ்வேதா, தன்னைவிட இளையவரான பாபுவிற்கு தன்னை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறி, கையில் மறைத்து வைத்திருந்த எலிபசையை தின்றார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
- கீழப்பழுவூர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்
அரியலூர்,
திருநெல்வேலி நகரம், குன்றுத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பேச்சியம்மாள்(30). இவர் தற்போது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சுண்ணாம்பு கால்வாய் தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.கடந்த 20.5.2023 அன்று இவர்களது 7 வயது மகளை, வீட்டின் உரிமையாளர் ராமசாமி மகன் பரமசிவம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தகாவும், இது குறித்து புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.மேலும், பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சியம்மாள் கடந்த 19.6.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.இந்நிலையில் கடந்த 24.6.2023 அன்று கீழப்பழுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிலர், பேச்சியம்மாள் வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு அவரிடம் பரமசிவம் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் உன் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பதாகவும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த பேச்சியம்மாள் திங்கள்கிழமை தனது கைகுழந்தை, கணவர் லட்சுமணனுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸôர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து பேச்சியம்மாள்,கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த போது போலீஸôர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி, வலுக்கட்டயமாக வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சியம்மாளை கடைசி வரை ஆட்சியரை சந்திக்க விடாமல் போலீஸôர் தடுத்தனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
- 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திமிதி திருவிழாவை முன்னிட்டு திரௌபதி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், நெய், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பின்னர் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஏரியிலிருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் மேளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கரகம் கோயிலை வந்தடைந்தது. அதன் பின்னர் 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இவ்விழாவில் ஜெயங்கொண்டம், வானதிரையன்பட்டினம், துளாரங்குறிச்சி, இடையாறு, ஏந்தல், உடையார்பாளையம், குமிழியம், பரணம் தா.பழூர், கோடங்குடி, கோட்டியால் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் காலனி தெருவில் வசிக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மொச்சகொட்டை மகன் ஜோதி (42) என்பவர் மீன்சுருட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையடித்தல் போன்ற பல்வேறு குற்றங்களில் கடந்த ஆறு மாதமாக ஈடுபட்ட வரை மீன்சுருட்டி போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். தொடர் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள ஜோதியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.






