என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் கைது
    X

    குண்டர் சட்டத்தில் கைது

    • தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் காலனி தெருவில் வசிக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மொச்சகொட்டை மகன் ஜோதி (42) என்பவர் மீன்சுருட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையடித்தல் போன்ற பல்வேறு குற்றங்களில் கடந்த ஆறு மாதமாக ஈடுபட்ட வரை மீன்சுருட்டி போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். தொடர் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள ஜோதியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

    Next Story
    ×