மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டதுபோலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்
மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
Published on

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா(வயது 36). இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அவர் வீட்டுக்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்தப் பகுதியில் உள்ளவர்களை மிரட்டி சத்தம் போட்டு உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து, டவர் மீது ஏறி அவரிடம் சமாதானம் பேசி கீழே இறங்க செய்தனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com