என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் படை பத்து மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசம்

    அரியலூர், 

    அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோயிலில், ஆடிபால்குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம்அருகேயுள்ள செட்டிஏரி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டிஎடுத்த வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலைஅடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்குஅபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டுபக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • சின்னபாளையத்தில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது
    • அனைவருக்கும் இனிப்புகளை பா.ம.க.வினர் வழங்கினர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் பெரியபாளையம் ஊராட்சி பகுதிகளில் பா.ம.க. கொடியினை, மாநில வன்னியர் சங்க செயலாளர் க. வைத்தி ஏற்றி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவரும் மாவட்ட செயலாளர்காடுவெட்டி ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். கொடியேற்று விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பா.ம.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • 2 கடைகளில் போலீஸ் என கூறி பணம் பறித்த வாலிபர்
    • கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்

     அரியலூர், 

    கீழப்பழுவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருச்சி பிரதான சாலையில்பெட்டிக்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி மனைவி ஷீலா(வயது50). இவரது கடைக்கு காக்கிப் பேண்ட் அணிந்து வந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், தான் போலீஸ் எனக் கூறி மிரட்டி, அவரிடம் ரூ.15 ஆயிரத்தையும், இதே போல் தஞ்சாவூர் சாலையில் பெட்டிக் கடை நடத்தி வரும் நடராஜனையும் மிரட்டி, அவரிடம் ரூ.10 ஆயிரத்தையும் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறிது ஷீலா அளித்த புகாரின் பேரில், திருமானூர் கொள்ளிடக் கரை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில் ,அவர் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பகவதிராஜ் (33) என்பதும், மேற்கண்ட பெட்டிக் கடை உரிமையாளர்களிடம் பணம் பறித்தவர் என்பதும், இவர் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் போக்சோ வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து பகவதிராஜை கைது செய்தனர்.

    • மகளிர் உரிமை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப முகாம் குறித்த ஆலோச னைக்கூட்டம்,மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் தலைமையில் நடைபெற்றது, அரியலூர் மாவட்டத்தில்,கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை அரியலூர் வட்டத்தில் 163 நியாய விலைக் கடை பகுதிகள் மற்றும் செந்துறைவட்டத்தில் 74 நியாய விலைக் கடை பகுதிகள் ஆக மொத்தம் 237 நியாய விலைக் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 5 -ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஜெயங்கொண்டம் வட்டத்தில் 162 நியாய விலைக் கடை பகுதிகள் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் 67 நியாய விலைக் கடை பகுதிகளில் ஆக மொத்தம் 229 நியாய விலைக் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு முகா ம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 முதல் பகல் 1.00 மணி வரையிலும்,பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படும். இதில் முதல் கட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள்,அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் மட்டும் 20-ந் தேதி அன்று ளமுதல் அந்தந்த நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்றுவழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர், 

    உலக சதுரங்க தினத்தையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களில்  சதுரங்க போட்டி நடைபெற்றது. அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியை அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தொடக்கி வைத்து தலைமை உரையாற்றினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் கலந்து கொண்டு, சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.இதற்கான ஏற்பா டுகளை  ஆசிரியர்கள் தங்கபாண்டி, செந்தில்குமரன், கோகிலா, செவ்வேள், இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உலக சதுரங்க தினம் கொண்டா டப்பட்டது.

    • மீன்சுருட்டி தடகள வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
    • சர்வதேச போட்டியில் 3 தங்கம் வென்றுள்ளார்

     அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்,உமாபிரியா தம்பதியின் மகன் ஆகாஷ்.தடகள விளையா ட்டுகளில் தீவிர பயிற்சி மேற்கொண்ட இவர், மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார். நிகழாண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்ப தக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்ற அவர், தொடர்ந்து நேபாளம், பொக்காரா சர்வதேச தடகள ஸ்டேடியத்தில் இந்தோ-நேபால் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார்.போட்டிகளில் இந்தியா, நேபால், இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வீரர்க ள்கலந்து கொண்டனர். இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு ஆகாஷ் தங்கப் பதக்கங்களை வென்றார்.

    இந்நிலையில், பதக்கம் வென்ற ஆகாஷ், செந்த ஊருக்கு திருபினார். அங்கு அவருக்கு வர்த்தக சங்கத் தலைவர் ராஜா ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பட்டாசு வெட்டித்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சொந்த கிராமமான முத்துசேர்வா மடத்துக்கு சென்றார்.அங்கு அவரது உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளி த்தனர். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய ஆகாஷ், இந்திய ராணுவத்தில் பணிபுரிவதே தனது வாழ்நாள் லட்சியமாகும். இதற்காக தொடர்ந்து உடல் தகுதி மற்றும் திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுத்த போது விளையா ட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக மாநில தேசிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று திரும்பியு ள்ளேன். எதிர்காலத்தில் ஆசியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறேன் என்றார்.

    • 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. வழங்கினார்

    அரியலூர்:

    ஜெயங்கொண்டத்தில் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரியலூர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அரசு பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமை தாங்கினார். விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு 809 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்த பணிகள் நடைபெறுகிறது
    • இன்று தொடங்குகிறது

    அரியலூர்

    இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால் 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந்தேதி வரை வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், வாக்குச்சாவடி பிரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடு தேடி வர உள்ளனர்.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும், 100 சதவீதம் தூய்மையாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கரும்பாயிரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு டன் ஒன்றுக்கு 10.25 பிளி திறனுக்கு ரூ.3,150 கொடுத்து வருகின்றனர். இதனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட கரும்புகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • அரியலூரில் வாகன சோதனை நடைபெற்றது
    • 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் தகுதி சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி 7 ஆட்டோக்கள் இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று நகரில் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் எனவும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி அருகே மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் ஆர்.டி.ஓ. தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வி.கைக்காட்டி நோக்கி சென்ற 2 டிராக்டர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிராக்டர்களில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 21), நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (17) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்தி சென்ற 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து கயர்லாபாத் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேளூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜாஜி கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மது விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பரிந்துரை பேரில் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). இவர் கடந்த 30-ந் தேதி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் வெளியே வந்தால் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலெட்சுமி வேண்டுகோள் விடுத்தார்.  இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆணையிட்டதின் அடிப்படையில் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

    ×