என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரங்க போட்டி
    X

    சதுரங்க போட்டி

    • அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    உலக சதுரங்க தினத்தையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களில் சதுரங்க போட்டி நடைபெற்றது. அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியை அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தொடக்கி வைத்து தலைமை உரையாற்றினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் கலந்து கொண்டு, சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.இதற்கான ஏற்பா டுகளை ஆசிரியர்கள் தங்கபாண்டி, செந்தில்குமரன், கோகிலா, செவ்வேள், இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உலக சதுரங்க தினம் கொண்டா டப்பட்டது.

    Next Story
    ×