என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    அரியலூரில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • அரியலூரில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை, மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக்கான தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். 6, 8-ம் வகுப்பு வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் மாணவி ஹர்ஷா முதல் பரிசையும், மாணவன் ஹரிஷ்குமார் 2-ம் பரிசையும், மாணவன் கபிலன் 3-ம் பரிசையும் பெற்றனர்.

    9, 10-ம் வகுப்பு வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் மாணவன் ராகுல் முதல் பரிசையும், மாணவன் கிஷோர் 2-ம் பரிசையும், மாணவன் உதயநிதி 3-ம் பரிசையும் பெற்றனர். 11, 12-ம் வகுப்பு வரை நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாணவி தரனிகா முதல் பரிசையும், மாணவன் திவ்யபாரதி 2-ம் பரிசையும், மாணவன் குணா 3-ம் பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×