என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் அரசு கல்லூரியில் மகளிருக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்
- அரியலூர் அரசு கல்லூரியில் மகளிருக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- முகாமுக்கு அக்கல்லூரியின் முதல்வர்(பொ) ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார்.
அரியலூர்,
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில், முன்னாள் மாணவர்கள் சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான மகளிர் நலம் குறித்த ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அக்கல்லூரியின் முதல்வர்(பொ) ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மைய உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர், ரத்தசோகை அறிகுறி உள்ள 200 மாணவிகளுக்கு கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, முருங்கை இலை பொடி மற்றும் தேன் அடங்கிய இயற்கை நலப்பெட்டகங்களை வழங்கினார். முன்னதாக முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலாளரும், பேராசிரியருமான வெ.கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பொருளாளர் கோ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் பெ.ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.தண்டபாணி, வை.சிவக்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள், பேராசிரியர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் ச.சரவணன் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.






