போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டு பயன்பெறலாம்
போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

அரியலூர்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-1 மற்றும் தொகுதி-2 தேர்விற்கான, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 14-ம் தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரிதேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டு பயன்பெறலாம் என அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com