என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி விடுதியில் ஜெயங்கொண்டம் மணவி தற்கொலை
- கல்லூரி விடுதியில் ஜெயங்கொண்டம் மணவி தற்கொலை செய்து கொண்டார்
- செல்போனில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்
ெஜயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் யுவஸ்ரீ (வயது 19). கோவையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி ஏரோ நாட்டிக்கல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்புமணி (25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். தற்போது அன்புமணி சிங்கப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.இதனால் காதலர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இைடயே வாக்குவாதம ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அன்புமணி தூக்க மாத்திரைகளை அதிகம் தின்று தற்கொலைக்கு முயன்றார். இந்த தகவலை நண்பர்கள் மூலம் அறிந்த யுவஸ்ரீ வேதனை அடைந்தார். தன்னால் காதலன் இறந்து விடுவாரா? என்ற அச்சத்தில் இருந்த மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது ேதாழி ஒருவர் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






