என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே கார்த்திகை தீபம் ஏற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை பலியானார். மகள் உயிருக்கு போராடி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் உடையார்பாளையம் வடக்குத் தெருவில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இவரது இளைய மகள் பவானி அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு செல்வம் தனது இளைய மகள் பவானியுடன் கடையில் தீப விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.
பவானி கடையின் உள்ளே சாமி படம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே விளக்கேற்றினார். இதில் எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள கீற்றில் தீ பட்டு மளமளவென எரிந்தது. பவானியின் உடல் மீதும் தீ பற்றியதால் அலறித்துடித்தார். இதைக்கண்ட செல்வம் மகளை காப்பாற்றுவதற்காக உள்ளே ஓடினார். அந்த சமயம் கீற்றில் பரவிய தீயால் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் செல்வம், பவானி இரு வரும் சிக்கிக் கொண்டனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செல்வத்தையும், பவானியையும் தீயில் இருந்து மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பவானி மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். கடை தீப்பற்றி எரிந்ததில் கடைக்குள் இருந்த மளிகை சாமான்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத்தின் போது நடந்த இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காசான் கோட்டையில் தரமான தார்சாலை அமைக்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் சுத்தமல்லியில் இருந்து காசான்கோட்டை வழியாக ஸ்ரீபுரந்தான் வரை உள்ள 9 கிலோ மீட்டர் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு அரசு சார்பில் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் வேலை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காசான்கோட்டையில் உள்ள தெரு வழியாக செல்லும் சாலையில் மேடு, பள்ளங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதோடு சாலையை மேடு படுத்தி சாலையின் இருபக்கங்களிலும் வடிகால் வசதி செய்துகொடுத்து, பின்பு சாலை அமைக்கும்படி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் காசான்கோட்டை கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரமான தார்சாலை அமைக்கக்கோரி காசான்கோட்டை வழியாக சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லிக்கற்களை ஏற்றிச்சென்ற ஒப்பந்ததாரருக்கு சொந்தமான லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருமானுரில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொறத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 45). இவர் கடந்த நவம்பர் மாதம் முத்தையன் கோவில் கட்டும் பிரச்சினை காரணமாக ஆங்கியனூர் கிராமத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையின் இடையே காட்டுப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சன்னாவூர் கிராமத்தை சேர்ந்த செல்வம்(60), கொறத்தக்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(35), வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ்(60), கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அருண்ராஜ்(28), ராஜப்பா மகன் அய்யப்பன்(28), பஞ்சநாதன் மகன் விக்னேஷ்(21), செல்வராஜ் மகன் சந்திரசேகர்(28) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் மனைவி ரஷ்யாதேவி(28), அவரது கள்ளகாதலனால் அடித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த மருதை மகன் கார்த்திக்(33) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த இரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மொத்தம் 8 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் கீழப்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி ஆகியோர் பரிந்துரையின் பேரில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று அவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டி மடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனக்காடுகள் உள்ளன. இந்த காடுகளில் மான், முயல், மயில், உடும்பு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வன விலங்குகளை சிலர் வேட்டையாடி அதை சமைத்து சாப்பிடுவதுபோல், சமூக வலை தளங்களில் (யூ-டியூப்) வெளியிட்டு வருவாய் ஈட்டி வருவதாக மாவட்ட போலீசாருக்கும், மாவட்ட வனத்துறையினருக்கும் புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று காலை மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனக்காவலர்கள் உடையார்பாளையம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை வனக்காடுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் காட்டுப்பகுதிக்குள் சென்றதை பார்த்தனர்.
பின்னர் அவர்களை, வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(வயது 37), சுப்பிரமணியன்(33), கார்த்திக்(29), அலெக்ஸ் பாண்டியன்(24) ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிடுவது போல், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வருவாய் ஈட்டியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறையினர் அரியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், மடிக்கணினி மற்றும் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆண்டிமடம் அருகே கிணறு உள்வாங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரதராஜன்பேட்டை:
ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை ஊராட்சியில் புது தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த மாதம் புதிதாக வீடு கட்டியிருந்தார். இந்த வீட்டின் பின்புறம் பழைய வீடு இருக்கும்போது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிணறு ஒன்று இருந்தது. இதன் மூலம் கிணற்றில் மின் மோட்டார் வைத்து வீட்டுக்கு மேல் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து வீட்டிற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் பின்புறம் கட்டிடம் இடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. உடனே சங்கர் வெளியே சென்று பார்த்தபோது, கிணறு அப்படியே 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிணற்றை சுற்றி வைத்திருந்த தண்ணீர் இறைக்கும் பாத்திரங்களும் உள்ளே விழுந்து விட்டன. பின்னர் வீட்டிலுள்ள அனைவரும் கிணற்றுக்கு அருகில் செல்லாமல், உடனே ஆண்டிமடம் தாசில்தார் குமரையாவிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இதேபோல் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் இளங்கோவன் என்பவரது வீட்டிலும் இதுபோன்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிணறு இடிந்து உள்ளே விழுந்து விட்டது.
இது குறித்தும் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் குமரையா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் உள்வாங்கிய கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை தூக்கி சென்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் ரத்னா சம்பந்தப்பட்ட கழுவந்தோண்டி நைனார் ஏரியை ஆய்வு செய்து, ஏரிகரையில் விரைவில் சாலை அமைத்துதரப்படும் என்று கூறினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதை தொடர்ந்து நைனார் ஏரி நிரம்பியுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கோசலம் (வயது 83) என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடலை உறவினர்கள் நைனார் ஏரியில் கழுத்தளவு தண்ணீரில் தூக்கி கொண்டு மயானத்திற்கு சென்று எரியூட்டினர். இதை அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா நைனார் ஏரி மற்றும் மயானம் செல்லும் பாதை, வடிகால் மதகு உள்ளிட்டவற்றையும், நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறும்போது, மயானம் செல்ல அவ்வழியாக உள்ள ஏரிகரையை பலப்படுத்தி விரைவில் 1 கி.மீ தொலைவிற்கு சாலை வசதி செய்துதரப்படும். வடிகால் மதகுக்கு மேல் பிரேதங்களை கொண்டு செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தரப்படும் என்றார்.

அப்போது, பொதுமக்கள், வடிகால் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீர் அணைக்கரை வரை 12 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு விவசாயம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வயலுக்கும் நீர்பாசன வாய்க்காலுக்கும் இடையிடையே மதகுகள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அதற்கான ஆய்வு மேற்கொண்டு 12 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள வாய்க்காலில் இடையிடையே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, மாவட்ட கலெக்டரின் இந்த முடிவு தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதை தொடர்ந்து நைனார் ஏரி நிரம்பியுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கோசலம் (வயது 83) என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடலை உறவினர்கள் நைனார் ஏரியில் கழுத்தளவு தண்ணீரில் தூக்கி கொண்டு மயானத்திற்கு சென்று எரியூட்டினர். இதை அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா நைனார் ஏரி மற்றும் மயானம் செல்லும் பாதை, வடிகால் மதகு உள்ளிட்டவற்றையும், நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறும்போது, மயானம் செல்ல அவ்வழியாக உள்ள ஏரிகரையை பலப்படுத்தி விரைவில் 1 கி.மீ தொலைவிற்கு சாலை வசதி செய்துதரப்படும். வடிகால் மதகுக்கு மேல் பிரேதங்களை கொண்டு செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தரப்படும் என்றார்.

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, மாவட்ட கலெக்டரின் இந்த முடிவு தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
ஜெயங்கொண்டம் அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் ஆபத்தான நிலையில் இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு பாதை அமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அப்பகுதியில் உள்ள நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று வருகின்றனர். வெயில் காலத்தில் உயிரிழப்பவரின் உடலை அப்பகுதி பொதுமக்கள் நயினார் ஏரியில் இறங்கி எளிதில் எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தனர்.
மழைகாலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் நயினார் ஏரியின் வழியாக உடலை எடுத்து செல்ல பாதை அமைத்து தருமாறும் அல்லது மாற்றுப்பாதை அமைத்து தருமாறும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதியினர் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கழுந்தோண்டி கிராமத்தை சேர்ந்த கோசலை (வயது 83) என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய கழுவந்தோண்டி நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள், பொதுமக்கள் கொண்டு சென்றனர். அப்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. சுடுகாட்டிற்கு செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் உறவினர்கள் ஏரியில் இறங்கி கழுத்தளவு மற்றும் மார்பளவு தண்ணீரில் மிதந்தவாறே கோசலையின் உடலை சுமந்துகொண்டு, சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழைக்காலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை இந்த நயினார் ஏரி வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒருவரின் உடலை இந்த ஏரியின் வழியாக எடுத்து சென்றபோது மதகு அருகே ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்டார். மேலும் ஒருவர் மதகில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்டார்.
இதே நிலை நீடித்து வருவதால் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நயினார் ஏரிக்கரையை பலப்படுத்தி சுடுகாட்டிற்கு செல்லும் வகையில் பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அரியலூர்:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று காலை வெளியிட்டார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
அரியலூர் மாவட்ட பகுதியில் கன மழை பெய்ததால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் பருவ மழையை எதிர் கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்ட வருவாய்த்துறை, காவல் துறை, வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர்கள் இணைந்து குழுவாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து வாரிகள் சீர் செய்யப்படாத பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதோடு ஏரிகள் நிரம்பி உடையும், அபாய நிலையில் உள்ள ஏரி கரைகளை பலப்படுத்துவது, தண்ணீர் வெளியேறும் வழிகளை சீரமைப்பது போன்ற பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் செந்துறை அருகே உள்ள அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் உள்ள காஞ்சனா குளம் நிரம்பி தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனை அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் செந்துறை தாசில்தார் தேன்மொழி உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அதிகமாக உள்ள குளத்து தண்ணீரை வடிய செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, இதுபோன்ற நீர்வரத்து அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு சென்றார். அதேபோன்று செந்துறையை அடுத்த வாளரக்குறிச்சி கிராமத்தில் வரத்து வாய்க்கால் சீரமைக்க படாததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனை அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று வரத்து வாரியை சீரமைப்பு செய்து மழைநீரை வடிய செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேற முடியாமல் கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் ஏரி தண்ணீர் வெளியேறும் வகையில் வாரியை சீரமைத்து ஏரியில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
தொடர் மழையின் காரணமாக அரியலூர் செட்டி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது.
உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி, கச்சிபெருமாள், இடையார், தத்தனூர், கழுமங்கலம் பரணம், மணகெதி, நகல்குழி, பிலாக்குறிச்சி உள்பட கிராமங்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து பெய்த கன மழையால் முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் உடையார்பாளையம் அருகே மூர்த்தியான் கிராமத்தில் பெய்த கனமழையால் அக்கிராமத்தில் உள்ள குடிசை வீடுகளில் மழைவெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாம்பு, விஷப்பூச்சிகள் வீடுகளில் வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உய்யகொண்டான் ஏரி பெண்கள் படித்துறை பகுதிக்கு அருகே உள்ள மதகில் இருந்து அதிகப்படியான தண்ணீர் ஏரியில் இருந்து வெளியானது. இந்த மழைநீர் மற்றும் ஏரியில் இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் சாலைக்கு அருகே ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையிலுள்ள பாலம் புதைந்து கிடப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி பெருக்கெடுத்து சாலையில் சென்றது. இதனால் ஜெயங்கொண்டம்- சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேபோல சிதம்பரம் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் அய்யனார் கோவில் தெரு செல்லும் முகப்பில் உள்ள பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே உள்ள சுத்தமல்லி தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே விளாங்குடி- கா.அம்பாபூர் சாலை இடையே சுத்தமல்லி தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை கா.அம்பாபூர், காவனூர், காத்தான்குடிகாடு, புதூர், பாளையக்குடி, அய்கால், கிளிமங்கலம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இந்த தரைப்பாலம் வழியாக கொண்டு செல்லவும், கொண்டுவரவும் விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர். மேலும் காத்தான்குடிகாட்டில் உள்ள அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவ- மாணவிகளும் பஸ் வசதி இல்லாத காரணத்தால் தரைப்பாலம் வழியாக நடந்து, கல்லூரிக்கு செல்கின்றனர். விளாங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருவதற்கும் இந்த தரைப்பாலம் பயன்படுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதில் விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே உள்ள சுத்தமல்லி ஓடையில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கின்றது. இதனால் நேற்று அதிகாலை அப்பகுதி பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாலம் மழைவெள்ளம் வடியும் வரை பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தரைப்பாலத்தில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் மாணவ- மாணவிகளும் தேர்வு எழுத செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே சுத்தமல்லி தரைப்பாலம் உள்ளது என எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் விளாங்குடியிலிருந்து அண்ணாபொறியியல் கல்லூரி வரை உள்ள மின்கம்பங்களில் மின் விளக்கு பழுதால் சாலை முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த பாலத்தை கடக்கும் போது மழைபெய்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாலத்தை கடக்கும் போது மழைவெள்ளம் பொதுமக்களை அடித்து செல்லும் அபாயமும் உள்ளது என்றனர்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில், விளாங்குடியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கா.அம்பாபூர் பாதையில் சுத்தமல்லி ஓடை தரைப்பாலத்தின் அருகே மயான கொட்டகை உள்ளது. எங்கள் ஊரில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் போது கனமழை காரணமாக தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் இறந்தவரின் உடலை மழைவெள்ளம் வடியும் வரை சாலையில் வைத்து காத்திருந்து, பின்னர் தரைப்பாலத்தை கடந்து உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து விளாங்குடி- கா.அம்பாபூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சதவீதம் குறைந்து வருவதால் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்சிசுக் கொலையை ஒழிக்க வேண்டும்.
பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், பல்வேறு கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலமானது தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் ஊர்நல அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.

அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் நகை - பணத்தை திருடியது தொடர்பாக 2 பேரை காவல்துறை கைது செய்தது.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுவிட்டார். அப்போது அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து, 9 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.42 ஆயிரம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை செய்தபோது, சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 37), பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற ராஜேந்திர பிரசாத்(27) என்பதும், ராஜேந்திரன் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது அவர்கள்தான் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும் 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.