search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்தான நிலை"

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் மற்றும் கம்பி பெயர்ந்து கீழே விழுந்தது.
    • தொட்டியின் மேல்பகுதி, தூண், ஆபத்தான நிலையில் இருக்கிறது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஜெர்தலாவ் ஊராட்சியை சேர்ந்த மாக்கன் கொட்டாய் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி, தூண், மற்றும் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் நேற்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் மற்றும் கம்பி பெயர்ந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் அருகில் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் பெரும் விபத்து ஏற்படும் முன்னர், பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×