search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
    X
    வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சதவீதம் குறைந்து வருவதால் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்சிசுக் கொலையை ஒழிக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலமானது தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் ஊர்நல அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.
    Next Story
    ×