என் மலர்
அரியலூர்
செந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் வாலிபர் தலை சிதறி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் வடக்குபட்டியை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் அதியமான்(வயது 35). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மருவத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
மருவத்தூருக்கும் பொன்பரப்பி கிராமத்திற்கும் இடையே சென்றபோது, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்த ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அதியமான் தலை மற்றும் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட அப்பகுதி வழியாக சென்ற ராணுவ வீரர் ஒருவர், அந்த ஆட்டோவை மடக்கி பிடித்து, அதில் இருந்த டிரைவரிடம் போலீஸ் நிலையம் செல்லுமாறு அறிவுறித்தினார். ஆனால் ஆட்டோ டிரைவர், போலீஸ் நிலையம் செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் சிலர், குடும்ப பிரச்சினை காரணமாக திட்டமிட்டு அதியமானை கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட திரளான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதியமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடலூர் மாவட்டம் தொழுதூரை சேர்ந்த நாராயணசாமியின் மகன் பாபு(35) என்பவரது ஷேர் ஆட்டோ மோதி இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்துறை போலீசார் விடிய விடிய தேடி, ஆட்டோ டிரைவரை கைது செய்ததோடு, ஆட்டோவையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டத்தில், விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், கோர்ட்டு உத்தரவின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மகன் பாரதிராஜா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து தனது மகன் இறந்ததால், அரசு போக்குவரத்து கழகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்து 722 தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவினை நிறைவேற்றக்கோரி, மீண்டும் கோர்ட்டில் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து, விபத்தில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், கடந்த மாதம் 16-ந் தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதன்பின்னரும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
இதையடுத்து ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிமன்ற அமீனா மகாராஜன், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில், கும்பகோணத்தில் இருந்து சென்னையை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி ஜப்தி செய்து, அரியலூர் நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றார். இதற்கிடையே அந்த பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகளும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூரில் எதிர்பாராத விதமாக மெக்கானிக் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாமரைக்குளம்:
அரியலூர் தியாகி ஜெயராமன் தெருவை சேர்ந்தவர் விஜய். இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இங்கு அரியலூர் மேல தெருவை சேர்ந்த காமராஜ் மகன் சிவா (வயது 15) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய சுவிச்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக சிவா உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிவாவின் தந்தை 5 வருடங்களுக்கு முன்பு இறந்ததால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மெக்கானிக் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்று விட்டனர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் தெற்கு வண்ணாரத் தெருவில் பாலவிநாயகர் கோவிலும், நாகல்குழி செல்லும் பாதையில் உள்ள கருப்புவிநாயகர் கோவிலும் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் இந்த 2 கோவில்களிலும் இரும்பு கேட்டில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் உடைந்து கிடந்தன.
மேலும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இந்த உண்டியல்களில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் திருடு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் இந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ள மூதாட்டியிடம் மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்று நடித்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே மூதாட்டியின் மகள் வீட்டில் 13 ½ பவுன் நகை ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது. தொடர்ந்து வாரியங்கால் பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசாரும் திருட்டு ஆசாமிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்பேரில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், நகர்ப்பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா? என்றும், பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளி பின்பற்றாத மற்றும் முககவசம் அணியாத கடைக்காரர்களிடம் தலா ரூ.500 வீதமும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாத தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் 15 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத், பீட்டர், காளமுத்து மற்றும் குழுவினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூரில் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
அரியலூர்:
அரியலூர் நகரில் உள்ள செட்டி ஏரி, சித்தேரி, அய்யப்ப நாயக்கன் ஏரி ஆகியவற்றுக்கு மழைநீர் வரும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. நீர் ஆதார வாய்க்கால், ஏரிக்கரைகள், வாய்க்கால் கரைகளில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, அப்படி செய்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரியலூரில் மழைநீர் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
செட்டி ஏரிக்கு நீர் வரும் வாய்க்காலின் கரையிலும், ஒரு இடத்தில் வாய்க்காலில் சுவர் எழுப்பியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால் கரையை ஒட்டியுள்ள வீடுகளின் பின்புறத்தில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வீடுகளின் வாசல் பகுதியில் சாலை போடப்படவில்லை.
அரியலூரில் ஜெயங்கொண்டம் சாலையில் மின் நகர் உருவானபோது ஆயிகுட்டையில் இருந்து வெளியேறும் நீர் செல்லும் பாதையை மூடி சாலை போட்டுள்ளனர். அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. மின் நகர் செல்லும் சாலையில் பாலம் கட்டப்படவில்லை. தற்போது மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
ஆக்கிரமிப்புகள் காரணமாக மழை பெய்யும் காலங்களில் மழை நீரை முறையாக நீர்நிலைகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 51 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்து பக்தர்களால் அன்னாபிஷேகம் தொடக்கப்பட்டு நடைபெற்று வந்தது. அன்னாபிஷேக பூஜைகள் தொடங்குவதற்கு முன்பு, கணக்க விநாயகருக்கு அபிஷேகம் முடித்த பின்னரே, அதற்கான பணிகள் தொடங்கப்படுவது வழக்கம்.
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நூறு மூட்டை பச்சரிசியை கோவில் வளாகத்திலேயே சமைத்து, அதனை 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு சாத்தப்பட்டு, மாலை 6.45 மணியளவில் 5 அடுக்கு தீபங்கள் காட்டப்படும். பின்னர் இரவு 8 மணிக்கு மேல் லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று நடக்க இருந்த 36-வது அன்னாபிஷேகத்திற்கு, கொரோனா அச்சம் காரணமாக அரசு தடைவிதித்தது. இதையடுத்து அன்னாபிஷேகத்திற்கு பதிலாக சிவலிங்கத்திற்கு நேற்று அன்னக்காப்பு (அன்ன அலங்காரம்) அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை கணக்க விநாயகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு சந்தனம், மஞ்சள், திருநீர், தேன், பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து லிங்கம் அலங்கரிக்கப்பட்டு 5 அடுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் 51 கிலோ பச்சரிசி கொண்டு குழைவாக சமைக்கப்பட்ட அன்னம் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டு, மாலை 6.45 மணியளவில் ஐந்து அடுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கங்கைகொண்ட சோழபுரம் பகுதி பக்தர்களின்றி வெறுச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
அரியலூர்:
அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மகளிர் அணி மாரியம்மாள், சுப.சோமு, கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய கோரி இந்த போராட்டம் நடந்தது. முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், மகாத்மா காந்தி கையில் ராமபிரான் இருந்தபோது ஒற்றுமையும், அமைதியும், வளர்ச்சியும் இருந்தது. அதே ராமபிரான் பா.ஜ.க.வின் அத்வானி கையில் சென்றவுடன் மக்களிடம் பிளவும், கலவரமும், வன்முறையும் ஏற்பட்டது. கடவுள் யார் கையில் உள்ளார் என்பதை பொருத்தே நல்ல செயல்களும், தவறான செயல்களும் நடைபெறுகிறது. தற்போது பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரை தேவையற்றது. மதத்துவேசத்தை ஏற்படுத்தவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் வளர்ச்சிக்காக ஏர் கலப்பை யாத்திரை நடத்த உள்ளது.
கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா? என்ற கேட்கிறீர்கள். தமிழகத்தில் அரசியல் சித்தாந்தத்தை வைத்தே அரசியல் கட்சிகள் உருவாகும். நடிகர்களால் கட்சிகள் தோன்றுவதோ, மூன்றாவது அணி அமைவதற்கோ சாத்தியமில்லை. அது அணியாக இருக்காது, பினியாக மாறிவிடும். கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயத்தில் முன்னேறாத தமிழகத்திற்கு சிறந்த மாநிலங்களில் இரண்டாவது இடம் என்பது, இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு பொய்யுரையை கூறியுள்ளனர். தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணியான தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, வலுவான கூட்டணி. அது வரும் தேர்தலிலும் தொடரும், என்றார்.
ஜெயங்கொண்டம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நகர்ப்பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா? என்றும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வீட்டில் இருந்து வெளியில் வருகின்றனரா? என்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைவீதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1,200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முக கவசம் அணியாதது தொடர்பாக 12 கடைக்காரர்களிடம் தலா ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரமும், சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாதது தொடர்பாக வணிக நிறுவனம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.12 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத், பீட்டர் மற்றும் குழுவினர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
விக்கிரமங்கலம் அருகே இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் காஞ்சி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 43). அதே பகுதியை சேர்ந்தவர் தங்கமணி(47). ஊராட்சி மன்ற உறுப்பினராக சங்கர் இருந்து வருகிறார். காஞ்சி கொட்டாய் கிராம மக்களுக்கு குடிநீர் தொட்டி அமைப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து சுத்தம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த தங்கமணி, அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்கக்கூடாது என்றும் தடுத்துள்ளார்.
அப்போது சங்கருக்கும், தங்கமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில், சங்கர் கொடுத்த புகாரின்பேரில் தங்கமணி மீதும், தங்கமணி கொடுத்த புகாரின்பேரில் சங்கர் மற்றும் அவருடைய நண்பர் ஆதிமூலம்(40) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சங்கர்(வயது 50) என்பவர், வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.