என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா?, சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனரா? வணிக நிறுவனங்களில் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றுகிறார்களா? என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 6 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.1,200-ம், சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு ஒரு கடைக்கு ரூ.500 வீதம் 7 கடைகளுக்கு ரூ.3,500-ம் என மொத்தம் ரூ.4,700 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் பழனிராஜன்(வயது 30). டிரைவர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாகவும், டாக்டர்களிடம் காண்பித்தும் வலி சரியாகவில்லை என்றும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பழனிராஜன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கினார்.
அவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிராஜன் நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பழனிராஜனின் மனைவி துர்காதேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக கவசம் அணியாமல் கடைகளில் இருந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் குழந்தைவேல் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் விளந்தை, கவரப்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் முக கவசம் அணிந்துள்ளார்களா?, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது முக கவசம் அணியாமல் கடைகளில் இருந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்கள் என மொத்தம் 9 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.1,800 வசூல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், விழாக்காலங்களில் அதிக கும்பல் கூடுவதால் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றனர்.
மேலும் ஆண்டிமடம் கடைவீதியில் வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள், தீபாவளியை முன்னிட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணியாளர்கள் முக கவசம் அணியாதவர்களை அழைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து, முக கவசம் அணிவது குறித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒலிபெருக்கி மூலம் முக கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அரியலூர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அரசு பல்துறை வளாகத்திற்கு பின்புறம் தோட்டக்கலைத்துறை மாவட்ட இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலக கதவுகளை மூடிவிட்டு தீவிர சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, வானதி ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அன்பு ராஜனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பாரதிதாசன், பெண் உதவியாளர் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.19 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் கீழப்பழுவூரில் உள்ள தோட்டக்கலை பண்ணை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பண்ணை கேட் பூட்டப்பட்டிருந்ததால் சோதனைக்கு வந்த பெண் போலீசார் சுற்று சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலக குடோனில் மூட்டைகளுக்கிடையில் பணம் வைக்கப்பட்டுள்ளதா? என மூட்டைகளை பிரித்து சோதனை நடத்தினர். அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பணியாற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் ரவிசங்கர் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.44 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அன்பு ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் 4 பேரிடமும் சேர்ந்து மொத்தமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூறிய 3 இடங்களிலும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரில் வாகனங்களால் ஏற்படும் விபத்து இறப்பை தடுத்து நிறுத்த மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் முடிவெடுத்து கடந்த மாதம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் அவர்களை அழைத்து தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைத்துத் தருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போராட்ட அறிவிப்பை ரத்து செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூறிய 3 இடங்களிலும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு மற்றும் ஜல் ஜீவன் மற்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படவில்லை. ஊராட்சி செயலாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், ஒன்றிய பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாகவும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்சாமி, செல்வம், கஸ்தூரி, முத்துலட்சுமி, அருள்மேரி, பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முடிவில் இணை செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள காஞ்சலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 26). கூலித்தொழிலாளியான இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் பூம்புகாரில் தங்கி கிடைத்த வேலைக்கு சென்று வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன், தான் போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை செய்வதாக ஊரில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். தற்போது விடுப்பில் சொந்த ஊர் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வி.கைகாட்டி 4 ரோடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் பாலமுருகன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த விக்கிரமங்கலம் போலீசார், சந்தேகத்தின் பேரில் பாலமுருகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரிடம், பாலமுருகன் தான் உதவி கமிஷனராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் அவரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
பின்னர் போலீசார் துருவித்துருவி கேள்விகள் கேட்டபோது, தான் போலீஸ் அதிகாரி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது சொந்த ஊரில் தனக்கு ஒரு சில எதிரிகள் இருப்பதாகவும், அவர்களை பயமுறுத்துவதற்காகவே போலீஸ் அதிகாரி என்று கூறி, போலீஸ் உடை அணிந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சட்ட விரோதமாக போலீஸ் அதிகாரியின் உடையணிந்ததற்காக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் அதிக ஆழமாக மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே உள்ள பெரிய ஏரியில், விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இந்த நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பெரிய ஏரியில் மண் வெட்டப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஏரியில் சுமார் ஒரு மீட்டர் ஆழம் வரை மண் எடுத்தால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். ஆனால் இந்த ஏரியில் சுமார் 20 அடிக்கும் மேலாக ஆழமாக வெட்டப்பட்டு, சாலை அமைக்கும் பணிக்காக மண் எடுத்து செல்லப்படுகிறது.
நெடுஞ்சாலை ஓரத்தில் இவ்வளவு ஆழமாக மண் எடுக்கப்படுவதால், ஏரியில் தண்ணீர் இருக்கும்போது வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆழம் தெரியாமல் விழுந்தால் காப்பாற்ற முடியாது. மேலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடமுடியாத சூழ்நிலையும் உள்ளது.
மேலும் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள பொன்னேரி, சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயன்பாட்டிற்காக போர் கைதிகளை கொண்டு ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட ஏரியாகும். இந்த ஏரி தற்போது தூர்ந்து போய் உள்ளது. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக பொன்னேரியில் சுமார் ஒரு மீட்டர் ஆழம் வரை மண் எடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும். பொன்னேரியை ஒரு மீட்டர் வரை ஆழப்படுத்தினால், விவசாயத்திற்கும், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும் அமையும்.
எனவே சாலை விரிவாக்க பணிக்காக பெரிய ஏரியில் மண் எடுக்காமல், பொன்னேரியில் இருந்து மண் எடுக்க வேண்டும் என்றும், ஏரியில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேலாக மண் எடுக்கக்கூடாது என்றும், பெரிய ஏரியில் அதிக ஆழமாக மண் எடுப்பதை தடுக்க வேண்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி நேரில் ஆய்வு செய்து மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அவசியம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் மூக்கு மற்றும் வாயை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் இடங்களை சுத்தமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும், என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மேனகா தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ராஜ், பிரவீன்குமார், செல்வகாந்தி மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் தாசில்தார் கலைவாணன், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் பொன்பகவதிராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உடையார்பாளையம் அருகே பருக்கல் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து சென்றனர். அப்போது அறங்கோட்டை கொள்ளிட கரையோரத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி, பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் கடத்தி வந்தவர்கள் தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(வயது 47), முனியதிரையான்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(46), அறங்கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(44) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருதையாற்றங்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி கிராமத்தில் மருதையாற்றங்கரையில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களே ஒன்றிணைந்து நேற்று அதிகாலை மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட்டு 2 லாரிகளை சிறை பிடித்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் லாரியை விட்டு விட்டு அதன் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கும், தாசில்தார் மற்றும் கோட்டாட்சியருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் கீழப்பழுவூர் போலீசாரிடம் லாரிகளை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமானூர் அருகே வயலில் வேலை செய்த விவசாயி, மின்னல் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 63). விவசாயியான இவர், நேற்று மாலை ஆலம்பாடிமேட்டுத்தெரு செல்லும் சாலையில் உள்ள தனது வயலில் சம்பாநெல் சாகுபடிக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தங்கபாண்டியன் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.