என் மலர்
செய்திகள்

வேகத்தடைகள் அமைப்பு
திருமானூரில் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைப்பு
திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூறிய 3 இடங்களிலும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரில் வாகனங்களால் ஏற்படும் விபத்து இறப்பை தடுத்து நிறுத்த மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் முடிவெடுத்து கடந்த மாதம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் அவர்களை அழைத்து தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைத்துத் தருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போராட்ட அறிவிப்பை ரத்து செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூறிய 3 இடங்களிலும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Next Story






