search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு
    X
    கொரோனா விழிப்புணர்வு

    கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அவசியம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் மூக்கு மற்றும் வாயை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் இடங்களை சுத்தமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும், என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மேனகா தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ராஜ், பிரவீன்குமார், செல்வகாந்தி மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×