search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் எடுக்கப்படும் மண் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X
    மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் எடுக்கப்படும் மண் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் எடுக்கப்படும் மண் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் அதிக ஆழமாக மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே உள்ள பெரிய ஏரியில், விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இந்த நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பெரிய ஏரியில் மண் வெட்டப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஏரியில் சுமார் ஒரு மீட்டர் ஆழம் வரை மண் எடுத்தால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். ஆனால் இந்த ஏரியில் சுமார் 20 அடிக்கும் மேலாக ஆழமாக வெட்டப்பட்டு, சாலை அமைக்கும் பணிக்காக மண் எடுத்து செல்லப்படுகிறது.

    நெடுஞ்சாலை ஓரத்தில் இவ்வளவு ஆழமாக மண் எடுக்கப்படுவதால், ஏரியில் தண்ணீர் இருக்கும்போது வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆழம் தெரியாமல் விழுந்தால் காப்பாற்ற முடியாது. மேலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடமுடியாத சூழ்நிலையும் உள்ளது.

    மேலும் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள பொன்னேரி, சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயன்பாட்டிற்காக போர் கைதிகளை கொண்டு ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட ஏரியாகும். இந்த ஏரி தற்போது தூர்ந்து போய் உள்ளது. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக பொன்னேரியில் சுமார் ஒரு மீட்டர் ஆழம் வரை மண் எடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும். பொன்னேரியை ஒரு மீட்டர் வரை ஆழப்படுத்தினால், விவசாயத்திற்கும், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும் அமையும்.

    எனவே சாலை விரிவாக்க பணிக்காக பெரிய ஏரியில் மண் எடுக்காமல், பொன்னேரியில் இருந்து மண் எடுக்க வேண்டும் என்றும், ஏரியில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேலாக மண் எடுக்கக்கூடாது என்றும், பெரிய ஏரியில் அதிக ஆழமாக மண் எடுப்பதை தடுக்க வேண்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி நேரில் ஆய்வு செய்து மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×