search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் செட்டி ஏரி வரத்து வாய்க்கால், மின் நகரில் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி
    X
    அரியலூர் செட்டி ஏரி வரத்து வாய்க்கால், மின் நகரில் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி

    அரியலூரில் ஆக்கிரமிப்பில் வரத்து வாய்க்கால்கள்

    அரியலூரில் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
    அரியலூர்:

    அரியலூர் நகரில் உள்ள செட்டி ஏரி, சித்தேரி, அய்யப்ப நாயக்கன் ஏரி ஆகியவற்றுக்கு மழைநீர் வரும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. நீர் ஆதார வாய்க்கால், ஏரிக்கரைகள், வாய்க்கால் கரைகளில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, அப்படி செய்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரியலூரில் மழைநீர் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

    செட்டி ஏரிக்கு நீர் வரும் வாய்க்காலின் கரையிலும், ஒரு இடத்தில் வாய்க்காலில் சுவர் எழுப்பியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால் கரையை ஒட்டியுள்ள வீடுகளின் பின்புறத்தில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வீடுகளின் வாசல் பகுதியில் சாலை போடப்படவில்லை.

    அரியலூரில் ஜெயங்கொண்டம் சாலையில் மின் நகர் உருவானபோது ஆயிகுட்டையில் இருந்து வெளியேறும் நீர் செல்லும் பாதையை மூடி சாலை போட்டுள்ளனர். அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. மின் நகர் செல்லும் சாலையில் பாலம் கட்டப்படவில்லை. தற்போது மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

    ஆக்கிரமிப்புகள் காரணமாக மழை பெய்யும் காலங்களில் மழை நீரை முறையாக நீர்நிலைகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×