என் மலர்
தெலுங்கானா
- அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
- போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்கள் தற்போது அதிகளவில் மருதாணி கூம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் நடக்கும் விசேஷங்கள் முதல் விழா காலங்களில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவராலும் தவிர்க்க முடியாததாக மருதாணி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.
அந்த காலத்தில் வீட்டில் மருதாணி இலையை அரைத்து மருதாணி வைத்து அலங்கரித்தனர்.
ஆனால் தற்போது மருதாணி கூம்புகள் அறிமுகமான பிறகு விதவிதமான வகைகளில் மருதாணி கைகளில் வைக்கப்படுகிறது.600-க்கும் மேற்பட்ட மருதாணி வடிவமைப்புகள் கண்டு பிடிக்க ப்பட்டுள்ளன.
போலியான மருதாணி கூம்பு களால் உடல்ந லத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.***திருப்பதி, ஜன.11-
மருதாணி( மெஹந்தி)கோன் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. உண்மையான மருதாணி இலையை அரைத்து மட்டுமே இந்த மருதாணி கோன் உற்பத்தி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் அதனை மீறி தெலுங்கானா மாநிலத்தில் மெஹந்தி நிறுவனம் ஒன்று போலியாக மருதாணி கோன்களை தயாரித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டினத்தில் உள்ள ஒரு மருதாணி கூம்பு தயாரி க்கும் தொழிற்சாலையில் போலியாக மருதாணி கூம்புகள் தயாரிப்பதாக தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த மருதாணி கூம்புகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி போலியாக தயாரிப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டு பிடிக்க பட்டது.
அந்த நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மருதாணி கூம்புகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில்
அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
இது போன்ற அழகு சாதன பொருட்களில் பொது சுகாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.
இந்த அமிலம் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்து வத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மருதாணி கையில் வைப்பதால் சாப்பிடும் போது உணவில் கலந்து உடலில் கலந்து விடும்.இது உடல் நலத்தை பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வந்து கொண்டிருந்த சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த விரைவு ரெயில் தடம் புரண்ட விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Telangana: Five people were injured after three coaches of Charminar Express derailed at the Nampally Railway Station
— ANI (@ANI) January 10, 2024
The incident took place at around 9:15 AM. This Railway station is a terminal station where trains end. The train should have stopped before the end,… pic.twitter.com/mzlV82OLAu
தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெயில் விபத்து காரணமாக ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.
தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அங்கு சோனியா காந்தி அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
மேலும் சோனியா காந்தி தனி தெலுங்கானா உருவாக முக்கிய பங்காற்றியதாகவும் அந்த மாநிலத்தில் பிரசாரம் செய்தனர். இதனால் சோனியா காந்திக்கு தெலுங்கானா மாநிலத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே பாணியில் சோனியா காந்தி நல்கொண்டா மற்றும் கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அவர் ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.
இந்த கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்தால் பிரியங்கா காந்தியை தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வலியுறுத்துவோம் என தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
- அயோத்தி ராம் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
- அன்றைய தினம் கர்நாடக மாநில கோவில்களில் சிறப்புபூஜைக்கு ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்படும் என மந்திரி அறிவிப்பு.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி வருகிற 22-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்படும் என தெலுங்கானா மாநில மந்திரி ராமலிங்கா ரெட்டி அறிவித்திருந்தார்.

இதுகுறித்து பா.ஜனதா தலைவர் சி.டி. ரவி கூறுகையில் "இந்த முடிவு சிறந்தது. நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் சிறந்த முடிவை எடுத்துள்ளனர். பல ஆண்டுகள் கழித்து காங்கிரஸ்க்கு ஞானம் உதித்துள்ளது. கடவுள் ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர். காங்கிரஸ் ராமரை விட்டுவிட்டது. தற்போது அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இது நல்லது, நாட்டிற்குள் நல்லது" என்றார்.
- புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.
- ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன்.
ஐதராபாத்:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அயோத்தி மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ராமர் பக்தர் ஒருவர், அயோத்தி ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை சுமந்தபடி அயோத்திக்கு நடந்தே செல்கிறார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஐதராபாத்தை சேர்ந்தவர் சல்லா சீனிவாச சாஸ்திரி (வயது 64). தீவிர ராமர் பக்தரான இவர், அயோத்தியில் உள்ள சாமி ராமருக்காக ரூ.65 லட்சம் மதிப்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை கொண்டு செல்ல முடிவு செய்தார்.
மேலும் அதனை தனது தலையில் சுமந்தபடி, ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சுமார் 8 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புனித நடை பயணமாக செல்ல திட்டமிட்டார்.இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார்.
அவர் தனது பயணத்தின் இடையே லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் சீனிவாச சாஸ்திரி, தனது பயணத்தை சில நாட்கள் ஒத்தி வைத்து இருந்தார்.
பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடம் என்னும் இடத்தில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். இந்த இடத்தில் இருந்து அயோத்தி நகரம் சுமார் 272 கி.மீ. தொலைவில் உள்ளது.
இன்னும் 10 நாட்களில் அவர் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பதால் தினமும் 30 கி.மீ. நடக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுபற்றி சீனிவாச சாஸ்திரி கூறுகையில், 'ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான எனது தந்தை, அயோத்தியில் நடந்த கர சேவையில் கலந்துகொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். இப்போது எனது தந்தை இல்லை. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், பகவான் ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்தபடி புனிதப்பயணமாக வந்துள்ளேன்.
இன்னும் சில தினங்களில் அயோத்தியை சென்று அடைவேன். அங்கு இந்த புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.
ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன். தற்போது சிலரின் நன்கொடை உதவியுடன் இந்த புனித காலணிகளை செய்துள்ளேன். எனது மகன் சல்லா பவன் குமார். சவுண்ட் என்ஜினீயரான அவர் பல திரைப்பட ஸ்டூடியோக்களில் பணிபுரிந்துள்ளார் என்றார்.
- அங்கிருந்தவர்கள் உடனடியாக ரேணு ஸ்ரீயை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் குக்கட்பல்லி எல்லம்பண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஸ்ரீ (வயது18 ). இவர் ஐதராபாத் அடுத்த ருத்ராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 5-வது மாடியில் சுற்றுச்சுவரின் வெளிப்புறமாக அமர்ந்தார்.
மேலும் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த மாணவர்கள் அவர் அமர்ந்திருப்பதை கண்டு மாடியில் இருந்து கீழே இறங்குமாறு கத்தினர். இதையடுத்து சுவரிலிருந்து கீழே இறக்குவதற்காக அவளை நோக்கி மாணவர்கள் ஓடினர்.
மேலும் சிலர் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். ஆனால் திடீரெனசெல்போனை சுவரில் வைத்துவிட்டு மாணவி கீழே குதித்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக ரேணு ஸ்ரீயை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலே மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர்.
கட்டிடத்தில் இருந்து குதிக்கும் முன்பு யாருக்காவது போன் செய்தாரா? அல்லது மெசேஜ் அனுப்பினாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்த செல்போனை கைப்பற்றினர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. இது நெஞ்சை பதற வைக்கிறது.
- ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் பஸ்களில் செல்ல தொடங்கி விட்டனர்.
- ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்கவில்லை எனவும் குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கான இலவச திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆண்களுக்கு தனியாக பஸ்களை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்குப் பின் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் பஸ்களில் செல்ல தொடங்கி விட்டனர்.
எனவே, தங்கள் வாழ்வாதாரமே அடிபட்டு போனதாக ஆட்டோ டிரைவர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பையும் போராட்டத்தையும் அவர்கள் காட்டத் தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பஸ்களுக்குள் ஏறிய ஆட்டோ டிரைவர்கள் அதில் இருந்த பயணிகளிடம் பாத்திரங்கள் ஏந்தியும் கை நீட்டியும் பிச்சை கேட்டு போராட்டம் செய்தனர்.
ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்கவில்லை எனவும் குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே ஆட்டோ டிரைவர்கள் பஸ்சில் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- ஆந்திர முதல் மந்திரியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
- அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
ஐதராபாத்:
ஒய்.எஸ்.ஆர்.டி.பி. தலைவரும், ஆந்திர முதல் மந்திரியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஷர்மிளா ஜியோ அல்லது வேறு யாரோ அதைச் செய்ய முடியாது.
யாரேனும் பிரதமராக வேண்டும் என்றால் அதை மக்கள் செய்ய வேண்டும். ராகுல் காந்தியின் பார்முலா தோல்வி. ராகுல் காந்தியின் சித்தாந்தம் தோல்வி. அவரது பார்முலா அடிப்படையில் தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்தார்.
- பண்ணை வீட்டில் கீழே விழுந்த கேசிஆருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது
- ஜெகன் மோகன் ரெட்டியை கேசிஆர் இல்லத்தில் கேடிஆர் வரவேற்றார்
கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (KCR) தோல்வியடைந்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே 69 வயதான கேசிஆர், ஐதராபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் பிரபல யசோதா மருத்துவமனைக்கு (Yashoda Hospital) மாற்றப்பட்டார்.
அங்கு பல்வேறு பரிசோதனைகளில் கேசிஆருக்கு இடுப்பெலும்பில் முறிவு இருப்பதாக கண்டறியப்பட்டு முழு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பின் நடை பயிற்சி மேற்கொண்ட அவருக்கு வலி வெகுவாக குறைந்து அனைத்து துறை மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருந்தார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கேசிஆர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டிலேயே ஓய்வெடுக்கிறார்.
இந்நிலையில், ஓய்வில் உள்ள கேசிஆர்-ஐ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவரது பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) இல்லத்தில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
முன்னதாக முதல்வர் ஜெகன் மோகனை பிஆர்எஸ் கட்சியின் தற்போதைய தலைவர் கேடி ராமா ராவ், எம்பி ஜே சந்தோஷ் ராவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
விஜயவாடாவிற்கு திரும்பும் முன், கேசிஆர் இல்லத்தில் ஜெகன் மோகன் உணவருந்த உள்ளார் என தெரிகிறது.
- ஐதராபாத்தில் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவே மது விற்பனை களைகட்ட தொடங்கியது.
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5.5 லட்சம் பெட்டி ஹாட் வகைகள் மற்றும் 7 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிக முக்கியமானதாக மது விருந்து இடம் பிடித்தது.
இதற்காக முன்கூட்டியே தெலுங்கானா மாநில மதுபானங்கள் துறையினர் கடைகளுக்கு தேவையான பீர் மற்றும் ஹாட் வகைகளை அனுப்பி வைத்தனர். குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் மது பாட்டில்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
மேலும் மதுபான கடைகள் 31-ந் தேதி நள்ளிரவு வரை திறக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக மதுக்கடைகளும் திறந்தனர்.
ஐதராபாத்தில் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவே மது விற்பனை களைகட்ட தொடங்கியது. இதே போல தெலுங்கானா மாநிலத்தின் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் மது விற்பனையானது. குடிமகன்கள் போட்டி போட்டு மது வாங்கிச் சென்று உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5.5 லட்சம் பெட்டி ஹாட் வகைகள் மற்றும் 7 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. மொத்தமாக ரூ.758 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
- கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.
- பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
அதில் பிரியாணி சாப்பிட்டால் மாபெரும் பரிசு காத்திருக்கிறது என தெரிவித்தனர்.
அதன்படி பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் ஒன்றை வழங்கினர்.
இதன் அடிப்படையில் ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.
இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.
அதில் திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் கார் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு காரை பரிசாக வழங்கினர். பிரியாணி சாப்பிட்டதற்கு கார் பரிசா! என்ற ஆச்சரித்துடன் அவரும் பெற்று சென்றார்.
பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பைக் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- வித்தியாசமான முறையில் உணவு வினியோகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல், டீசல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்பி செல்கின்றனர். இதனால் பைக் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவன உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் தனது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்தார்.
தனியார் நிறுவன ஊழியர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்வதை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
வித்தியாசமான முறையில் உணவு வினியோகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
A food-deliver agent rides a horse to deliver the order amid fears of fuel shortage and huge rush at fuel stations on Tuesday, December 2.
— The Siasat Daily (@TheSiasatDaily) January 2, 2024
The video was captured in Chanchalguda, Hyderabad.
There was a huge rush at petrol stations across the country amid fears of fuel shortage… pic.twitter.com/X0KvWIKODJ






