என் மலர்
உள்ளூர் செய்திகள்
- செஞ்சி கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.
- செஞ்சி கோட்டை சத்ரபதி சிவாஜியால், ‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என்று பாராட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை திகழ்கிறது. சோழர் காலத்தில், 'சிங்கபுரி' என்றழைக்கப்பட்டது செஞ்சி. இதுவே திரிந்து செஞ்சி என்று ஆனது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் ஆனந்தகோன் என்ற குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13ம் நூற்றாண்டில் நிறுவினார். அதைத் தொடர்ந்து 13ம் நூற்றாண்டிலேயே கோன் சமூக ராஜவம்சத்தால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. ஆனந்த கோன் எனும் அரசரால் கட்டப்பட்டு, பின்னர் கிருஷ்ண கோன் எனும் அரசரால் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கோட்டை மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டு, மிகப்பெரிய அரணாக விளங்கியது. செஞ்சி கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.
செஞ்சி கோட்டை சத்ரபதி சிவாஜியால், 'இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை' என்று பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை, 'கிழக்கின் ட்ராய்' என்று அழைத்தனர்.
1921ம் ஆண்டு, இது முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
இந்த நிலையில் உலக புராதன சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக புராதன சின்னங்களில் செஞ்சிகோட்டை இடம் பெற்றது.
- தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
- அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
- 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.
இந்த தேர்வு எழுத நுழைவுச்சீட்டு, கருமை நிறப் பேனா, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தேர்வாணையம், அதன் பிறகு வரும் தேர்வர்களை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
- எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது.
- தற்போது எனது கனவுப் படமாக வேள்பாரி உள்ளது.
சென்னை:
விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகை ரோகிணி, இயக்குனர் ஷங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:
எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது. தற்போது எனது கனவுப் படம் வேள்பாரி.
நிச்சயம் இது உலகம் போற்றும் தமிழ் படைப்பாக வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
கனவு மெய்ப்படும் என நம்புகிறேன்.
புது புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது வேள்பாரி.
கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக் கூடிய அறிவுப்பூர்வமான, ஜனரஞ்சகமான காவியமா, ஒரு பெருமை மிக்க இந்திய, தமிழ் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது என தெரிவித்தார்.
- வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது.
- சென்னையில் நடந்த விழாவில் வேள்பாரி ஒரு லட்சம் வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.
சென்னை:
விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும்.
கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியில் ஓல்டு ஸ்டூடண்ஸ் குறித்துப் பேசினேன். அரங்கத்துல இருக்குற எல்லாரும் சிரிச்சதால நான் பேசணும்னு நினைச்சதை மறந்துட்டேன்.
இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரொச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.
விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை.
சிவக்குமாரும் கமல்ஹாசனும் சிறந்த அறிவாளிகள்... ஆனா, என்னை ஏன் கூப்பிட்டாங்க? இந்த 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்ன ஏன்பா விழாவுக்கு கூப்டீங்க?
வேள்பாரி புத்தகத்தை நான் இன்னும் முழுசா படிக்கல. வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என காத்திருக்கிறேன்.
ஓய்வுக் காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க விருப்பம் உள்ளது. அதற்காக வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்துள்ளேன்.
எல்லோரும் காத்திருப்பது போல நானும் வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு லேசான மழை பெய்தது.
- மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது;
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு லேசான மழை பெய்தது.
சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் காலையில் வாட்டிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
- தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பலவற்றை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வானூர் அருகே திருச்சிற்றம்பலம் 4 முனை சந்திப்பில் பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக ஸ்டாலின் ஏமாற்றினர். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படாதால் மாணவர்கள் உயிர்நீத்தது தான் மிச்சம்.
பொய் பேசி ஓட்டு பெற்று ஏமாற்றும் கட்சி தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் தி.மு.க. குடும்பத்தில் இருப்பவர்தான் பொறுப்புக்கு வர முடியும். தி.மு.க.வில் நடப்பது மன்னர் ஆட்சியா? குடும்பத்தில் இருப்பவர்தான் வர வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக சட்டசபை தேர்தல் இருக்கும்.
விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஓடோடி வந்து பார்த்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை
அ.தி.மு.க. கொடுத்த அழுத்தத்தால் ஆட்சிக்கு வந்து 25 மாதத்துக்கு பிறகுதான் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்கள். தேர்தல் வரை மட்டுமே மகளிர் உரிமைத்தொகையை தருவார்கள்.
தி.மு.க.வின் ரூ.1,000 உரிமைத்தொகையை நம்பி நாங்கள் தரவிருந்த ரூ.1,500-ஐ தவறவிட்டீர்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் தந்தது அ.தி.மு.க.தான். கல்விக்கு முக்கியத்துவம் தராதது தி.மு.க. என தெரிவித்தார்.
- தேர்வு எழுதும் மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பாக சென்று விட வேண்டும்.
- 9 மணிக்குப் பிறகு செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 07/2025 நாள் 25.04 2025-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு நாளை முற்பகல் நடைபெற உள்ளது.
இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.
இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4.922 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது நாளை முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பிடித்ததற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு.
- இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானையாகும். அக்கட்சியின் கொடியில் யானை சின்னம் உள்ளது. தமிழகத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். த.வெ.க. கட்சியின் கொடியில் இரண்டு யானைகள் உள்ளது. த.வெ.க. கொடியில் யானை இடம் பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கில், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தனது இடைக்கால மனுவை பகுஜன் சமாஜ் கட்சி திரும்பப் பெற்றது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக அக்கட்சி தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருவேளை கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், அது புதிதாக கட்சி தொடங்கியுள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு சாதகமாகும் என்பதால் பகுஜன் சமாஜ் கட்சி இம்முடிவை எடுத்துள்ளது. பிரதான வழக்கில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் சேர்க்க மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
- தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும்.
- பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜையை ஒட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர்கள் 268 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரவப்படுத்தி வருகிறார்.
தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவில் கவுரவம் செய்யவே இங்கு வருகை தந்தேன்.
பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல. அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம்.
அறநிலையத்துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோவிலுக்கு செல்கிறார். மாநில முதலமைச்சர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது. அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக செயல்படுபவர் கவர்னர் தான்.
நான் 4 மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இது போன்ற எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்பட வில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
கேரளா அரசு தொடர்ந்து வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அதற்கான தீர்ப்பை வழங்கி உள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர். மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதலமைச்சருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?. பிரதமருக்கு முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் எதேச்சதிகாரமாக அவர் செயல்பட முடியுமா?. மாணவர்கள் வன்முறைக்குள் செல்லக்கூடாது.
ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம் பாடியில் நிலஅளவையாளராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் நிலம் அளவீடு செய்ய இன்று மதியம் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 1ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
- 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 1ஆம் தேதி தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிமன்றம் அவர்களுக்கு 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆஜர்படுத்த ராமேஸ்வரம் மீனவர்களின் நீதிமன்ற காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.






