என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
- தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர்.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.
இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.
நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- 48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை வாக்குப்பெட்டிகள் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கு வாக்குபெட்டிகள் கொண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டுப்பாடு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும்.
பூத் சிலிப் வாங்கியவர்களுக்கு பெயர் விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.
2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பூமாரியின் புகைப்படம், கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தது.
- பெயர் மாறி இருப்பதால் பூமாரி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
தேனி:
தேனி பங்களாபட்டியை சேர்ந்த இளங்கோவன் மனைவி பூமாரி (வயது 53). இவர் தனது குடும்பத்தினருடன் தேனி எடமால் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று வாக்கு செலுத்த வந்தார். தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.
அப்போது அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது. பின்னர், அவர் தனது வாக்காளர் அட்டையை காண்பித்து, கடந்த தேர்தலில் வாக்களித்தேன் என்றார். பின்னர் வாக்காளர் பட்டியலில் தேடிப் பார்த்தபோது அவருடைய வாக்காளர் விவரத்தில், அவருடைய பெயருக்கு பதில் சிவக்குமார் என்று ஆணின் பெயர் இருந்தது.
ஆனால், அதில் பூமாரியின் புகைப்படம், கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தது. பெயர் மட்டும் மாறி இருந்ததால் அவர் தனது வாக்கை பதிவு செய்ய அனுமதி கேட்டு முறையிட்டார். பெயர் மாறி இருப்பதால் அவர் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அவர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- துருப்பிடிக்காத உற்சாகம் தகர்க்க முடியாத தர்க்கம்
- சொல்லியடித்த புள்ளிவிவரம் சோர்ந்துவிடாத உடல்மொழி
சென்னை:
கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்கள் வெள்ளம்
மணியான பேச்சு
துருப்பிடிக்காத உற்சாகம்
தகர்க்க முடியாத தர்க்கம்
சொல்லியடித்த புள்ளிவிவரம்
சோர்ந்துவிடாத உடல்மொழி
தற்புகழ் கழிந்த உரை
தமிழர்மீது அக்கறை
இந்தத் தேர்தல் களத்தின்
ஆட்ட நாயகன்
முதலமைச்சர்தான்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின்தான்
ஒரு பூங்கொத்து
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் வெள்ளம்
— வைரமுத்து (@Vairamuthu) April 20, 2024
மணியான பேச்சு
துருப்பிடிக்காத உற்சாகம்
தகர்க்க முடியாத தர்க்கம்
சொல்லியடித்த புள்ளிவிவரம்
சோர்ந்துவிடாத உடல்மொழி
தற்புகழ் கழிந்த உரை
தமிழர்மீது அக்கறை
இந்தத் தேர்தல் களத்தின்
ஆட்ட நாயகன்
முதலமைச்சர்தான்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின்தான்
ஒரு பூங்கொத்து pic.twitter.com/DzK4mDLRMm
- நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம்.
- வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்.
சென்னை:
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம். இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும்வரை, அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும்.
பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன. எனவே கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் என்ற உச்சவரம்பில் மாற்றம் கிடையாது. வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களவை தேர்தல் 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
- தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவு.
18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல்நடந்து முடிந்தது.
நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நண்பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் 75.64 சதவீதம், தருமபுரியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- பொள்ளாச்சியில் 72.22 சதவீதம், நாகப்பட்டினத்தில் 72.21 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.
காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஆரணி- 73.77
கரூர் - 74.05
பெரம்பலூர்- 74.46
சேலம்- 74.55
சிதம்பரம்- 74.87
விழுப்புரம்- 73.49
ஈரோடு- 71.42
அரக்கோணம்- 73.92
திருவண்ணாமலை- 73.35
விருதுநகர்- 72.99
திண்டுக்கல்- 71.37
கிருஷ்ணகிரி- 72.96
வேலூர்- 73.04
பொள்ளாச்சி- 72.22
நாகப்பட்டினம்- 72.21
தேனி- 71.74
நீலகிரி- 71.07
கடலூர்- 72.40
தஞ்சாவூர்- 69.82
மயிலாடுதுறை- 71.45
சிவகங்கை- 71.05
தென்காசி- 71.06
ராமநாதபுரம்- 71.05
கன்னியாகுமரி- 70.15
திருப்பூர்- 72.02
திருச்சி- 71.20
தூத்துக்குடி- 70.93
கோவை- 71.17
காஞ்சிபுரம்- 72.99
திருவள்ளூர்- 71.87
திருநெல்வேலி- 70.46
மதுரை- 68.98
ஸ்ரீபெரும்புதூர்- 69.79
சென்னை வடக்கு- 69.26
சென்னை தெற்கு- 67.82
சென்னை மத்தி- 67.35
- தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
- அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவி இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
- நாமக்கல்லில் 67.37 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 67.23 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 67.23 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 67.34
5. கரூர் - 66.91
6. பெரம்பலூர்- 66.56
7. சேலம்- 65.86
8. சிதம்பரம்- 66.64
9. விழுப்புரம்- 64.83
10. ஈரோடு- 64.50
11. அரக்கோணம்- 65.61
12. திருவண்ணாமலை- 65.91
13. விருதுநகர்- 63.85
14. திண்டுக்கல்- 64.34
15. கிருஷ்ணகிரி- 64.65
16. வேலூர்- 65.12
17. பொள்ளாச்சி- 63.53
18. நாகப்பட்டினம்- 64.21
19. தேனி- 63.41
20. நீலகிரி- 63.88
21. கடலூர்- 64.10
22. தஞ்சாவூர்- 63.00
23. மயிலாடுதுறை- 63.77
24. சிவகங்கை- 62.50
25. தென்காசி- 63.10
26. ராமநாதபுரம்- 63.02
27. கன்னியாகுமரி- 62.82
28. திருப்பூர்- 61.43
29. திருச்சி- 62.30
30. தூத்துக்குடி- 63.03
31. கோவை- 61.45
32. காஞ்சிபுரம்- 61.74
33. திருவள்ளூர்- 61.59
34. திருநெல்வேலி- 61.29
35. மதுரை- 60.00
36. ஸ்ரீபெரும்புதூர்- 59.82
37. சென்னை வடக்கு- 59.16
38. சென்னை தெற்கு- 57.30
39. சென்னை மத்தி- 57.25
- டுவிட்டரில் #Vote4INDIA எனப் பதிவிட்டதால் விமர்சனம்.
- தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம்- குஷ்பு
பா.ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு இன்று காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர். வாக்கு செலுத்திவிட்டேன் என விரலை காண்பிக்கும் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் #Vote4INDIA #VoteFor400Paar ஆகிய ஹேஸ்டேக்குகளை பதிவிட்டிருந்தார்.
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கூட்டணி இந்தியா (INDIA Alliance) எனப் பெயர் வைத்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது இந்தியா என்று அழைக்கமாட்டார். இண்டிக் (Indic) என அழைப்பார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கூறியதற்கு நன்றி என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், முதல்கட்ட வாக்குப்பதியின் போது குஷ்பு தனது பக்கத்தை மாற்றுக்கொண்டார். உண்மையான பச்சொந்தி என விமர்சனம் செய்யப்பட்டது. மேலும், விமர்சனங்களுடன் டிரோல் செய்யப்பட்டுள்ளது.
Why make a fool of yourself? We say Vote for India because we #BJP believe in growth of the nation. It's new to you because CONgress believes in growth of a family. And do read #Votefor400Paar and #ModiKaParivaar Or you suffer from selective blindness?? https://t.co/73vzBLfDNi
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 19, 2024
இந்த நிலையில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் "ஏன் உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்?. தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம். காங்கிரஸ் குடும்ப வளர்ச்சியில் நம்பிக்கை வைப்பதால் இது உங்களுக்குப் புதிது. #Votefor400Paar மற்றும் #ModiKaParivaar ஆகியவற்றைப் படிக்கிறீர்களா அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறீர்களா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
- பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.
ராம்நகர்:
கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை.
* ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை.
* கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
* பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.
* பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






