என் மலர்
உள்ளூர் செய்திகள்
- "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" இன்று நடைப்பெற்றது.
- சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று நடைப்பெற்றது.
இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், "இயற்கை விவசாயம் மண் வளத்தை மட்டுமல்ல மனித குலத்தையும் வளமாக்குகிறது" என பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. இது மண் வளம் பற்றியது மட்டுமல்ல மனித குலத்தின் வளமும் அதில் தான் இருக்கிறது. மனிதர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிகப்படியான கூட்டம் மருந்து கடைகளில், மருத்துவமனையில் இருப்பதை பார்க்க முடிகிறது.
காரணம் மண் வளம் இல்லாமை. இன்றைய இயற்கை சீற்றங்கள் அனைத்திற்கும் நாம் தான் காரணம். 40 ஆண்டுகள் முன்பு கேன்சர் எங்கோ ஒருவருக்கு தான் இருந்தது.
இன்று ஊரெங்கும் கேன்சர் மருத்துவமனை, மலட்டுத்தன்மை நீக்கும் மருத்துவமனை பார்க்க முடிகிறது. இதற்கு இயற்கையை காக்க வேண்டும், அதை காப்பதற்காக தான் ஈஷா அறக்கட்டளை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
மண் வளத்தை பெருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இது உயர்ந்த நோக்கம் இதற்கு தலை வணங்குகிறோம், இதை ஈஷா மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை.
- இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் மீண்டும் வீடு திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சி குறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.
குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை.
முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது.
நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
- வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.
- கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு உயிரிழந்துள்ளார்.
திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வான் சாகச நிகழ்ச்சயை பார்த்துவிட்டு நிகழ்ச்சி முடிந்து, வீடு திரும்பியபோது அவருக்கு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (60) என்பவர் வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.
மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் (36) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்சத்து குறைபாடு காரணமாக 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும்.
தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (06-10-2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
- நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காக்கி- வெள்ளை சீருடையுடன் பங்கேற்றுள்ளனர்.
சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல், கோவையில் பலத்த பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடைபெற்றது. கோவை சவானந்தா காலனி முதல் அம்ருதா வித்யாலயா பள்ளி வரை பேரணி நடைபெறுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காக்கி- வெள்ளை சீருடையுடன் பங்கேற்றுள்ளனர். விஜயதசமியையொட்டி 'பதசஞ்சலனம்' என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துகிறது.
தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தென்காசியில் சுமார் 3 கிலோ மீட்டர் நடைபெறும் இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
- சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
- விமானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
விமானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன்
சென்னை மெரினாவின் பிரகாசமான நீல வானத்தில் இந்திய விமானப்படையின் கண்கவர் வானூர்திக் காட்சியை அனுபவிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
மூச்சடைக்கக் கூடிய வான்வழி காட்சிகளும், துல்லியமான பறப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இவ்வளவு திறமையையும் அருகில் இருந்து பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.
வானத்தில் விமானம் உயரும் போது அனைவரும் ஆரவாரத்துடன் கூடிய சூழல் பிரம்மிப்பாக இருந்தது.
இந்நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றியமைத்த அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் பென்னி (வயது 67), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
திருப்பூரில் இருந்து தினந்தோறும் ரெயில் மூலமாக கோவையில் உள்ள கல்லூரிக்கு பணிக்கு சென்று வந்துள்ளார் .
கடந்த 1-ந்தேதி பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் நிலையத்திலிருந்து அவர் வழக்கமாக செல்லும் பாதைகளில் உள்ள சிசிடிவி., கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலை, அய்யப்பன் கோவில் அடுத்த சூசையாபுரம் செல்லும் ரெயில்வே சுரங்க பாலம் வழியே கடந்த 1-ந் தேதி இரவு திரும்பியுள்ளார். அதன் பிறகு கண்காணிப்பு கேமராக்களில் அவர் சென்றது பதிவாகவில்லை.
எனவே அப்பகுதியில் உள்ள அகன்ற சாக்கடை கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு முதல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சூசையாபுரத்தில் இருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் வேறு பகுதிக்கு அடித்துச்சென்று இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1-ந்தேதி இரவு திருப்பூரில் கனமழை பெய்தது. அப்போது ராஜன் பென்னி ரெயில் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வழக்கமான பாதையில் திரும்பியுள்ளார். சூசையாபுரம் சுரங்கப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை கடந்து செல்ல முயன்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
- வி்மானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
வி்மானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது - நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை:
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர். மேலும் பலர் அரசு பேருந்து மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் மீண்டும் வீடு திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வண்ணாரப்பேட்டை - DMS மெட்ரோ இடையே, 3.5 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விம்கோ நகர் - விமான நிலைய மெட்ரோ தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
- காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
இந்நிலையில், விமானப்படை சாகசம் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சென்னை மெரினாவில் நடந்த வண்ணமயமான சாகசத்தை சுமார் 15 லட்சம் மக்கள் கண்டுகளித்துள்ளது, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
டெல்லி, சண்டிகர், பிரயாக்ராஜ் நகரங்களிலும் வான் கண்காட்சி நடந்திருக்கிறது.
எனினும், நிகழ்ச்சியின் அளவிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் சென்னைதான் மிகப்பெரியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.
- சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோபி:
புரட்டாசி மாதம் பிறந்தது முதலே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.
மேலும் பக்தர்கள் பலர் புரட்டாசி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி பிறந்து 3-வது சனிக்கிழமையான நேற்று வெகு விமர்சையாக பெருமாள் கோவில்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதன உடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதே போல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து கோவிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் மேள தாளங்கள் முழங்க வேத மந்திரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் வரதராஜ பெருமகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மேள தாளங்கள் வாசிக்க அதற்கேற்றார் போல் ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.
அப்போது செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆடி, பாடி நடனமாடி மகிழ்ந்தார். இதை தொட ர்ந்து அவர் இசைக்கேற்றப்படி ஆடி கொண்டு சுவாமிக்கு மாலை அணிவித்தார். இதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தலங்களில் பரவி வருகிறது. இதை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.
- கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 12-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
8-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
9-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






