என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படும்.

    * மகளிருக்கு ரூ.1000 கொடுப்பது சாத்தியமில்லை என அ.தி.மு.க.வினர் கூறினர்.

    * மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என வதந்தி பரப்பினர்.

    * பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

    * நமது திட்டங்களை பிற மாநிலங்கள் முன்மாதியாக எடுத்துக்கொண்டுள்ளன.

    * இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * எங்கள் அண்ணன் மாதந்தோறும் கொடுக்கும் சீர் மகளிர் உதவித்தொகை என மகளிர் கூறுகின்றனர்.

    * வதந்திகளை நம்பாதீர்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும்.

    * நியூயார்க் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து பயணம் வாக்குறுதியை தந்ததால் வெற்றி பெற்றுள்ளனர்.

    * கனடாவிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தி.மு.க.வின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    * போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், நம் பணி மக்களுக்கு பணி செய்வதே.

    * தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    * தி.மு.க. ஆட்சி 2.o உறுதியாகி விட்டது

    * தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

    * வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா? என்று ஆராயுங்கள்.

    * எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    • பயங்கரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த சில நாள்களுக்கு முன் 5 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் கடைய நல்லுாரை அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா, புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் மும்பையைச் சேர்ந்த 'ட்ராயிங் ரெயில் லைட்டிங்' என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

    அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர். கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடும் குடும்பங்கள். சொல்லிக் கொள்ளும்படி வாழ்வாதாரம் இல்லாததால் தான் ஆபத்துகள் நிறைந்த மாலி நாட்டுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர். குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களை விரைந்து மீட்க வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும்.

    மாலி நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்தி 5 தமிழர்களையும் விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பயங்கரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதம் தாங்கிய குழுக்கள் பிணைத் தொகை கேட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் கடத்துவதும், அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் மாலி நாட்டில் இயல்பாக நடைபெற்று வருகின்றன. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆபத்தான நாடுகளுக்கு குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது தி.மு.க.
    • குவாரி உரிமையாளர்களை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை சொல்ல முடியுமா?

    * அ.தி.மு.க.தான் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை என தெளிவாக அறிவிப்பு வந்தது.

    * அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது தி.மு.க.

    * கோவையில் பல பாலங்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான்

    * நிதியே ஒதுக்காமலேயே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக்கூறுகிறது காங்கிரஸ். ஆனால் தி.மு.க. கொடுக்க மறுக்கிறது.

    * 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பொய் கூறுகிறார்கள்.

    * குவாரி உரிமையாளர்களை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.

    * புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.

    காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

    இதனை சக காவலர்கள் கல்லால் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். இதில், ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வந்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.
    • கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

    * புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.

    * கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    * இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

    * ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.

    * கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * கிரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

    • எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?
    • 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் S.I.R. நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தகுதியான வாக்காளர்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக எஸ்.ஐ.ஆர். நடைமுறை.

    * இதற்கு முன்பு 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று இருக்கிறது.

    * எஸ்ஐஆர் என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது.

    * 8 நாட்களில் எஸ்ஐஆர் படிவங்களை விநியோகித்து விடலாம், இதில் என்ன சிக்கல்?

    * எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?

    * தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் BLO-க்கள் உள்ளனர்.

    * 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் SIR நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    * குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்ட போதிலும் அங்கு வாக்குகள் இருந்தன.

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் இடிக்கப்பட்ட வீடுகளில் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    * SIR குறித்து தவறான தகவல்களை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.

    * தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர்.

    * போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெறலாம் என தி.மு.க. நினைக்கிறது.

    * வேறு கட்சிகளின் வாக்காளர்கள் என்றால் படிவத்தை தி.மு.க.வினர் கிழித்து விடுகிறார்கள்.

    * வாக்குரிமை பறிபோய் விடும் என தி.மு.க.வினர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் புதுக்கோட்டை.
    • பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * குகைக்கோவில், கல்வெட்டு, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் புதுக்கோட்டை.

    * கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் புதுக்கோட்டை.

    * புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆண்டில் ரூ.11,481 கோடியில் 38.35 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    * அரசியல் லாபத்திற்காகவும் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் தி.மு.க. அரசு மீது சிலர் அவதூறு பரப்புகின்றனர்.

    * அவதூறு பரப்புவோருக்கு முதல் ஆளாக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்து வருகிறார்.

    * சாதி அடையாளமாக சூட்டப்பட்ட விடுதிகளின் பெயரை சமூகநீதியின் அடையாளமாக மாற்றியவர் அமைச்சர் மெய்யநாதன்.

    * பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.
    • போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திண்டிவனத்தில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    * பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    * தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

    * போக்சோ வழக்குகளில் ரூ.104 கோடி நிவாரணம் அளித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

    * சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.

    * காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பது தெரிய வருகிறது.

    * போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.

    * தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

    * இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்?

    * தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. காலதாமதம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடக்கும் திருவரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது தி.மு.க.

    * உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதிவாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன்.

    * புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயன்று வருகின்றனர்.

    * நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதற்கு பெயர் தான் இயக்கம்.

    * பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் என எண்ணுகின்றனர். அது நடக்காது.

    * தி.மு.க.வினரும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

    * SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    * மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR-ஐ அ.தி.மு.க. ஆதரிக்கிறது.

    * தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

    * SIR-ஐ எதிர்க்க இ.பி.எஸ்.-க்கு தைரியமில்லை. டெல்லியில் உள்ள பிக்பாசுக்கு ஆமாம் சாமி என சொல்லித்தான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.

    அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.

    கடந்த 6-ந்தேதி ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.

    இதனை தொடர்ந்து 7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    8-ந்தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160

    06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560

    05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-11-2025- ஒரு கிராம் ரூ.165

    08-11-2025- ஒரு கிராம் ரூ.165

    07-11-2025- ஒரு கிராம் ரூ.165

    06-11-2025- ஒரு கிராம் ரூ.165

    05-11-2025- ஒரு கிராம் ரூ.163

    • கேரள மாநில போக்குவரத்துத்துறை ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடித்தது.
    • அண்டை மாநிலங்கள் சாலை வரி விதிப்போம் எனக் கூறுவதால் நடவடிக்கை.

    தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.

    தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்போம் என கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

    மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் 6,500 கனஅடியாக நீடித்து வருகிறது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×