என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது - இ.பி.எஸ்.
- எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?
- 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் S.I.R. நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தகுதியான வாக்காளர்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக எஸ்.ஐ.ஆர். நடைமுறை.
* இதற்கு முன்பு 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று இருக்கிறது.
* எஸ்ஐஆர் என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது.
* 8 நாட்களில் எஸ்ஐஆர் படிவங்களை விநியோகித்து விடலாம், இதில் என்ன சிக்கல்?
* எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?
* தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் BLO-க்கள் உள்ளனர்.
* 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் SIR நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
* குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்ட போதிலும் அங்கு வாக்குகள் இருந்தன.
* ஈரோடு கிழக்கு தொகுதியில் இடிக்கப்பட்ட வீடுகளில் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
* SIR குறித்து தவறான தகவல்களை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.
* தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர்.
* போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெறலாம் என தி.மு.க. நினைக்கிறது.
* வேறு கட்சிகளின் வாக்காளர்கள் என்றால் படிவத்தை தி.மு.க.வினர் கிழித்து விடுகிறார்கள்.
* வாக்குரிமை பறிபோய் விடும் என தி.மு.க.வினர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






