என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வருகிற 19-தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.
- நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 19-தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 முதல் 20 செ.மீ. வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அக்கரகாரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அக்கரகாரப்பட்டியில் நிலக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் கடையில் 4 உளுந்த வடை மற்றும் 3 பருப்பு வடை பார்சல் வாங்கினார்.
அந்த வடைகளை தனது அக்காள் அழகு ராணியிடம் ஜெயபிரகாஷ் கொடுத்தார். இதையடுத்து அழகு ராணி மற்றும் அவரது குழந்தைகள் 3 உளுந்த வடைகளையும் சாப்பிட்டனர். தொடர்ந்து பருப்பு வடையை எடுத்து 2 ஆக அழகுராணி பிரித்தார். அதற்குள் இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அழகுராணி மற்றும் குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் டீ கடையில் வாங்கிய ஒரு வடையில் பிளேடு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே நிலக்கோட்டை பகுதியில் உள்ள டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
- புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வ்ந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
இதேபோன்று தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின்மீது சில கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
- அ.தி.மு.க.வின் கட்டுக்கதை அறிக்கைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் முதலமைச்சர் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் என கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசுமீது எதைச் சொல்லி பழி போடுவது என தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் என கதை கட்டியிருக்கிறார் 'கட்டுக்கதை' பழனிசாமி.
ஃபெஞ்சல் புயலால் எதிர்பார்க்காத அளவு அதி கனமழை பெய்தபோதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் என கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களைக் காத்துவரும் திராவிட மாடல் ஆட்சிமீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அடிமை அ.தி.மு.க. ஆட்சிதான். 2019-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.
தனது ஆட்சிக்காலத்தில் சிறையில் வாடும் இஸ்லாமிய மக்களை விடுவிக்க சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத பழனிசாமி தற்போது யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன?
தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம்.
இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன?
தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதலமைச்சரின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சிமீது அள்ளிவிடும் அ.தி.மு.க.வின் கண்துடைப்பு கண்டனக் கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்பப்போவதில்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.
- விசிக-ல் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம்
- ஆதவ் அர்ஜூனா வி.சி.கவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனாவை 6 மாதங்கள் இடைநீக்கம் செய்து கட்சியின் தலைமை அறிவித்திருந்த நிலையில், கட்சியில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், "கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா வி.சி.கவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
- மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
விசிக சார்பில் 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம் என திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள்.
அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல "அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்" என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.
அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்...வாய்மையே வெல்லும்" என்று எழுதியுள்ளார்.
- மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி.
- பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார்.
மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மாலை அணிவித்து இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, இன்று மாலை இறுதி ஊர்லம் தொடங்கியது.
இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், முகலிவாக்கம் மின் மயானத்தில் உடலம் அடைந்த பிறகு, ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பிறகு, கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
- 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார்.
- குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.
இதில், நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இதனால் குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும் என்று சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்)லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ச்சி நிரவில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரையை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.
நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு, அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்சச் செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அராஜகத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும்.
2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது. அப்படியாளாய், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநிலச் சட்டப்பேரவைகளில் எந்தக் ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும்.
அவசரகோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதானியை பாதுகாக்கவும்.
இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடும் ஒன்றிய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையையும் சிதைக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்பாய்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே நேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.
- எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.
எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது நான் அதை சுதந்திரமாக எடுத்த முடிவுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தான்.
ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க. அரசு கொண்டுவர பார்க்கிறார்கள்
இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.
- தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது.
- பாலின் அளவையும் 50 மி.லி. குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தேன்.
அது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறி இருக்கிறது.
ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விட்டு, அதற்கு சில்லறைத் தட்டுப்பாடு தான் காரணம் என்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது. சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும், ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மிலி ரூ.20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மி.லி.யாக உயர்த்தி ரூ.25 என விலை நிர்ணயித்து இருக்கலாம்.
ஆனால், பாலின் அளவையும் 50 மி.லி. குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? மக்களை ஏமாற்றும் வகையில் மிகப்பெரிய மோசடியை செய்துவிட்டு, அதை நியாயப்படுத்து வதற்காக மேலும், மேலும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்.
- அதிமுகவில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
* மக்கள் பிரச்சனைகள் பற்றி திமுக கூட்டணி கட்சிகள் கண்டு கொள்வதே இல்லை.
* ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்.
* அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டு விட்டது. எழுச்சி தான் வெற்றிக்கு அடிப்படை.
* 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி என்பது கனவில் நடக்கும், நிஜத்தில் நடக்காது.
* பத்திரிகைகளில் கொலை நிலவரம் என வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது.
* அதிமுகவில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
* தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஜனவரி மாத இறுதியில் தான் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று பேசினார்.






