என் மலர்
புதுச்சேரி
- கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.
- சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு மக்கள் குவிகின்றனர்.
புதுவையில் உள்ள தனியார் ஓட்டல்கள், கடற்கரைகள், திறந்த வெளி அரங்குகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்குகிறது.
இதற்கு உள்ளாட்சித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து, கேளிக்கை வரி வசூலும் செய்கிறது. ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அனுமதியில்லை.
ஆனால் கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்கவில்லை என சுற்றுலா பயணிகள் பலரும் புகார் தெரிவித்து சென்றனர்.
இதனால் இந்த ஆண்டு உள்ளாட்சித்துறை அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவு திறந்தவெளி அரங்குகளில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் காற்றில் பறக்க விடப்பட்டது. 500 பேர் மட்டுமே கூடும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை அனுமதித்தனர்.
சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.
மது வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவோர் அறிவித்த மது வகைகளை வழங்காமல் நிறுத்தி விட்டனர். சிறிய பாட்டில் பீர் வகைகளை மட்டும் வழங்கினர். அதையும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலை இருந்தது.
மதுவை விட உணவு வகைகளை பெற சுற்றுலா பயணிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
இரவு 10 மணிக்கு மேல் மெனுவில் அறிவித்தபடி உணவு வகைகளையும் வழங்கவில்லை. இதனால் சில இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி தங்களுக்கு வழங்கப்பட்ட டேக்கை குறைந்த விலைக்கு பிறரிடம் சுற்றுலா பயணிகள் விற்று விட்டு சென்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்த புகாரும் தெரிவிக்க மாட்டார்கள். நமக்கேன் வம்பு? என சென்று விடுவார்கள் என்பதால்தான் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதேநிலை நீடித்தால் வரும் காலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி விடும்.
- புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார்.
- கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). புதுவையில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்தனர்.
புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு மோகனா, லேகா ஆகியோரது நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் நவீன் (16), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்து 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என கூக்குரலிட்டு கதறினார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி அக்காள், தங்கை உள்பட 4 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் சென்று கடலோர காவல்படை போலீசாரும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக தேடும் பணி கைவிடப்பட்டது.
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அக்காள்-தங்கை உள்பட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியாதநிலையில் இதுபற்றிய தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பதறிப்போன அவர்கள் கடற்கரைக்கு வந்து அழுது புரண்டனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
- கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள்.
புதுச்சேரி:
புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவில் புதுவை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள், விடுதிகள், தேவாலயங்கள் செல்வோருக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கே கடற்கரை சாலைக்கு மக்கள் வருகை தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 150 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். இவற்றின் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.
கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் கல்லூரி, உப்பளம் பெத்தி செமினார் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு வர இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் நாளை நகர பகுதிக்குள் வரவும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வெளியேறவும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை மாலை முதல் இரவு வரை கடற்கரை சாலைக்கு பகுதி, பகுதியாக புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் வருவார்கள்.
அதே வேளையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் நள்ளிரவில் நகர பகுதி வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.
இதனால் இந்த ஆண்டு வாகன நெரிசல் ஏற்படாமல் கலைந்து செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- புதுவையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன.
- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி:
கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை தொடர்ந்து புதுவையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஒயிட் டவுன் மற்றும் நகர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். புத்தாண்டை வரவேற்கும்விதமாக புதுவை கடற்கரை சாலை, நட்சத்திர விடுதிகள், மது பார்கள், ரெஸ்டோபார்கள், கடற்கரை கேளிக்கை இடங்கள் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டை கொண்டாடுவதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாகவே வர தொடங்கிவிட்டனர்.
இன்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. புதுவையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன. அறைகளில் தங்க வழக்கமான நாட்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவில் புதுவை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள், விடுதிகள், தேவாலயங்கள் செல்வோருக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கே கடற்கரை சாலைக்கு மக்கள் வருகை தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 150 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். இவற்றின் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.
கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் கல்லூரி, உப்பளம் பெத்தி செமினார் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலைக்கு வர இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் நாளை நகர பகுதிக்குள் வரவும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வெளியேறவும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை மாலை முதல் இரவு வரை கடற்கரை சாலைக்கு பகுதி, பகுதியாக புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் வருவார்கள்.
அதே வேளையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் நள்ளிரவில் நகர பகுதி வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.
இதனால் இந்த ஆண்டு வாகன நெரிசல் ஏற்படாமல் கலைந்து செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகர பகுதியில் நெரிசலை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினார். அப்போது சில ஆலோசனைகளையும் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் முகம் சுளிக்காமல், கனிவோடு நடந்து கொள்ளும்படியும் போலீசாருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.
இதனிடையே உள்ளாட்சித்துறை ஓட்டல் மற்றும் திறந்த வெளியில் நிகழ்ச்சியில் நடத்துவோர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதி பெற்ற எண்ணிக்கையில் மட்டும்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நபர்களை அனுமதிக்க வேண்டும்.
அவர்களுக்கு உறுதியளித்தபடி மது வகைகள், உணவுகளை வழங்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள், முன்னேற்பாடுகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனுமதியில்லாமல் புத்தாண்டு கொண்டாட வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும்.
- மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில்,40,000 குடும்பத்தலைவிகளுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பரிசோதனை முயற்சியாக, 1 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட உள்ளது.
அடுத்து, 50 எம்.எல்.டி குடிநீர் வழங்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.
பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தின் சாதகம், பாதகம் குறித்து அறிந்து திட்டம் செயல்படுத்தப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும். அதுபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமில்லாத சைக்கிள்களை மாற்றி தர ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை வேகமாக செயல்படுத்தினால் தான் வளர்ச்சி இருக்க முடியும். இதை வலியுறுத்த வேண்டியது அரசின் கமை என்பதால், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அதனால் அரசு. அதிகாரிகள் அதிகமாக கேள்விகளை கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பக்கூடாது.
இது போன்ற பிரச்சினைகளுக்கு மாநில அந்தஸ்து தான் தீர்வாக இருக்கும். இதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறேன். நிர்வாகம் வேகமாக செயல்பட மாநில அந்தஸ்து தேவை.
மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். தேசிய ஜனநாயகக்கூட் டணி அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் பா.ஜனதா கூட்டணியில் உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி நிலை தான் உங்களுக்கு ஏற்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியது குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி அதுபோன்று எந்த நிலையும் எப்போதும் ஏற்படாது என்றார்.
மேலும் அவரிடம் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் உங்களை முதலமைச்சராக ஏற்க தயார் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனரே என்று கேட்டதற்கு முதலமைச்சர் ரங்கசாமி சிரித்து கொண்டே நன்றி என பதில் தெரிவித்தார்.
- சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.
- அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
புதுச்சேரி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.
நல்ல திரைப்படக்கலைஞர்....
நல்ல அரசியல் தலைவர்....
நல்ல மனிதர்....
நல்ல சகோதரர்....
ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.
சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.நல்ல திரைப்படக்கலைஞர்....நல்ல அரசியல் தலைவர்....நல்ல மனிதர்....நல்ல சகோதரர்....ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம்… pic.twitter.com/oPVTWZ1uRD
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 28, 2023
- நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
- நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தகவல்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
இதற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 9க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், புதுக்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
- 2-வது நாளான நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
- ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
திருநள்ளாறு:
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் நேற்று முன்தினம் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்து, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடப்பதாலும், தொடர் மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவின் 2-வது நாளான நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் நளன்குளத்தில் புனித நீராடி கலிதீர்த்த விநாயகரை வழிபட்டு பின்னர் சனீஸ்வரனை தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதல் மாலை வரை சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர்.
புதுச்சேரி:
ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர். மேலும் வீடுகளில் ஸ்டார்கள் தொடங்கவிட்டுள்ளனர். மேலும் நகரப்பகுதியில் சாலையோரங்களில் குடில்கள், ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்தவர்கள் வீடுகளில் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளும் அளித்து வருகின்றனர்.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி, தூய்மா வீதி கப்ஸ், அரியாங்குப்பம் மாதா, வில்லியனூர் மாதா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
- சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம்.
காரைக்கால்:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்த சனி பகவானை நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நேற்று மாலை 5.20 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, சனீஸ்வரர், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அதுசமயம், சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நளன் குளத்தில் புனித நீராடி, திருநள்ளாறின் நான்கு வீதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்யாத திரளான பக்தர்கள், கோவில் அருகே, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் முன்பதிவு மையத்தில் ரூ.300, ரூ.600, ரூ.1,000 கட்டண டிக்கெட் பெற்று தரிசனத்துக்கு சென்றனர். இவர்கள் தவிர தர்ம தரிசனம் மூலமாகவும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை என்பதாலும், சனிப்பெயர்ச்சியன்று கூட்டம் அதிகம் காணப்படும் என்ற தயக்கத்தாலும், நேற்று அதிகாலை முதல் மாலை 4 மணி வரை மிக குறைவான பக்தர்களே நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் மதியம் 3 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
சரியாக சனிப்பெயர்ச்சி நேரமான மாலை 5.20 மணிக்கு கனமழை பெய்தது. அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று அதிகாலை காலை முதல், மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மெகா எல்.இ.டி டி.வி.க்கள் வைக்கப்பட்டு சனிப்பெயர்ச்சி தீபாராதனை உள்ளிட்ட சனீஸ்வர சன்னதியில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை என 24 மணி நேரமும் கோவில் நடை விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார்.
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார்.
இன்று மாலை முதல் நாளை மாலை வரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிப்பெயர்ச்சிக்கு வருகை தந்து சாமிதரிசனம் செய்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருக்கனூர்:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அட்சதை கலசம் திருக்கனூர் கடைவீதியில் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கலசத்தை கையில் ஏந்தியவாறு திருக்கனூர் கடை வீதியில் இருந்து கே.ஆர்.பாளையம் செங்கேணி அம்மன் கோவில் வரை நடந்து சென்றார்.
அவருடன் ராமர், லட்சுமணன், சீதை வேடம் அணிந்த பக்தர்களும் பஜனை பாடல்களை பாடியவாறு மேளதாளத்துடன் சென்றனர்.
பின்னர் கோவிலில் வைத்து அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






