என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • சிவசேனா அவ்வளவு எளிதாக காணாமல் போய்விடும் என யாரும் நினைக்க வேண்டாம்.
    • நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இதுவரை சிவசேனா எனக்கு கொடுத்து உள்ளது.

    மும்பை

    சிவசேனாவில் நேற்று 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினர். இந்தநிலையில் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக உள்ள பர்பானி எம்.பி. சஞ்சய் ஜாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இதுவரை சிவசேனா எனக்கு கொடுத்து உள்ளது. நான் உத்தவ் தாக்கரேவுடன் உறுதியாக நிற்கிறேன். சிவசேனா அவ்வளவு எளிதாக காணாமல் போய்விடும் என யாரும் நினைக்க வேண்டாம். தற்போது சிவசேனாவில் நிலவும் பிரச்சினை காணாமல் போகும். 1984-ல் பா.ஜனதாவுக்கு 2 எம்.பி.க்கள் மட்டும் இருந்தனர். ஆனால் இன்று அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். எனவே பால் தாக்கரேவின் சிவசேனா அவ்வளவு எளிதாக உடைந்துவிடும் என யாரும் நினைக்காதீர்கள்.

    ஒருவரின் பேராசைக்கு எல்லை வேண்டும். இந்த சிவசேனா தான் எங்களை பெரிய அரசியல்வாதியாக உருவாக்கியது. பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. சிலருக்கு நேற்று வரை நல்லதாக இருந்த கட்சி தற்போது மோசமானது போல தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் நோக்கம் நிறைவேறினால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்.

    சில பிரச்சினைக்கு நானும் உத்தவ் தாக்கரேவிடம் ராஜினாமாவை கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் உடனடியாக அந்த பிரச்சினையை தீர்ப்பார். இதனால் ராஜினாமாவை திரும்ப பெற்று இருக்கிறேன். பர்பானியில் சிவசேனா நிர்வாகிகளுக்கு நியாயமானதை உத்தவ் தாக்கரே செய்து உள்ளார்.

    என்னை போல ஏக்நாத் ஷிண்டேவும் உத்தவ் தாக்கரேயை சந்திப்பார். சிவசேனாவை தாக்க வேண்டும் என சந்தர்ப்பவாதிகள் (பா.ஜனதா) ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து உள்ளனர். ஒருநாள் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராகவே ஒருவரை பயன்படுத்தும் காலம் வரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • ஜூலை 1-ம் தேதி சஞ்சய் ராவத் ஏற்கனவே அமலாக்கத் துறை முன் ஆஜராகி இருந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் கேட்டு சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதனால் ஜூலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், நில மோசடி வழக்கின் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    • 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவாக உள்ளது. இந்தநிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்ற 17 நாட்கள் ஆன பிறகும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

    இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "2½ லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 மந்திரிகள் உள்ளனர். ஆனால் 12 கோடி மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 மந்திரிகள் மட்டுமே உள்ளனர்.

    அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது?. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மந்திரி சபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 12 மந்திரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சொல்கிறது. எனவே கடந்த 2 வாரமாக 2 நபர் மந்திரி சபை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சட்டத்தின்படி செல்லாது. மரியாதைக்குரிய கவர்னரே, இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?" என கூறியுள்ளார்.

    • பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பற்றி பைக்குகள் எரிந்து நாசாமானது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூம். இங்கு, ஏராளமான இ பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

    விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் எரிந்து நாசாமானது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில், ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 பேர் உள்ளனர்.
    • சிவசேனா எம்.பி.க்கள் பலரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாத இறுதியில் வீசிய சூறாவளியால், சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். அதன்படி சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றனர்.

    சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில், தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 பேர் உள்ளனர். எனவே எம்.எல்.ஏ.க்கள் அளவில் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 3-ல் 2 பங்கிற்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே வசம் இருப்பதால், அவரது அணியே சிவசேனா கட்சியாக சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் சிவசேனா எம்.பி.க்கள் பலரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக கூறப்பட்டது. இந்த தருணத்தில் தான் ஜனாதிபதி தேர்தல் வந்தது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான சிவசேனா எம்.பி.க்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் போர்க்கொடி தூக்கினர்.

    எனவே எம்.பி.க்கள் அளவில் கட்சி உடைவதை தடுக்க திரவுபதி முர்முக்கு ஆதரவளிக்க சிவசேனா தலைமை முடிவு செய்தது. இருப்பினும் இந்த விஷயத்தில் எம்.பி.க்களின் அழுத்தத்திற்கு பணியவில்லை என்றும், தனது கட்சியை சேர்ந்த பழங்குடியின பிரமுகர்கள் கேட்டுக்கொண்டதால், இந்த முடிவை எடுத்ததாகவும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி மூலம் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் சிவசேனாவின் மொத்தம் உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையே சிவசேனாவை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் 12 எம்.பி.க்கள் கலந்து கொண்டோம். நாங்கள் மக்களவையில் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறைப்படி கடிதம் கொடுக்க உள்ளோம். மக்களவையில் எங்களது குழுவின் தலைவராக மும்பையை சேர்ந்த எம்.பி.யான ராகுல் செவாலே செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    12 சிவசேனா எம்.பி.க்கள் தனிக்குழுவாக செயல்பட போவதாக அறிவித்து இருப்பது, உத்தவ் தாக்கரேக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • பூபிந்தர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82), கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார்.

    அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
    • இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பை:

    லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென், முன்னாள் ஐபிஏல் தலைவர் லலித் மோடியின் டீவிட்-க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    1994-ஆம் ஆண்டு நடைபெற்ற 43வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற சுஸ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சுஸ்மிதா சென்னுக்கு தற்போது வயது 46. திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் இருந்தனர். லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

    இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.

    பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
    • 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

    20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • பா.ஜகவுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர்.
    • அணி மாறிய பல சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கட்சி ஆட்சி செய்துவந்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால் மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்ததுடன், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார். இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அரசு சட்டவிரோதமானது என சிவசேனா கட்சி தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று பேசியதாவது:-

    மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 100 பேர் இறந்துள்ளனர். இதுபோல மாநிலத்தில் காலரா நோயால் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். இத்தகைய மோசமான சூழ்நிலையில் மாநில அரசும் தற்போது ஆட்சியில் இல்லை. ஏனெனில் இது ஒரு சட்டவிரோதமான அரசு ஆகும். மாநிலத்தில் ஆட்சியும், மந்திரிசபையும் இல்லாத நிலையில் நமது கவர்னர் எங்கே இருக்கிறார்? மாநிலத்தில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் கவர்னர் எங்கே? நேற்றுவரை எங்களை அவர் வழிநடத்தி வந்தார். இப்போது அவர் எங்கே? அவருடைய வழிகாட்டுதல் இப்போது மாநிலத்திற்கு தேவையாகும்.

    அணி மாறிய பல சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம். தகுதி நீக்கம் என்ற வாள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களின் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்னும் முடிவு எடுக்காததால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாதது. இது அரசியல் ஊழல். அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் எதுவும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்-மந்திரி அலுவலகத்திலும் இன்னும் நிர்வாக அமைப்பு இல்லை.
    • முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரி இருவர் மட்டுமே ஆட்சியை நடத்துகின்றனர்.

    மும்பை :

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணியினர் பா.ஜனதாவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் மகாராஷ்டிரா மந்திரி சபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறியதாவது:-

    மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள் ஆகியும், மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறவில்லை. முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரி இருவர் மட்டுமே ஆட்சியை நடத்துகின்றனர். கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகார மோதல் காரணமாக ஏக்நாத் ஷிண்டே- தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைக்கப்பட்டு இருந்தபோதிலும், அரசும் இல்லாமல், நிர்வாகமும் இல்லாமல் மகாராஷ்டிரா அனாதையாக நடத்தப்படுகிறது. நீண்ட அரசியல் நாடகத்திற்கு பிறகு பா.ஜனதா தலைமையிலான அரசு அமைந்தாலும், இதுவரை மந்திரிசபை அமைக்கப்படவில்லை.

    முதல்-மந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் துறைகள் ஒதுக்கப்படவில்லை. முதல்-மந்திரி அலுவலகத்திலும் இன்னும் நிர்வாக அமைப்பு இல்லை. கடந்த 15 நாட்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் செய்யும் ஒரே வேலை மகா விகாஸ் அகாடி அரசு எடுத்த முடிவுகளை மாற்றியமைப்பதை தான்.

    ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றவுடன் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் ஆரே காலனி பணிமனை அமைக்கும் முடிவை எடுக்கிறது. இந்த முடிவு மும்பை மக்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கனமழையால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆறுகள் நிரம்பி வழிகின்றன. மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது.

    ஆனால் முதல்-மந்திரி 'லைட்', 'கேமரா', ஆக்சன் என்ற பிம்பத்திற்குள் சிக்கிகொண்டதாக தெரிகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு விமர்சனமும் பதிவு செய்யப்படுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பிரச்சினையை ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்போம் என பேசியவர்களால் கோர்ட்டில் வழக்கை கூட சரியாக தாக்கல் செய்ய முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டது.
    • டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மக்களின் நலன் மீது அரசுக்கு உள்ள அக்கறையின் ஒரு பகுதி இது என தெரிவித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
    • இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து அதிருப்தி குழுவுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட் கூறும்போது, "சிவசேனா நாங்கள் இருக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை சிவசேனா ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

    ×