என் மலர்
நீங்கள் தேடியது "Sushmita Sen"
- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
- இதன் கும்பாபிஷேக விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

சுஷ்மிதா சென் பதிவு
இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பார்வதி பதிவு
இந்நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகை பார்வதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
- இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை:
லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென், முன்னாள் ஐபிஏல் தலைவர் லலித் மோடியின் டீவிட்-க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
1994-ஆம் ஆண்டு நடைபெற்ற 43வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற சுஸ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சுஸ்மிதா சென்னுக்கு தற்போது வயது 46. திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் இருந்தனர். லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.
இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.
பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூட்டிய சுஷ்மிதாசென், 1996-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகம் ஆனார்.
- 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதாசென் கடைசியாக ஒரு வெப் சீரியலில் நடித்து இருந்தார்.
புதுடெல்லி:
உலகளவில் பிரபலமாக திகழும் ஐ.பி.எல்.லின் முதல் சேர்மனாக இருந்தவர் லலித் மோடி.
இவர் மோசடி புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.
இந்நிலையில் லலித்மோடி இந்தி நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுஷ்மிதாசென்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். சுஷ்மிதாசென் எனது பெட்டர் ஹாப் என்றும், புதிய வாழ்க்கை, புதிய பயணம் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு டுவிட்டில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று லலித்மோடி அதில் கூறியுள்ளார்.
லலித்மோடி, மினால் என்பவரை 1991-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையேயிலான திருமண வாழ்க்கை 2018-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் லலித்மோடி தனியாக வசித்து வந்தார்.
கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூட்டிய சுஷ்மிதாசென், 1996-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகம் ஆனார். 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதாசென் கடைசியாக ஒரு வெப் சீரியலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் 46 வயதாகும் சுஷ்மிதாசென் தற்போது லலித்மோடியுடன் டேட்டிங்கில் உள்ளார்.
லலித்மோடியின் பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.
“While the world speculates, I train. Speak of these #rings & this #commitment , and I am game!!😉All other #gossips can die in vain” 👊😄 #notgettingmarried (yet) 😉 ‘Rohman’cing life ABSOLUTELY!!!😄❤️😍♾💃🏻 #enoughsaid#sharing#mytruth I love you guys beyond!!!!😍💃🏻 mmuuuaaah! pic.twitter.com/yDgnLglRQ6
— sushmita sen (@thesushmitasen) November 10, 2018







