search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மழை பேரழிவை ஏற்படுத்தும் நிலையில் கவர்னர் எங்கே?: சஞ்சய் ராவத் கேள்வி
    X

    மழை பேரழிவை ஏற்படுத்தும் நிலையில் கவர்னர் எங்கே?: சஞ்சய் ராவத் கேள்வி

    • பா.ஜகவுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர்.
    • அணி மாறிய பல சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கட்சி ஆட்சி செய்துவந்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால் மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்ததுடன், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார். இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அரசு சட்டவிரோதமானது என சிவசேனா கட்சி தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று பேசியதாவது:-

    மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 100 பேர் இறந்துள்ளனர். இதுபோல மாநிலத்தில் காலரா நோயால் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். இத்தகைய மோசமான சூழ்நிலையில் மாநில அரசும் தற்போது ஆட்சியில் இல்லை. ஏனெனில் இது ஒரு சட்டவிரோதமான அரசு ஆகும். மாநிலத்தில் ஆட்சியும், மந்திரிசபையும் இல்லாத நிலையில் நமது கவர்னர் எங்கே இருக்கிறார்? மாநிலத்தில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் கவர்னர் எங்கே? நேற்றுவரை எங்களை அவர் வழிநடத்தி வந்தார். இப்போது அவர் எங்கே? அவருடைய வழிகாட்டுதல் இப்போது மாநிலத்திற்கு தேவையாகும்.

    அணி மாறிய பல சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம். தகுதி நீக்கம் என்ற வாள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களின் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்னும் முடிவு எடுக்காததால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாதது. இது அரசியல் ஊழல். அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் எதுவும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×