என் மலர்
மகாராஷ்டிரா
- பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது.
- பாராமதிக்கு நிர்மலா சீத்தாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மும்பை :
புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்த பகுதி தேசியவாத காங்கிரசின் கோட்டையாக உள்ளது. தற்போது பாராமதி எம்.பி.யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார்.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாராமதியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது.
எனவே பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாராமதிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் நிர்மலா சீதாராமன் பாராமதியில் கவனம் செலுத்துவதைவிட்டு விட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடு கிராஸ்டோ கூறியதாவது:-
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராமதி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பொருளாதாரத்தை மறந்துவிட்டார். பாராமதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அவர் மீண்டும் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பாராமதியில் சுப்ரியா சுலேயை பா.ஜனதா தோற்கடிக்கும் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் அவர் மத்திய நிதி மந்திரி என்பதை மறந்துவிட்டார். எனவே அவர் பாராமதியைவிட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை.
- காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.
மும்பை :
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். இவர் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளதாக சாம்னா பத்திரிகையில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
வெறுப்பை உணர முடிகிறது. தற்போது அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் அழிக்க விரும்புவதால் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளது.
காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியதற்கு, அவர் உண்மையை தான் கூறி உள்ளார் என்றேன். உடனே ஊடகங்கள் நான் அடங்கிவிட்டதாக கூற தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை. அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அரசியல் விஷமாகிவிட்டது. இதுபோல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இல்லை.
தற்போது டெல்லி ஆட்சியாளர்கள் அவர்கள் விரும்புவதை கேட்க விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி செயல்படாதவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் டெல்லி ஆட்சியாளர்களின் எதிரிகள் அல்ல. ஆனால் நேருக்கு நேராக உண்மையை பேசுபவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் மாண்பை குறைக்கின்றனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- ஆசிய விளையாட்டு போட்டிக்கான தேர்வு சுற்று போட்டியாக இது நடத்தப்படுகிறது.
- நாடு முழுவதும் உள்ள 115 க்கும் மேற்பட்ட பாய்மர படகு மாலுமிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பாய்மரப் படகுச் சங்கம் சார்பில் நடப்பாண்டிற்கான தேசிய சீனியர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டிகள் மும்பை துறைமுகத்தில் இன்று தொடங்கின. வரும் 20ந் தேதி வரை நடைபெறும் இந்த படகு போட்டிளில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள 15 பாய்மர படகோட்டி கிளப்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பதிவு செய்துள்ளனர்.

ஒரு சுற்றுக்கு 12 பந்தயங்கள் என மொத்தம் எட்டு சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு வகை என மூன்று வகைகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் சீனாவில் நடைபெற உள்ள அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர். ஓமன், கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்பட சர்வதேச பந்தய அதிகாரிகள் குழு, இந்த போட்டிகளை ஆய்வு செய்கிறது.
- டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது.
- இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்திய அணியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்பது எனக்குத் தெரியும்.
நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை இலக்காக வைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வோம். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 168 ரன்கள் போதுமானதல்ல.
விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் நாம் தோல்வி அடைந்தோம். இது எங்களுக்கு கடினமான ஆட்டம், மோசமான மற்றும் ஏமாற்றம் தரும் தோல்வி.
நம்பர் 1 இடத்தைப் பெறுவது என்பது ஒரே இரவில் நடக்காது. அந்த அணி குறிப்பிட்ட காலத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், இந்திய அணி அதைச் செய்திருக்கிறது.
ஒரு தோல்வியின் அடிப்படையில் வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம். வீரர்களும் வெளியே சென்று தோல்வியடைய விரும்பவில்லை. விளையாட்டுகளில் இந்த ஏற்றத் தாழ்வுகள் உண்டு. நாம் அதில் ஒன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது.
- நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது.
மும்பை :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மராட்டியத்தில் நடைபயணம் செய்கிறார். இதையொட்டி நாந்தெட்டில் நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்று பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி கேட்கின்றனர். காங்கிரசால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாத்தோம். அதனால் தான் இன்று நீங்கள் (மோடி) பிரதமராக முடிந்தது.
ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பா.ஜனதா உறுதி அளித்தது. ஆனால் தற்போது அவர்கள் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டும் கொடுத்து உள்ளனர். 18 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?.
மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது. காங்கிரஸ் உணவு பாதுகாப்பை கொடுத்தது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா கொண்டு வந்த 10 திட்டங்களின் பெயரை அவர்களால் கூறமுடியுமா?.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பேசுகையில், " பா.ஜனதா ஒரு நிகழ்வு. ஆனால் காங்கிரஸ் ஒரு பேரியக்கம். பிரதமர் அவர் தாயை சந்திக்கும் போது கூட கேமராவை தான் பார்க்கிறார். ஏனெனில் அது ஒரு நிகழ்ச்சி. பா.ஜனதா நாட்டுக்கு பசி, பயம், ஊழலை தான் கொடுத்து உள்ளது" என்றார்.
இதேபோல கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டவர்களும் பேசினர்.
- தன்னை போன்று பலர் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பார்கள்.
- ராகுல் காந்தியின் நடை பயணத்தில் சிவசேனா எம்.எல்.ஏ. ஆதித்ய தாக்கரே பங்கேற்பு.
ஹிங்கோலி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாத யாத்திரை 65வது நாளான நேற்று மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தது. அப்போது தம்மை வரவேற்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். அவர்கள் மத்தியில் பேசிய அவர், சிறுபான்மை சமூக மக்கள் தனியாக இல்லை. தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராடும் அவர்களுடன் துணை நிற்போம் என்று உறுதியளித்தார்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களும் தாக்கப்படுகிறார்கள், இந்த சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழி பயத்தைப் போக்க வேண்டும், ஏனெனில் பயம் மனதில் மட்டுமே உள்ளது என்றும் ராகுல் குறிப்பிட்டார். தன்னை போன்று பலர் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் நீதித்துறை நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதால், அரசியலமைப்புச் சட்டம் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் நடை பயணத்தில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதால், கருத்தியல் வேறுபாடுகள் இருந்த போதும் ராகுல் காந்தியுடன் இணைந்ததாக கூறினார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி மாநிலத்திலும், நாட்டிலும் நடந்து வருகிறது. இதற்கு எதிராக, நாங்கள் சாலையில் இறங்கியுள்ளோம். இது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகாராஷ்டிராவின் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார்.
- ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் மகாராஷ்டிரா சென்றார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சிவசேனா தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.
- சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
- பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது.
மும்பை :
மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாக கோர்ட்டு அதன் உத்தரவில் கூறியது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு மூலம் மத்திய புலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் ஜாமீன் உத்தரவு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம். சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்புகிறோம்.
பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவு துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
- இந்திய அணியுடன் நாங்கள் உடன் நிற்கிறோம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்த வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடும் போது, நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இந்திய அணி முழு தேசத்திற்கும் உண்மையில் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்து வருகிறது. இருந்தாலும் உங்கள் இறுதிப் போட்டிக்கான பயணம் விரைவில் முடிந்து போனது.
எனினும் அணியின் ஒவ்வொரு விளையாட்டையும் நாங்கள் ரசித்தோம். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். இரண்டு முடிவுகளும் தவிர்க்க முடியாதவை. அதனால் நாங்கள் உங்கள் உடன் நிற்கிறோம். சிறந்த அணியுடன் நிற்க நாங்கள் இங்கு இருக்கிறோம். முன்னெப்போதையும் விட வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது.
- உண்மை வெற்றி பெற்றுள்ளது.
மும்பை :
பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டபோது, "கோர்ட்டுக்கு நன்றி" என்று கூறினார்.
இதையடுத்து அவர் சிவாஜிபார்க்கில் உள்ள பால்தாக்கரே சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது பற்றி கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) செய்தி தொடர்பாளர் சுஷ்மா அந்தரே நிருபர்களிடம் கூறுகையில், "புலி திரும்பி வந்துவிட்டது. சஞ்சய் ராவத் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை கட்சி பயப்பட வேண்டியதில்லை" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரோஹித் பவார், கூண்டில் இருந்து புலி விடுவிக்கப்பட்ட வீடியோவை டுவீட் செய்து, ராவத்துக்கு டேக் செய்தார். உண்மை வென்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சய் ராவத்தின் சகோதரரும், விக்ரோலி எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் கூறுகையில், "மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது. சட்டசபையில் காவிக்கொடி ஏற்றப்படுவதை காண அவர் மீண்டும் கட்சிக்காக பணியாற்ற தொடங்குவார். உண்மை வெற்றி பெற்றுள்ளது" என்றார்.
- ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐ.பி.எல். மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மும்பை:
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
- சஞ்சய் ராவத் சுமார் 100 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.
அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சஞ்சய் ராவத் பிரபாதேவி நகரில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.






