என் மலர்
மகாராஷ்டிரா
- சிறுவர், சிறுமிகள் தற்போது செல்போனுக்கு அடிமையாகி விட்டனர்.
- இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
யவத்மால் :
இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பலதரப்பட்ட வயதினரையும் வசீகரம் செய்துள்ளது. பலர் அதற்கு அடிமையாகி விட்டனர். குறிப்பாக பாடப்புத்தகங்கள் இருக்க வேண்டிய சிறுவர்களின் கையில் ஸ்மார்ட் போன்கள் உலாவுகின்றன.
இதனை பெற்றோர் கண்டிக்கும் பட்சத்தில் மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
இந்த நிலையில் யவத்மாலில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பன்சி கிராம பஞ்சாயத்தில் தான் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கஜானன் டேல் கூறியதாவது:-
சிறுவர், சிறுமிகள் தற்போது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும், சமூகவலைத்தளங்களில் உலாவுவதற்கும் அடிமையாகி விட்டனர். இதனால் சிறிய குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க கிராம சபையில் முக்கிய முடிவு எடுத்தோம். இதன்படி 18 வயதுகுட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த முடியாது.
இந்த முடிவை செயல்படுத்தும் போது தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். அதன்பிறகும், சிறுவர்களுக்கும் செல்போன் பயன்படுத்துவதை பார்த்தால் அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளை மீண்டும் படிக்க செய்ய வேண்டும், செல்போன்களால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "மராட்டியத்தில் உள்ள கிராமத்தில் தான் முதல்முறையாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆச்சரியப்பட வைக்கும் முறையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற கிராமங்களிலும் முயற்சி செய்ய தன்னார்வ தொண்டர்கள் முன்வர வேண்டும்" என்றார்.
- வீர சாவர்க்கர் மீது ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
- ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார்.
மும்பை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.
அப்போது அவர், "சாவர்க்கர் பா.ஜனதா மற்றும் ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுத தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தான் வீரமிக்கவர் என கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்" என்று பேசினார்.
வீரசாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தியின் நடைபயணம் 71-வது நாளாக நடந்தது. மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருடன் நடிகை ரியாசென் பங்கேற்றார்.
நடைபயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது வீர சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் வீரசாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார்.
"உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்" என்று கடைசி வரியில் வீரசாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்து காட்டினார்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வீரசாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாக தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைபயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " எந்த சூழ்நிலையிலும் வீரசாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் " என்றார்.
மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார். மகாராஷ்டிரா மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுப்பார்கள். வீர சாவர்க்கர் போல எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து உள்ளனர். அந்த கொடுமையிலும் அவர் சுதந்திரத்துக்காக பாடல் எழுதினார். மற்றவர் எழுதி கொடுப்பதை ராகுல்காந்தி வாசிக்கிறார். அந்த முட்டாள்களுக்கு வீர சாவர்க்கர் எத்தனை ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார் என்பது கூட தெரியாது" என கூறினார்.
வீரசாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் கருத்தில் தான் உடன்படவில்லை என்று மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கூறியிருக்கிறார்.
- வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- இந்தக் கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயேர்களுக்கு உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து கருணை மனு கொடுத்ததாகவும் கூறினார். அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில், நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல் காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார். இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல் காந்தி சொல்வது பொய்யா என சோனியா காந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது என காட்டமாக தெரிவித்தார்.
மேலும், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவமதித்து விட்டார் எனக்கூறி ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- ராகுல் காந்தி முன்னிலையில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல், வேறு மொழியில் ஒலிபரப்பப்படுகிறது.
- இந்தியாவை ஒன்றிணைப்பவர்களின் தேசிய கீதமா இது? என பாஜக தேசிய செயலாளர் கிண்டலடித்துள்ளார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது யாத்திரையை தொடங்கிய அவர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையின்போது, அந்தந்த பகுதி மக்களுடன் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இசைக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பாஜக தலைவர்கள் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு ராகுலையும், ஒற்றுமை யாத்திரையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கூட்டத்தின் நிறைவில் தேசிய கீதம் என்று ராகுல் காந்தி அறிவிக்கிறார். அப்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்கின்றனர். ஆனால் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் வேறு மொழியில் ஒலிபரப்பப்படுகிறது. இதைப் பார்த்து குழப்பமடைந்த ராகுல் காந்தி, அருகில் நின்றிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சைகை மூலம் தவறை சுட்டிக் காட்டுகிறார். அவர்கள், பாடல் பிளே செய்யும் மைக் செட் பொறுப்பாளரை அழைத்து சொல்கிறார்கள். இதையடுத்து உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு, முறையான தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி குறித்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செயலாளர் சுனில் தியோதர், இந்தியாவை ஒன்றிணைப்பவர்களின் தேசிய கீதமா இது? என கிண்டலடித்துள்ளார். அதே வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, "ராகுல் காந்தி, என்ன இது?" என்று கூறி உள்ளார்.
- டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
- பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவுரங்காபாத்:
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, 17 வயது சிறுமி, திடீரென வெளியே எகிறிக் குதித்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் வந்த ஆட்டோ வேகமாக சென்றுவிட்டது. கீழே விழுந்து கிடந்த அவர் மீது, பின்னால் வந்த ஒரு கார் மோதும் அபாயம் இருந்தது. ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சிலர் உதவி செய்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அந்த பெண், ஆட்டோவில் இருந்து குதித்தது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் ஹமீத், அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து பொதுவான சில கேள்விகளை கேட்டுள்ளார். சிறுமியும் சாதாரணமாக பதில் அளித்துள்ளார். அதன்பின் ஆட்டோ டிரைவர் படிப்படியாக அந்த சிறுமியை அச்சம் கொள்ள செய்யும் வகையில் ஆபாசமாக பேசியிருக்கிறார். ஆட்டோவையும் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி, கீழே குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுமி உள்ளூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சாலையில் இருந்த சுமார் 40 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஹமீத் மும்பையைச் சேர்ந்தவர். அவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவுரங்காபாத் வந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டி சமனில் முடிந்தது
- தபாங் டெல்லியை வீழ்த்தியது யு.பி.யோத்தா.
புனே:
9-வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் யு.பி.யோத்தா அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது வெற்றியை பெற்ற யு.பி.யோத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
- சென்னை அணி அதிரடி வீரர் பிராவோவை விடுவித்துள்ளது.
- ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)
மும்பை இந்தியன்ஸ்:
கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்:
மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதாம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்
குஜராத் டைட்டன்ஸ்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மணீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜாஸ் பரோகா
டெல்லி கேபிட்டல்ஸ்:
ஷர்துல் தாக்கூர், டிம் சீபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மந்தீப் சிங்
- சி.எஸ்.கே, மும்பை உள்பட 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.
- டெல்லி, ஐதராபாத் உள்பட 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.
மும்பை:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.
இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்ததால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
எம்.எஸ்.தோனி , ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி
மீதமுள்ள தொகை: 20.45 கோடி மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்
டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3 மீதமுள்ள தொகை: 20.55 கோடி
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா , ஹர்ப்ரீத் ப்ரார்
மீதமுள்ள தொகை: 32.2 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்
மீதமுள்ள தொகை: 42.25 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்
டிரேடிங் முறையில் வாங்கப்பட்டவர்கள்: ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன்
மீதமுள்ள தொகை: 7.05 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
குஜராத் டைட்டன்ஸ்:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் நங்வான், தர்ஷன் நங்வான், , ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது
மீதமுள்ள தொகை: 19.25 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்
மீதமுள்ள தொகை: 23.35 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால், மஹிபால், மஹிபால். சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்
மீதமுள்ள தொகை: 8.75 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், சாஹல், சாஹல். , கே.சி கரியப்பா
மீதமுள்ள தொகை: 13.2 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹ்மத், லுங்கி அகமது , முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்
மீதமுள்ள தொகை: 19.45 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் - 2
- மோடி நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார்.
- வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள 2 அல்லது 3 கோடீஸ்வரர்கள் பயன் அடைவதற்காக " மேட் இன் சீனா" தயாரிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஆதரிக்கிறார். அவர் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையோ, அக்னிபாத் திட்டமோ, ஜி.எஸ்.டி.யோ அவர்கள் கொண்டுவரும் அனைத்து கொள்கைகளும் மக்களை பயமுறுத்துகின்றன. வெறுப்பை உருவாக்குகின்றன. இந்த வெறுப்பு சமூகத்தில் பிளவை உண்டாக்குகிறது.
வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது தேசபக்தி, தவறான ஜி.எஸ்.டி.கொள்கை ஒரு தேசபக்தி, நாட்டில் வெறுப்பை பரப்புவது தேசபக்தி, 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது தேசபக்தி, வேலையின்மை தேசபக்தி மற்றும் பணவீக்கமும் தேசபக்தி. ஆனால் இது இந்தியாவின் தேசபக்தி இல்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் தேசபக்தி.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
- கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
- தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
மும்பை :
நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மந்திரி பதவி வகித்த நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் சிறப்பு கோர்ட்டில் நவாப் மாலிக் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதில், தன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேநேரம் அவரது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாகத்துறை, "முன்னாள் மந்திரி நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அசீனா பார்க்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்ற கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே அன்று ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையில், முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தனது வக்கீல் மூலமாக பி.யி.டி- சி.டி. ஸ்கேன் எடுக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஸ்கேன் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாட்டை கண்டறிய உதவும் சோதனை ஆகும். இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
- மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர்.
நாந்தெட் :
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி ஆட்சி, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் அதிருப்தியால் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேரின் உதவியுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் நாந்தெட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஏன் இன்னும் மந்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை? ஏன் என்றால் அவ்வாறு செய்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஊழல் மற்றும் அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். என்ன நடக்கிறது எந்த மராட்டியத்தில்?.
முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவர் உள்பட தற்போது பதவியில் உள்ள பல மந்திரிகளும் மகா விகாஸ் அகாடி அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதாவில் தலா 9 மந்திரிகள் உள்ளனர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக 43 மந்திரிகள் வரை இருக்கலாம்.
- பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது.
- பாராமதிக்கு நிர்மலா சீத்தாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மும்பை :
புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்த பகுதி தேசியவாத காங்கிரசின் கோட்டையாக உள்ளது. தற்போது பாராமதி எம்.பி.யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார்.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாராமதியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது.
எனவே பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாராமதிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் நிர்மலா சீதாராமன் பாராமதியில் கவனம் செலுத்துவதைவிட்டு விட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடு கிராஸ்டோ கூறியதாவது:-
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராமதி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பொருளாதாரத்தை மறந்துவிட்டார். பாராமதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அவர் மீண்டும் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பாராமதியில் சுப்ரியா சுலேயை பா.ஜனதா தோற்கடிக்கும் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் அவர் மத்திய நிதி மந்திரி என்பதை மறந்துவிட்டார். எனவே அவர் பாராமதியைவிட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






