என் மலர்tooltip icon

    டெல்லி

    • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக பீகார் - 45.21 சதவீதம், டெல்லி - 44.58 சதவீதம், அரியானா - 46.26 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 44.41 சதவீதம், ஜார்க்கண்ட் - 54.34 சதவீதம், ஒடிசா - 48.44 சதவீதம், உத்தர பிரதேசம் - 43.95 சதவீதம், மேற்கு வங்கம் - 70.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், 58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குப்பதிவு.

    மாநிலம் வாரியாக பீகார் - 36.48 சதவீதம், டெல்லி - 34.37 சதவீதம், அரியானா - 36.48 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 35.22 சதவீதம், ஜார்க்கண்ட் - 42.54 சதவீதம், ஒடிசா - 35.69 சதவீதம், உத்தர பிரதேசம் - 37.23 சதவீதம், மேற்கு வங்கம் - 54.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.
    • பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 300 இடங்களை கைப்பற்றும் என்று பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் மற்றொரு அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவும் அதேபோன்று கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் 240 முதல் 260 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளுக்கு 35 முதல் 45 இடங்கள் வரை கிடைக்கலாம்.


    எனவே பாரதிய ஜனதா கூட்டணிக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் 275 முதல் 305 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. ஆகையால் எந்த கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஜூன் 14-ந்தேதி உங்களுக்கு விடை தெரிந்து விடும்.

    இவ்வாறு அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

    • வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
    • டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

    மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு வாக்களித்தார்.

    வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இன்று வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம்.
    • மக்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

    மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். இதேபோல் தலைமை தேர்தல் அதிகாரிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவருடைய பெயர் இடம் பிடித்துள்ள வாக்குச்சாவடியில் இவர்தான் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வாக்களித்த பின் ஜெய்சங்கர் கூறியதாவது:-

    இந்த பூத்தில் நான் முதல் ஆண் வாக்காளராக வாக்களித்துள்ளேன். இதனால் வாக்களித்ததற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம். மக்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்- மோடி
    • ஒற்றுமை, நீதி, முக்கியமான பிரச்சனைக்காக வாக்களியுங்கள்- கார்கே

    டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 58 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தியில் "வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானது. உங்களுடைய வாக்குகளையும் முக்கியமானதாக்குக. தேர்தல் நடைமுறையில் உற்சாகமாக மக்கள் பங்கேற்கும்போது ஜனநாயகம் செழிப்பாகும். குறிப்பாக பெண்கள் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய நாட்டு மக்களே, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் கடைசி இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவை எட்டியுள்ளது.

    இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு. நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஒற்றுமை, நீதி, முக்கியமான பிரச்சனைக்காக வாக்களியுங்கள். வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள். வாக்கு மெஷினில் பட்டனை அழுத்தும் முன் இரண்டு முறை யோசியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    • அரியானா மாநில முதல்வர் நயப் சிங் சைனி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

    மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் மத்திய மந்திரிகள், வேட்பாளர்கள், பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    அரியானா மாநில முதல்வர் நயப் சிங் சைனி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

    பா.ஜனதா வேட்பாளர் பன்சூரி ஸ்வராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்.

    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பிர் தனது வாக்கை பதிவு செய்தார்.

    • அரியானா மாநிலத்தில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள்.
    • டெல்லியில் 162 வேட்பாளர்களில் 68 பேர் கோடீஸ்வரர்கள்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    6-ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். இவர்களில் 39 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 6.21 கோடி ரூபாய் ஆகும்.

    14 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 13 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை உள்ளது. 22 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 50 லட்சம் ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரை உள்ளது. 25 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சம் வரை உள்ளது. 26 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

    அரியானா மாநிலத்தில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். டெல்லியில் 162 வேட்பாளர்களில் 68 பேர் கோடீஸ்வரர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் 162 வேட்பாளர்களில் 59 பேர் கோடீஸ்வரர்கள். பீகார் 35 வேட்பாளர்களும், ஜார்கண்டில் 25 வேட்பாளர்களும், ஒடிசாவில் 28 வேட்பாளர்களும், மேற்கு வங்காளத்தில் 21 வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள்.

    இதில் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும். சந்த்ருப்த் மிஸ்ராவின் சொத்து மதிப்பு 482 கோடி ரூபாய் ஆகும். டாக்டர் சுஷில் குப்தாவின் சொத்து மதிப்பு 169 கோடி ரூபாய் ஆகும். நைனா சிங் சவுதாலாவின் சொத்து மதிப்பு 121 கோடி ரூபாய் ஆகும். மேனகா காந்தியின் சொத்து மதிப்பு 97 குாடி ரூபாய் ஆகும்.

    • டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.
    • அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

    இன்று காலை வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களுடன் தயாராக இருந்தனர். இந்த நிலையில் காலை ஏழு மணிக்கு 58 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    • கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
    • இதன்மூலம் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

    மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகக் கூறி பா.ஜ.க.வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா மற்றும் என்னையும் கைதுசெய்தனர். 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.

    நேற்றைய தினம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என கூறியிருக்கிறார். இதன்மூலம் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். அதை மறைப்பதற்காக, கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என கூறுகிறார்.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கு போலியானது என்பதை நீங்களே ஒப்புக்கொண்ட நிலையில், உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    • குஜராத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என நிபுணர்கள் எழுத தொடங்கினர்.
    • எத்தனை முறை என்பதை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.

    மக்களவை தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி என்.டி. டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து கூறியதாவது:-

    குஜராத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என நிபுணர்கள் எழுத தொடங்கினர். எத்தனை முறை என்பதை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. மோடி ஆட்சயில் இந்தியா எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அனிலிஸ்ட் செய்ய வேண்டும்.

    இது ஒரு பயணம். மோடி மூன்று முறை, ஐந்து முறை அல்லது ஏழு முறை வெற்றி பெறுவார். இந்தியாவின் 140 கோடி மக்களின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. ஆகவே இது தொடரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஜவஹர்லால் நேரு 1947-ம் ஆண்டு முதல் 1964 வரை பிரதமராக இருந்தார். 1951-52 தேர்தலில் முதன்முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1957 தேர்தலில் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • ஆபாச வீடியோ வெளியானதால் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்.
    • இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம்.

    கர்நாடகா மாநிலத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பெண்கள் இருப்பது போன்ற வீடியோக்கள் பல பென் டிரைவ்கள் மூலம் கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடகா மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

    இதற்கிடையே வீடியோ வெளியானதும் பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார். தூதரக சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருந்த அவர் எளிதாக ஜெர்மனி செல்ல வழிவகுத்தது. அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கடிதம் எழுந்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மத்திய அரச ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கர்நாடகா அரசிடமிருந்து கடந்த 21-ந்தேதி அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    மேலும் எம்எல்ஏ ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் மீது பலாத்கார வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய கர்நாடகா போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×