என் மலர்tooltip icon

    டெல்லி

    • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

    சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரி தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் சிறையில் இருந்து வெளியே வந்து கொடியேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுதொடர்பாக பொது நிர்வாகத்துறை மந்திரி கோபால் ராய் கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல் மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினேன். சுதந்திர தின விழாவில் மந்திரி அதிஷி தேசியக் கொடியேற்றுவார் என கெஜ்ரிவால் தெரிவித்தார். சத்ரசால் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோருகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதை ஏற்கமறுத்த பொது நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுதந்திர தின விழாவில் அதிஷி கொடி ஏற்றமுடியாது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சத்ரசால் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட் தேசியக் கொடி ஏற்றுவார் என கவர்னர் மாளிகை பரிந்துரை செய்துள்ளது.

    சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தை மதிப்பு சரிவால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு ரூ.20,000 கோடி இழப்பு
    • அதானியின் ஊழல் குறித்த விசாரணை செய்ய காங்கிரஸ் கோரிக்கை.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.

    ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

    செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

    ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.

    சந்தை மதிப்பு சரிவால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது

    இந்நிலையில், செபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டத்தை வரும் 22 ஆம் தேதி நடத்த உள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    • சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வேணுகோபால், பூபேஷ் பாகெல், அஜய் குமார், அஜய் மக்தான், சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.


    ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்துகிறது. சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    • பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
    • இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியது

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணைகளில் அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, பதஞ்சலி நிறுவனம் தனது தவறான விளம்பரங்களுக்காகப் பிரதான பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன்படி பத்திரிகைகளில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அந்த மன்னிப்பு விளம்பரங்கள் சிறிய அளவில் மட்டுமே இருந்ததாக இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் அதிருப்தி எழுந்தது. இருப்பினும், இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியதைஅடுத்து, அந்த உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. 

    • மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும்.
    • கருவூறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023' என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் 2036-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப் படுவதாகவும், 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருந்த நிலையில், 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதாவது, இந்தியாவில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. இது 2036-ம் ஆண்டில் ஆயிரத்திற்கு 952 ஆக உயரும் எனவும், இது பாலிய சமத்துவத்திற்கான நேர்மறை குறியீட்டை காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15 வயதிற்குட்பட்ட தனி நபர்களின் வீதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருவூறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த கால கட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2016 முதல் 2020-ம் ஆண்டு வரை கருவூறுதல் சதவீதம் 20-24 வயதில் 135.40-ல் இருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166-ல் இருந்து 139.6 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் 35-39 வயதில் கருவூறுதல் விகிதம் 32.7 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    • இந்தியா பதக்க பட்டியலில் 71-வது இடம் பிடித்தது.
    • 1 மணி அளவில் 117 வீரர், வீராங்கனைகளை மோடி சந்திக்கிறார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்று 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. பதக்க பட்டியலில் 71-வது இடம் கிடைத்தது.

    நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கம் கிடைத்தது.

    மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டலில் வெண் கலம் வென்றார். அதோடு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப் ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற வர லாற்றினை படைத்தார்.


    ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் பெற்றார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 57 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். ஆக்கியில் வெண்கலம் கிடைத்தது.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை சுதந்திர தினத்தன்று சந்திக்கிறார். சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு 1 மணி அளவில் 117 வீரர், வீராங்கனைகளை அவர் சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    • கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அதைத் தணிக்கை செய்து சான்றளிக்க பரிந்துரைக்கப்பட்டது
    • எழுத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் உள்ளதாகப் பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் குவிந்தது.

    சமூக ஊடகங்களில் இயங்கி வரும் வரும் சுயாதீன கண்டன்ட் கிரியேட்டர்களின் வரம்புகளை நிர்ணயிக்கும் வகையில் அவர்களை, ஒடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் நெறிமுறைக்குள் கொண்டுவரவும், அவர்களது கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அதைத் தணிக்கை செய்து சான்றளிக்கும் குழுவை அமைக்கும் வகையிலும் மத்திய அரசானது புதிய ஒலிபரப்பு சேவைகள் மசோதாவைக் கொண்டுவந்தது.

    கடந்த வருடம் நம்பர் 10 ஆம் தேதி பொதுவெளியில் இந்த மசோதாவை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த மசோதா மீதான கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அரசு கூறியிருந்தது. அதன்படி, இந்த மசோதா எழுத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் உள்ளதாகப் பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் குவிந்தது. எனவே தற்போது இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து புதிய வரைவு மசோதா தாயரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
    • இந்திராகாந்தி 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகி உள்ளார்.

    இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மோடி தற்போது நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்திக்குபிறகு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை வருகிற 15-ந்தேதி பெற உள்ளார்.

    முன்னாள் பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இந்திரா காந்தி 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரையிலும் பிறகு 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். இவர் 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இதில் அவர் 11 முறை தொடர்ச்சி யாக உரையாற்றியுள்ளார்.


    பிரதமர் மோடி கடந்த ஆண்டு, 10 முறை சுதந்திர தின உரையாற்றிய மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.

    பிரதமர் மோடி சுதந்திர தின முதல் உரையை கடந்த 2014-ல் ஆற்றினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம், ஜன்தன் வங்கிக் கணக்கு போன்ற புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது முதல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் வெளியிட்டு வருகிறார்.

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் 82 நிமிடங்களாகும். இது மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகமாகும்.

    முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இதற்கு சற்று நெருக்கமாக உரையாற்றி உள்ளார். 1997-ல் குஜ்ராலின் ஒரே ஒரு சுதந்திர தின உரை 71 நிமிடங்கள் நீடித்தது.


    பிரதமர் மோடியின் உரைகள் 2017-ல் மிகக் குறுகிய நேரமான 55 நிமிடங்களில் இருந்து 2016-ல் மிக நீண்ட நேரமான 94 நிமிடங்கள் வரை வேறுபடுகின்றன.

    அரசு ஆவணங்களின்படி, சுதந்திர தின உரைகளின் சராசரி நேரம் காலப்போக்கில் அதிகரித்தது. 1947-ல்நேரு ஆற்றிய முதல் உரை 24 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன், 1972-ல் இந்திரா காந்தி ஆற்றிய உரையே நீளமானது. இது 54 நிமிடங்கள் நீடித்தது.

    • 2036-ல் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருக்கும் நிலையில் 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும்.

    இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. இது 2036-ல் 1000-க்கு 952 ஆக உயரும் என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியா 2023-ல் பெண்கள் மற்றும் ஆண்கள் (Women and Men in India 2023) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    1000 ஆண்களுக்கு 952 பெண்கள் என்பது பாலிய சமத்துவத்திற்கான நேர்மறை குறியீட்டை காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2036-ல் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருக்கும் நிலையில் 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    15 வயதிற்குட்பட்ட நபர்களின் விகிதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கருவுறுதல் குறைவதால் இருக்கலாம் என்று அது கூறியது. மாறாக, இந்த காலகட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2016 முதல் 2020 வரை கருவுறுதல் சதவீதம் 20-24 வயதில் 135.40-ல் இருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166-ல் இருந்து 139.6 ஆக குறைந்துள்ளது.

    அதேவேளையில் 35-39 வயதில் கருவுறுதல் விகிதம் 32.7 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது வாழ்க்கையில் செட்லாகிய பின்னர் குடும்பத்தை விரிவுப்படுத்திக் கொள்ளலாம் என பெண்கள் நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரசவத்தின் போது தாய் இறப்பது பெரும் அளவில் குறைந்துள்ளது எனவும், பிரசவத்தின்போது பெண் சிசுக்கள் அதிகமாக இறக்கும் நிலையில் தற்போது ஆண்- பெண் சிசு சமமான விகிதத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
    • இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.

    அதில் 'அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதி நிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாக காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்தது' என்று குறிப்பிட்டு இருந்தது.

    ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள் நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12-வது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.

    இதற்கிடையே சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளை திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி அமைப்பான இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூன் 26-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

    செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

    ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. 

    சந்தை மதிப்பு சரிவால், இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது

    ஹிண்டன்பெர்க் - அதானி பங்குகள் - செபி விவகாரத்தின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் பெரிதளவு தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இன்றைய வர்த்தகம் சற்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

    • 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    • மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தை பிடித்துள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இந்த தரவரிசை பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

    தொடர்ந்து, பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.

    பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

    மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

    மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது.

    ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது.

    கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூன் மாதம் 5.08 சதவீதமாக இருந்தது.
    • 2023 ஜூலை மாதம் 7.44 சதவீதமாக இருந்தது.

    நுகர்வோர் விலை குறியீடு (CPI) அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் கடந்த மாதம் (ஜூன் 2024) 5.08 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இது 7.44 சதவீதமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை 2024) சில்லரை பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சில்லரை பணவீக்கம் 4 என இலக்கை கொண்டுள்ள நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் கடந்த மாதம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

    உணவு பொருட்களின் பணவீக்கம் 5.42 சதவீமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் இது 9.36 ஆக சதவீதமாக இருந்தது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    சில்லரை பணவீக்கம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. அதன்பின் தற்போது ஜூலை மாதம் 4 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

    ×