என் மலர்tooltip icon

    டெல்லி

    • வாகனப்புகை மாசுபாடு, சாலைப் புழுதி, கட்டுமானப் புழுதி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தீபாவளி போன்ற இந்து பண்டிகைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

    டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபாடு மிகவும் மோசமாக உள்ளது. இன்றும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று 400-க்கும் அதிகமான இடங்களில் காற்றுமாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லி கியாஸ் (எரிவாயு) அரங்கமாகியுள்ளது என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-

    இன்று, மீண்டும் ஒருமுறை காற்று மாசு மோசமான கட்டத்தை தாண்டியுள்ளது. 400 இடங்களில் வழக்கமான அளவை தாண்டியுள்ளது. டெல்லி எரிவாயு அரங்கமாகியுள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் பொறுப்பு. ஏனென்றால், பத்து ஆண்டுகளாக டெல்லியில் மாசு ஏற்படுவதற்கான உள் காரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    வாகன மாசுபாடு, சாலைப் புழுதி, கட்டுமானப் புழுதி அல்லது உயிர்ப்பொருள் எரிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தீபாவளி போன்ற இந்து பண்டிகைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். தீபாவளிக்கு பட்டாசு வெடித்தல் மற்றும் தீபம் ஏற்றுதலுக்கு தடைவிதிக்கிறார்கள். டெல்லி கியாஸ் அரங்கமாக மாறி வருகிறது. காற்று முதல் தண்ணீர் வரை விசமாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் விஷ அரசியலுக்கு நன்றி.

    இவ்வாறு ஷேசாத பூனவாலா தெரிவித்துள்ளார்.

    • அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும் போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.
    • கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன.

    சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இம்மாதம் 14-ந்தேதி முதல் நேற்று வரை 7 நாட்களில் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பாதுகாப்புக்கே அரசின் முன்னுரிமை என்றும், அவ்வாறு மிரட்டல் விடுப்பவர்களை NO FLY LIST-ல் சேர்க்க விதிகள் திருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், உள்துறை அமைச்சத்துடன் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும் போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.

    இதெற்கென சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன. கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சுறுத்தலும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டது. இந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டுள்ளோம். அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்தபோதிலும் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை என்றார். 

    • உடைமைகளை அதிகாரிகள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது.
    • பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரமாகி உள்ளது.

    இந்த நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருந்து பாரீஸ் நகருக்கு டெல்லி வழியாக பயணித்த ஒரு பெண் பயணி, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டார். அவரது உடைமைகளை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோப்பநாயை வரவழைத்து அதனை மோப்பம் பிடிக்கச் செய்தனர். நாய் மோப்பம் பிடித்து, அது போதைப்பொருள் என சுட்டிக்காட்டியது.

    உடைமைகளை திறந்து ஆய்வு செய்ததில், 'ஹைட்ரோபோபிக்' என்கிற உயர்ரக போதைப்பொருள் இருந்தது. மொத்தம் சுமார் 15 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் ஆகும். பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    • டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பா.ஜனதாவில் சேர்ந்தவர்கள் மொத்த எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    பா.ஜனதா உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அதில் பேசிய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ''தற்போது நடந்து வரும் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கையில், இதுவரை கட்சியில் சேர்ந்தவர்களில் 61 சதவீதம்பேர், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்'' என்று கூறினார்.

    இத்தகவலை பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா நிருபர்களிடம் தெரிவித்தார். பா.ஜனதாவில் சேர்ந்தவர்கள் மொத்த எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • இன்றும் நாளையும் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது.

    16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார். இந்த மாநாட்டிற்கிடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.

    கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

    காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான்.
    • அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்தில், அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான். அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத்துக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டது. மராட்டிய மாநிலத்தை வறட்சியற்ற மாநிலம் ஆக்குவோம் என்ற வாக்குறுதி வெற்று முழக்கமாகி விட்டது.

    காப்பீட்டு நிறுவனங்களுக்கு பா.ஜனதா அரசு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்து விட்டது.

    வெங்காயம், சோயாபீன் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டதால் அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதி வரி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி, கரும்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் சிக்கலில் உள்ளன. அதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசை அகற்றினால்தான் விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்று மராட்டிய மாநிலம் முடிவு செய்து விட்டது. மகாபரிவர்த்தன் என்ற காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கலந்துகொண்டார்.
    • கலாச்சார ராஜதந்திரத்தின் ஒரு சிறந்த அம்சம் நடனம்.

    டெல்லி:

    சர்வதேச இந்திய நடன திருவிழா நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இறுதிநாளான விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பேசியதாவது, கலை ஆதிக்கத்தை வரையறுக்கவில்லை. அது ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கலாச்சார ராஜதந்திரத்தின் ஒரு சிறந்த அம்சம் நடனம். மோதல்கள் நிறைந்த உலகில் மக்களை நடனமும், இசையும் ஒன்றிணைக்கிறது. நடன கலைஞர்கள்தான் கலாசாரம், அமைதிக்கான தூதர்கள்' என்றார்.

    • கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.

    நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக என்ஐஏ களத்தில் இறங்கினர்.

    மிரட்டல் வந்த இ மெயில் முகவரி மற்றும் சமூக வலைதள முகவரியை வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.

    பாதுகாப்பு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்துகிறது.

    • தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள்.
    • டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பணியை தொடங்கினார்கள்.

    ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினராக சேரலாம். வீடு தேடி வரும் நிர்வாகிகள் முன்னிலையில் மிஸ்டு கால் கொடுத்தும் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள முடியும்.

    மிஸ்டுகால் கொடுத்ததும் டெல்லி தலைமையில் இருந்து ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதன்படி உறுப்பினராக சேருபவரின் பெயர், முகவரி, தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், தொகுதி, பூத் எண், எந்த வகுப்பை சேர்ந்தவர் என்ற பல விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் எந்த விபரம் விடுபட்டாலும் கம்ப்யூட்டரில் பதிவாகாது.

    இப்படிப்பட்ட சிரமங்கள் இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே நடக்கிறது. இதுவரை 30 லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள்.

    இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள். இப்போது ஆன்லைன் உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை விபரத்தையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையில் உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசத்தை நீட்டித்து தரும்படி தமிழக பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

    அடுத்த கட்டமாக உள்கட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் கட்சி தேர்தல் தொடங்குகிறது. முதற்கட்டமாக கிளை, மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர்களாக மீனாட்சி, கதலி, ஜி.கே.செல்வகுமார் ஆகியோரை டெல்லி மேலிடம் நியமித்து உள்ளது.

    இவர்கள் 4 பேரும் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர். மேலிட வழி கர்டுதல்படி கட்சி தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்று வரும் தனியார் டி.வி.யின் உலக மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில் மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது.

    நாங்கள் 3-வது முறையாக ஆட்சிய அமைத்து 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    15 புதிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வீடுகளின் கூரை மேல் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. 90 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி 700 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது.

    'விக்சித் பாரத்' பற்றிய விவாதங்கள் இப்போது பொது விழிப்புணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. இது 'ஜனசக்தி' 'ராஷ்டிர சக்தி'க்கு மிகப்பெரிய உதாரணம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது
    • பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது.

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசால் டெல்லியின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் அதிஷி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிஆர்பிஎப் பள்ளி அருகில் நடந்த இந்த வெடிவிபத்து டெல்லியின் பாதுகாப்பு அமைப்பு சிதைந்துவருவதைக் காட்டுகிறது.

    டெல்லியின் சட்ட ஒழுங்கு மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் வருகிறது. ஆனால், பா.ஜ.க. அதை கவனிப்பதை விட்டுவிட்டு, டெல்லி அரசை முடக்குவதையே முழு நேர வேலையாக செய்து வருகிறது. மும்பையில் 1990 களில் இருந்த நிழல் உலகைப் போல் தற்போது டெல்லி உள்ளது.

    நகரத்தில் வெட்டவெளிச்சமாகத் துப்பாக்கிச்சூடும் வழிப்பறிகளும் நடக்கின்றன . பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததை போல, பள்ளிகள், மருத்துவமனை என அனைத்து கட்டமைப்பையும் சிதைத்து விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த விமர்சனத்தால் கொந்தளித்த பாஜக அதிஷியை பொம்மை முதல்வர் என்று விமர்சித்துள்ளது. மேலும் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது முதலமைச்சர் குடியிருப்பில் அதிக செலவு செய்து பொருட்களை வாங்கியாக ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளது.

    • பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுத்துவதை காண்காணிக்க குழு.
    • கண்காணிக்கும் குழுவின் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதை காண்காணிக்க விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை அமைத்துள்ளார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் செயல்படுவதை இந்த குழு கண்காணிக்கும்.

    இந்த குழுவின் முதல் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கும் அதிகாரத்தை சிவராஜ் சிங் சவுகானிடம் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 2014-ல் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரையிலான திட்டங்கள் குறித்து சிவராஜ் சிங் தலைமையிலான குழு காண்காணிக்கும்.

    திட்டங்களில் ஏதாவது குறைபாடு இருந்தாலோ அல்லது மந்திரிகளிடையிலான ஆதரவு தேவைப்பட்டாலோ பிரதமர் அலுவலகம் எதிர்பார்ப்பதை சம்பந்தபட்ட துறைகளின் செயலாளர்களிடம் சவுகான் எடுத்துரைப்பார்.

    அன்றாட நிர்வாகம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் ஆகிய இரண்டிலும் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதால், அரசாங்க திட்டங்களைச் செயல்படுத்துவதில் கால தாமதம் குறித்து கவலைப்படுவதாகவும், தனது அச்சங்களை அடிக்கடி தனது செயலர்கள் மற்றம் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளுடன் தனிப்பட்ட கூட்டங்களில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகத்தான் சிவராஜ் சிங் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முன்னாள் முதல்வராவார். மூன்று முறை இவர் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். 2024-ல் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டபோது, இவரது பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

    ×