என் மலர்
ஆந்திர பிரதேசம்
- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது.
- நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய போகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக-வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் (16) வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது.
அதேவேளையில் ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 12-ந்தேதி ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போது மோடி ஓபிசி-க்களின் இடஒதுக்கீட்டை பறித்து அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் இருக்கும்வரை அதை நடக்க விடமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், விளிம்பு நிலையில் இருக்கம் மக்களின் தரநிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்துவோம் என சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாரா லோகேஷ் கூறியதாவது:-
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
சிறுபான்மையினர் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய தனி வருமானம் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. ஒரு அரசாக என்னுடைய பொறுப்பு அவர்களை வறுமையில் இருந்து மீட்பதுதான். எனவே நான் எடுக்கும் எந்த முடிவுகளும் சமரச அரசியல் (வாக்கு வங்கிக்காக இடஒதுக்கீடு வழங்குவது) அல்ல, மாறாக அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே.
நீங்கள் நம்முடைய நாட்டை வளர்ச்சி நாடாக்க விரும்பினால், யாரையும் பின்னாடி விடமுடியாது. அவர்களை ஒன்றிணைத்து, சிறந்த வாய்ப்பை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது, தெலுங்கு தேசம் கட்சியின் முத்திரையாக (Trade Mark) இருந்து வருகிறது.
நாங்கள் ஒருபோதுமு சபாநாயகர் பதவி குறித்து பாஜகவிடம் பேசவில்லை. நாங்கள் மாநிலத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றுதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் மந்திரி பதவி கேட்கவில்லை. மாநிலத்தின் நலம்தான் எங்களுடைய நலம்.
இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெற அவரது மகனான நாரா லோகேஷ் முக்கிய பங்காற்றினார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதுபோது, தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 4 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் குளிரில் கடும் அவதி அடைந்தனர்.
- திருப்பதியில் நேற்று 62,161 பேர் தரிசனம் செய்தனர். 28,923 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, நந்தியாலா, கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
நேற்று திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசியது.
இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் குளிரில் கடும் அவதி அடைந்தனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 62,161 பேர் தரிசனம் செய்தனர். 28,923 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
கர்னூல் மாவட்டம் பாலேருவாகு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த ஆந்திர மாநில அரசு பஸ் மழை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
- தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை அந்த பகுதியில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரை சார்ந்த சுற்றுலா தலத்திற்கு, முன்னதாக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் - அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
எனினும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த சுற்றுலா தலத்திற்கு ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என பெயர் மாற்றம் செய்தார். இவரது இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜென் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனால் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் கடற்கரையின் பெயர் பலகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அப்துல் கலாம் வியூ பாயிண்ட் என்ற பழைய பெயரை மீண்டும் ஸ்டிக்கரிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும்.
- அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்.
பிரிவினை மறு சீரமைப்பு சட்டம் 2014-ன் படி அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
- விஜயவாடாவில் எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.
இதையடுத்து ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இணைய உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்திய அமைச்சரவையில் சபாநாயகர், 2 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகளை கேட்டு பெறுவது குறித்து எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
- பவன் கல்யாணை ஆதரித்வர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 100 முதல் 120 இடங்களில் வெற்றி பெறுவார் என புரோக்கர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பந்தயம் கட்டினர்.
இதற்கு ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
50 முதல் 60 இடங்களை பெறுவார் எனவும் 68 முதல் 78 இடங்கள் வருவார் என மொத்தம் ரூ. 2 ஆயிரம் கோடியை தாண்டி பந்தயம் சென்றது. ஆனால் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து யாரும் பந்தயம் கட்ட வில்லை.
இதேபோல் பிதாபுரத்தில் பவன் கல்யாண் வெற்றி பெறுவார் எனவும் தோல்வி அடைவார் எனவும் ரூ. 200 கோடிக்கு மேல் பந்தயம் கட்டினா். பவன் கல்யாணை ஆதரித்து பணம் கட்டியவர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.
ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நம்பி பணம் கட்டியவர்கள் ரூ. 2 ஆயிரம் கோடி வரை பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.
- ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 9-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 12-ந்தேதிக்கு (புதன்கிழமை) தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ந்தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளதால் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
- தெலுங்கு தேசம் வெற்றியானது ஆந்திர மாநில வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி.
ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர்.
தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி. என் வாழ்நாளில் இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை.
வெளிநாடுகளில் இருந்து வந்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விருப்பப்பட்டு வாக்களித்து சென்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களுக்கு சேவையாற்ற அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ஜனதா கூட்டணியில் உறுதியாக நீடிப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மிக மோசமான துன்பங்களை சந்தித்தேன்.
தற்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் என்னை எதற்காக கைது செய்தார்கள் என்பதற்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. நான் பல்வேறு அரசியல் மாற்றங்களை பார்த்திருக்கிறேன். நான் அனுபவமிக்கவன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்ததால் தேர்தலில் வென்றோம்.
உள்துறை மந்திரி அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
- பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க ‘இந்தியா’ கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார். அக்கட்சி பாராளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க 'இந்தியா' கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவோடு ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், இவர்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
- முதல் மந்திரி ஜெகன் ரெட்டி தனது ராஜினாமாவை கவர்னரிடம் அளித்துள்ளார்.
அமராவதி:
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால் கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.
ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் ஜெகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.
- 135 இடங்களில் முன்னிலை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.
ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.
- சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 131 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






