என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? செய்தியாளர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு
    X

    இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? செய்தியாளர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க ‘இந்தியா’ கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார். அக்கட்சி பாராளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க 'இந்தியா' கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவோடு ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், இவர்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×