என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பட்டாணியை வைத்து சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 கப்
    ரவை - 2 டேபிள்ஸ்பூன்
    தயிர் - சிறிதளவு
    பச்சை பட்டாணி - 1 கப்
    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    சர்க்கரை - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    பட்டாணியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவையுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். 

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பட்டாணி கலவையை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். 

    அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்கவும். 

    மாவு கலவையை பூரிகளாக தேய்த்து அதனுள் பச்சை பட்டாணி பூரண கலவையை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறலாம்.

    சூப்பரான பட்டாணி பூரி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ருசியான தோசை வகைகளை காய்கறிகளை கொண்டே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் வெண்டைக்காய் தோசை தயாரிப்பது பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    பெ.வெங்காயம் - 1
    கேரட் - 1
    வெண்டைக்காய் - 100 கிராம்
    கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு தழை

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெண்டைக்காய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

    ஓரளவு அரைபட்டதும் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க வைக்கவும்.

    மாவு புளித்ததும் கடுகு சீரகத்தை தாளித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.

    அது சூடானதும் மாவை ஊற்றவும். அதனுடன் வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    காலையில் மீந்து போன சப்பாத்தியை வைத்து மாலையில் சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    சப்பாத்தி - 3
    வெங்காயம் - 1
    சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
    சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்

    பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்

    பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்கவும்

    குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    விருப்பப்பட்டால் இதனுடன் முட்டை அல்லது விருப்பப்பட்ட காய்கள் சேர்த்து கொள்ளவும்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம். இந்த ரசம் உடல் வலியை போக்கும். மேலும் சளி, தொண்டை வலியை குணமாக்கும்.
    தேவையான பொருட்கள்

    பிஞ்சு இஞ்சி - 25 கிராம்
    பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 டம்ளர்
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    சர்க்கரை - ஒரு சிட்டிகை
    எலுமிச்சைச் சாறு - அரைப் பழச் சாறு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    நெய் - 2 டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
    பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    தக்காளி - 1

    செய்முறை

    தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நெய் விட்டுச் சூடானதும் அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.

    பிறகு தக்காளி, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி பருப்புத் தண்ணீரைச் சேருங்கள்.

    நுரைகட்டி வரும்போது கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து இறக்குங்கள். கொதிக்கவிடக் கூடாது.

    சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    அனைவருக்கும் நிச்சயம் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இங்கு பெருமாள் கோவில் புளியோதரை/ஐயங்கார் புளியோதரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள்:

    சாதம் - 2 கப்

    புளிக்காய்ச்சல்...

    நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    புளி - 1 எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு

    பொடி செய்வதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 2
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    எள் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:


    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    அடுத்து அதில் உப்பு சேர்த்த, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், ஐயங்கார் புளியோதரை ரெடி!!!

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இந்த ‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.
    தேவையான பொருட்கள்

    வெந்தயக் கீரை - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    வெண்ணெய் - சிறிதளவு
    காய்ச்சிய பால் - அரை டம்ளர்
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை


    வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

    கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும்.

    பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.

    காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.

    எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

    இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    இப்போது மேத்தி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு கலர்ஃபுல் குடைமிளகாய்களை சேர்த்து பிரியாணி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்
    பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப்
    தக்காளி, வெங்காயம் - தலா 1
    எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப.

    வறுத்துப் பொடிக்க:

    துவரம்பருப்பு - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை


    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துருவலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மூன்று வண்ண குடைமிளகாய்களை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும்.

    அடுத்து அதில் உதிரியாக வடித்த சாதம், கொத்தமல்லியை சேர்ந்துக் கலக்கவும்.

    சூப்பரான குடைமிளகாய் பிரியாணி ரெடி.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

    தேவையான பொருட்கள்

    துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்
    காலிஃப்ளவர் தண்டு - அரை கப்
    கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பால் - ஒரு கப்
    மிளகுத்தூள் - சிறிதளவு
    பூண்டு - 5 பல்
    நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    முதலில் காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.

    2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

    சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் டிரை ஃப்ரூட்ஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாதாம் - கால் கப்
    முந்திரி - கால் கப்
    வறுத்த வேர்க்கடலை - கால் கப்
    வறுத்த வெள்ளை எள் - கால் கப்
    பொடித்த வெல்லம் - ஒரு கப்
    நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்து கிளறவும்.

    வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும்.

    பிறகு இதை சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி கனமாக தேய்க்கவும்.

    ஐந்து நிமிடங்களுக்கு பிறகு துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. தொற்று நோய்க்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
    தேவையான பொருட்கள்

    பசலைக்கீரை - 200 கிராம்,
    காளான் - 100 கிராம் ,
    வெங்காயம் - 1 பெரிய,
    தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி,
    முட்டைகோஸ் - 100 கிராம் ,
    கேரட் - 1,
    சீரகம் - 1 தேக்கரண்டி ,
    மிளகாய் - 2,
    சோம்பு - 1 தேக்கரண்டி ,
    குடைமிளகாய் - 1 ,
    உப்பும், இஞ்சியும் - தேவைக்கு.

    செய்முறை:

    காய்களையும், கீரையையும் நறுக்கிக்கொள்ளவும்.

    இஞ்சியை அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி விழுதை கொட்டி வதக்கவும்.

    அத்துடன் மிளகாயை நறுக்கிப்போட்டு, சீரகம், சோம்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், காளான் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டிக் கிளறவும்.

    பசலைக் கீரையையும், உப்பையும் சேருங்கள்.

    சிறிதளவு தண்ணீர் விட்டு கீரை, காய்கறிகளை வேகவிட்டு இறக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் ரெடி.

    குறிப்பு:- கீரை, காய்கறிகளை மூடிவைத்தே வேகவைக்கவும். அப்படி செய்தால்தான் அதில் உள்ள முழு சத்துக்களும் வீணாகாமல் கிடைக்கும்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    காளான் பக்கோடா மாலை நேரத்தில் டீ மற்றும் காப்பியுடன் சேர்த்து உண்ணக் கூடிய சிற்றுண்டி ஆகும். இன்று சுவையான காளான் பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - ஒரு எண்ணம் (நடுத்தர அளவு)
    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    இஞ்சி - முக்கால் சுண்டுவிரல் அளவு
    வெள்ளைப் பூண்டு - 2 பற்கள் (பெரியது)
    காஷ்மீரி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
    கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
    மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்
    மசாலா பொடி - 1 ஸ்பூன்
    மிளகு பொடி - ¾ ஸ்பூன்
    சீரகப் பொடி - ½ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
    சமையல் எண்ணெய் - பொரித்தெடுப்பதற்கு ஏற்ப

    செய்முறை

    காளானை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.

    கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்

    வாயகன்ற பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய காளான் போட்டு, அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.

    அதனுடன் கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    பின்னர் அதனுடன் கரம் மசாலா பொடி, மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மெதுவாக ஒருசேர பிசுபிசுப்புப் பதத்திற்குப் பிசையவும்.

    வெங்காயம் மற்றும் காளானில் உள்ள தண்ணீரால், கலவை எண்ணெயில் பொரித்தெடுக்க தேவையான பதத்திற்கு வந்துவிடும். ஆகவே தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை.

    வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.

    சுவையான காளான் பக்கோடா தயார்.

    குறிப்பு

    விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம்.

    மாவினை தயார் செய்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நேரங்கடந்தால் கலவை தண்ணீர்விட ஆரம்பிக்கும்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது. இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    லச்ச கொட்ட கீரை - 100 கிராம்
    பாசிப் பருப்பு - 20 கிராம்
    சீரகம் - 3 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - விருப்பத்திற்கேற்ப
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    நல்ல எண்ணெய் - 3 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
    உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் - 3
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

     செய்முறை

    லச்ச கொட்ட கீரையை அலசி நடுநரம்பினையும், காம்பையும் நீக்கி பின்னர் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

    மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

    பாசிப் பருப்பை அலசி கொதித்த தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், சீரகம், உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் நறுக்கிய கீரை, தேவையான உப்பு சேர்த்து ஒருசேர கிளறி, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.

    கீரை வெந்ததும் பாசிப் பருப்பின் நீரை வடித்துவிட்டு, பாசிப் பருப்பை கீரையில் சேர்த்துக் கிளறவும்.

    ஒருநிமிடம் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

    பின்னர் தேங்காய் துருவலை கீரையுடன் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

    சுவையான லச்ச கொட்டை கீரை பொரியல்  தயார்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×