search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கலர்ஃபுல் குடைமிளகாய் பிரியாணி
    X
    கலர்ஃபுல் குடைமிளகாய் பிரியாணி

    கலர்ஃபுல் குடைமிளகாய் பிரியாணி

    குழந்தைகளுக்கு கலர்ஃபுல் குடைமிளகாய்களை சேர்த்து பிரியாணி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்
    பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப்
    தக்காளி, வெங்காயம் - தலா 1
    எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப.

    வறுத்துப் பொடிக்க:

    துவரம்பருப்பு - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை


    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துருவலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மூன்று வண்ண குடைமிளகாய்களை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும்.

    அடுத்து அதில் உதிரியாக வடித்த சாதம், கொத்தமல்லியை சேர்ந்துக் கலக்கவும்.

    சூப்பரான குடைமிளகாய் பிரியாணி ரெடி.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×