என் மலர்tooltip icon

    சமையல்

    பிடிகருணை கிழங்கு மசியல் மிகவும் பிரபலமான செட்டிநாடு சமையல் வகையைச் சேர்ந்தது. ரொம்பவும் சுவையான இந்த மசியலை செய்வது மிகவும் எளிது.
    தேவையான பொருட்கள்:

    பிடிகருணைக் கிழங்கு - 5
    வெங்காயம் - 1
    பூண்டு - 2 பல்
    பச்சை மிளகாய் - 1
    தக்காளி - 1
    சிவப்பு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    புளி -  சிறு கோலி அளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    கருணைக் கிழங்கை நன்றாக மண் போக கழுவி, குக்கரில் போட்டு கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

    புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். 

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 

    ப.மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். 

    பூண்டை நசுக்கி வைக்கவும்.

    குக்கரில் பிரஷர் அடங்கியதும், கிழங்கை வெளியே எடுத்து, ஆற வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். 

    மசித்த கிழங்குடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.  

    பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு  சேர்த்து வதக்கவும்.

    இவை  லேசாக வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மசித்த கிழங்கைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.

    பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து சிம்மில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து 5 நிமிடங்கள் சிம்மிலேயே வைத்துக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான செட்டிநாட்டு பிடிகருணை மசியல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெள்ளரிக்காய், மோர் உடலின் சூட்டைக் குறைக்கும். இன்று இவை இரண்டையும் சேர்த்து சூப்பரான மோர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் 

    வெண்ணெய் நீக்கிய தயிர் - 100 மில்லி
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    வெள்ளரிக்காய் - அரை
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 200 மில்லி

    செய்முறை:

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வெண்ணெய் நீக்கிய தயிரில் தண்னீர் விட்டு நன்கு கலந்துகொள்ளவும். 

    இதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 

    சுவையான வெள்ளரி மோர் ரெடி. புளிக்கும் முன்பே சுவைக்கவும்.

    குறிப்பு:

    தண்ணீர் சேர்த்த தயிரை மிக்ஸியில் (அ) பிளன்டரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். மோர் உடலின் சூட்டைக் குறைக்கும். மோர் தயாரிக்கும் போது தயிர் ஆடையை அகற்றி விடவும். தயிர் ஆடையிலிருந்து வெண்ணெய் எடுக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பு   - 250 கி
    முருங்கைக்காய் – 1
    து.பருப்பு – 50 கி
    வெங்காயம்– 1
    இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
    தக்காளி – 2
    மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
    தனியா தூள் –  4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
    புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைத்துக் கொள்ள:

    தேங்காய் – 2 மேசைக்கரண்டி
    கசகசா  - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க:

    பிரியாணி இலை – 1
    பட்டை - சிறிய துண்டு
    கல் பாசி – சிறிது
    சோம்பு – 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய்   - 2
    கறிவேப்பிலை – 1  கொத்து
    நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். 

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். 

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

    பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 

    பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். 

    பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.

    புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கும். அவர்களுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    வரகரிசி, இட்லி அரிசி - தலா அரை கிலோ
    உளுந்து - 100 கிராம்
    வெந்தயம் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    காய்கறி மசாலா செய்யத் தேவையானவை

    துருவிய கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், டர்னிப் - தலா 2 டேபிள் ஸ்பூன்
    துருவிய உருளைக் கிழங்கு - 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவைப் புளிக்கவையுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

    அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னிப், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

    கூடவே மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

    வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். 

    தோசைக் கல்லைச் சூடாக்கி தயாராக வைத்துள்ள மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள். 

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு கொண்டைக்கடலை கறி என்றவுடனே அனைவருக்கும் கேரளப் புட்டும், கடலைக் கறியும் தான் ஞாபகத்தில் வரும். இது சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    கருப்பு கொண்டக்கடலை – 150 கி
    பெரிய  வெங்காயம்  – 1
    பூண்டு (நசுக்கியது) – 3 பல்
    தக்காளி – 2
    மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்
    மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – சிறிதளவு
    உப்பு – தேவையான அளவு

    ரைத்துக் கொள்ள:

    தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
    கசகசா – கால் டீஸ்பூன்
    முந்திரி (விரும்பினால்) – 5  

    தாளிக்க:

    எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
    பட்டை  – 1” துண்டு
    சோம்பு  – 1 டீஸ்பூன்
    கருவேப்பிலை – சிறிதளவு


    செய்முறை:

    கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 

    பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

    இத்துடன்  மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்க்கவும். இத்துடன் 1 கப்  தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும். 

    பிறகு  உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    சுவையான கருப்பு கொண்டைக்கடலை கறியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் ஐட்டங்களுடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டு சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று நாட்டு சோளம் சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டு சோளம் - 1 கப்
    உளுத்தம்பருப்பு  - கால் கப்
    துவரம் பருப்பு - ½ கப்
    கடலைப்பருப்பு - ½  கப்
    காய்ந்த மிளகாய் - 10
    சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காயம் - 1 டீஸ்பூன் 
    மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன் 
    கறிவேப்பிலை -சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்    
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக்  கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற வைக்கவும். 

    அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 

    பிறகு சோளம், உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

    ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 

    இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.

    அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

    சத்தான சோள அடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த நண்டு மிளகு மசாலாவை சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருள்கள்:

    நண்டு  - 500 கி
    பெரிய வெங்காயம் – 1  
    தக்காளி – 2 
    மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைத்துக் கொள்ள:

    தேங்காய் – 1 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2 அல்லது 3  
    பூண்டு – 15 பல்
    மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
    சோம்பு – 1 தேக்கரண்டி
    கசகசா  - 1 தேக்கரண்டி

    தாளிக்க:

    பட்டை - சிறிய துண்டு
    கல் பாசி – சிறிது
    சோம்பு – 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை – 1  கொத்து
    எண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.

    அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.

    பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

    வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும். 

    இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே  கிளறி விடவும்.

    நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

    சுவையான நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்! 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் உகந்தது வெள்ளரிக்காய் அடை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்
     
    புழுங்கலரிசி - 1 கப்,
    முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,
    தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,
    காய்ந்தமிளகாய் - 4,
    இஞ்சி - சிறு துண்டு,
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
    நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். 

    முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்கவும். 

    பின்னர் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காலிபிளவர் - 1 சிறியது
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    வறுத்து பொடிக்க :

    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    சோம்பு - 1 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - தேவைக்கு
    பட்டை - 1/2 இன்ச் அளவு
    கிராம்பு - 1
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது  

    அரைக்க :

    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை :

    வெந்நீரில் முழு காலிபிளவரை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   

    கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    தேங்காயையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.  

    தக்காளி நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.

    காலிபிளவர் நன்கு வெந்ததும் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.  

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    குருமா திக்கானதும் அதில் கொத்தமல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான காலிபிளவர் குருமா ரெடி.

    * இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
    தேவையானவை:

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை: 

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 

    மிளகு தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.

    நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கலந்து வைத்துள்ள மிளகு தூள், சீரகத்தூள், உப்பு கலவையை சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.

    கடைசியாக அதன் மீது சாட் மசாலா தூள் தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இட்லி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் குடைமிளகாய் சாம்பார். இன்று இந்த சாம்பாரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    குடைமிளகாய் - 2
    சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
    வெங்காயம், தக்காளி - தலா 1
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
    புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 1/2 கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 5
    உப்பு - தேவைக்கேற்ப
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து  கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.

    சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். இன்று மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 4 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய சிறுகீரை - 4 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 4 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - சிறிதளவு
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
    வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளவும்.

    முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

    கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

    சத்தான மல்டி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×