search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்
    X
    செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

    செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

    எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பு   - 250 கி
    முருங்கைக்காய் – 1
    து.பருப்பு – 50 கி
    வெங்காயம்– 1
    இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
    தக்காளி – 2
    மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
    தனியா தூள் –  4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
    புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைத்துக் கொள்ள:

    தேங்காய் – 2 மேசைக்கரண்டி
    கசகசா  - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க:

    பிரியாணி இலை – 1
    பட்டை - சிறிய துண்டு
    கல் பாசி – சிறிது
    சோம்பு – 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய்   - 2
    கறிவேப்பிலை – 1  கொத்து
    நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். 

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். 

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

    பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 

    பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். 

    பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.

    புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×