என் மலர்
சமையல்
குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டை புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
முட்டை - 3
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பட்டை - 3
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி சாறு - கால் கப்
புதினா - அரை கட்டு
கொத்தமல்லி தலை - அரை கட்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு அரிசியில் உள்ள நீர் சுண்டும் வரை அரிசி உடையாமல் வதக்கவும்.
இதனுடன் தேங்காய் பால் 1 கப், கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு லேசாக நுரை வரும்படி அடித்து வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
அடுத்து அதில் முட்டை ஊற்றி இடைவிடாது கிளறிவிட்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த முட்டைக் கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான முட்டை புலாவ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை பயறு அற்புதமான உணவாகிறது. பச்சை பயறுவை பயன்படுத்தி நோயுற்றுவர்களுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். இந்த கஞ்சி எளிதாக ஜீரணம் ஆகும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை,
பால் - 1 கப்.
செய்முறை:
பச்சை பயறுவை நன்றாக வறுத்து பொடி செய்து எடுக்கவும்.
இதில் நீர்விட்டு கரைத்து வடிகட்டவும்.
இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு சேர்க்கவும்.
கஞ்சி பதம் வந்தபின் பால் சேர்க்கவும்.
இந்த பச்சை பயறு பால் கஞ்சியை குடித்து வர நோயுற்றவர்களின் உடல் பலம் பெறும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள் :
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு
அரிசி - 1 1/2 கப்
அரைக்க :
கொத்தமல்லி தழை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
உப்பு - ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
செய்முறை :
அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
வெங்காயம் வதங்கியம் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன் சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
சுவையான கொத்தமல்லி புலாவ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மைதாவில் செய்த பரோட்டா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும். இதனால் எந்த தீங்கும் ஏற்படுத்தாத கடலை மாவில் எப்படி பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கடலை மாவு -1 கப்
கோதுமை மாவு - அரை கப்
மஞ்சள் தூள்- தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தய கீரை - 1 தேக்கரண்டி
சீரக விதைகள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் கடலை மாவு, தேவையான அளவு பெருங்காயம், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் போன்ற எல்லா பொருள்களையும் சேர்த்து சாப்பத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த கோதுமை மாவினை உருண்டைகளாக திரட்டி, ரொட்டி போல் தட்டையாக தேய்த்து கொள்ளவும்.
பிறகு பராத்தாவை சூடான தவாவில்போட்டு இரண்டு பக்கங்களும் பொன்னிறம் ஆகும் வரை வேக வைக்க வேண்டும்.
சூடாக தயாரான பராத்தாவிற்கு மிகவும் பொருத்தமான தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - பாதி சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் - 1 எண்ணம்
கொத்தமல்லி இலை - 1 கொத்து
கறிவேப்பிலை - 3 கீற்று
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை துருவிக்கொள்ளவும்
பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி நசுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விடவும்.
வாயகன்ற பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் பொடி, கரம் மசால் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். வடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். திக்காக வேண்டுமென்றால் சிறிது கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை கையில் எடுத்து வடைகளாகத் தட்டி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு வெங்காய வடை தயார். இதனை மாலை நேரத்தில் டீ-யுடன் சேர்த்து உண்ணப் பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
சோயா பீன்ஸ், பாசி பயறு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை பயறு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம்பெறும்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
கடலைப்பருப்பு -1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
சோயா பயறு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 7
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு..
செய்முறை:
முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, து.பருப்பு, க.பருப்பு, பாசி பருப்பு மற்றும் சோயா பயறு ஆகியவை குறிப்பிட்ட அளவில் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவையுடன் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு மாவை அடை போல் தட்டி கொள்ளவும். இருபுறமும் நன்றாக வேக எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
சூடான சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை தயார்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
முருங்கைக்காயில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சரி வாங்க சிம்பிளான ஸ்டைலில் முருங்கை மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்...
தேவையான பொருள்கள்:
முருங்கைக்காய் - 4
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் முருங்கைக்காயை துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
சின்ன வெங்காயம் சேர்ப்பதால் முருங்கை மசாலா சுவையாக இருக்க உதவும்.
கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் 20 நிமிடத்தில் சுவையான காரசாரமான முருங்கை மசாலா தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) - 5 இதழ்
தண்ணீர் 1 கப் - 150 ml
நாட்டு சர்க்கரை அல்லது தேன் -1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு 5 நிமிடங்கள் கொதித்தபின் வடிக்கட்டி நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.
ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பிடித்த வகையில் உணவு தயாரித்துக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
பொரிகடலை மாவு - ½ கப்
வெல்லம் - ½ கப்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முதலில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ராகி மற்றும் பொரிகடலை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ½ கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், எள்ளு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
சத்தான, சுவையான ராகி இனிப்பு தட்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முளைக்கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாக உள்ளது. முளைக்கீரையில் இன்று கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் (கீறியது) - 2
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும்.
கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்கவும்.
இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
சூப்பரான சத்தான முளைக்கீரை கூட்டு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
மட்டன் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 20
இஞ்சி - பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு சீரகத் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் - 1 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரி - 3
தாளிக்க:
பிரியாணி இலை - 1
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி - சிறிது
ஏலக்காய் - 1
லவங்கம் - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
கழுவிய மட்டனை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும்.
அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும்.
பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்.
தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்குத் தொட்டும் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பீட்ரூட் மசாலா.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - கால் கிலோ
சிறிய வெங்காயம் - 10
பூண்டு (நசுக்கியது) - 3 பல்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, நன்கு கழுவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்.
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். இடையிடையே கிளறி விட்டு, காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சத்தான பீட்ரூட் மசாலா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






