என் மலர்
சமையல்
புரதச்சத்து நிறைந்த ராஜ்மா தானியத்தை பலரும் வேக வைத்து மாலை நேரத்தில் சாப்பிடுவார்கள். ஆனால் அதைக் காட்டிலும் நல்ல சுவையில் என்றைக்காவது இப்படி கட்லெட்டாக சமைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெரிய உருளைக்கிழங்கு - 1
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1/2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
ராஜ்மாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து 4 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் அதை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளுங்கள்.
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
அடுத்து காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
அடுத்து அரைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறுங்கள். மசாலாக்கள் ராஜ்மாவுடன் கலக்க வேண்டும். போதுமான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பை அணைத்துவிட்டு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளுங்கள்.
பிசைந்ததும் கைகளில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்துக்கொண்டு கட்லெட் போல் கைகளில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் அடுப்பில் தவா வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த கட்லெட்டை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான ராஜ்மா கட்லெட் தயார்.
இதற்கு புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீரில் கிரேவி, பிரை, புலாவ் என பல வகைகளை சமைக்கலாம். இப்பொழுது ஹோட்டல் ஸ்டைலில் எப்படி பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வதை பற்றி பார்க்கலாம்...
தேவையான பொருள்கள்:
தோசை மாவு - 2 கப்
பன்னீர் - ஒரு கப்
வெங்காயம் - 2
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மசாலா பொருள்கள்:
தனியா தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா- 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்
செய்முறை:
பன்னீரை துருவி அல்லது சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பிறகு அதில் பன்னீர், தனியா தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவை சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் மசாலா ரெடி.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவி வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
பொன்னிறமாக மாறியவுடன் தோசையை ரோல் செய்வது போல் செய்தால் சுவையான பன்னீர் ஸ்டப்ஃடு தோசை தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் நண்டு ரிச் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
நண்டு - ஒரு கிலோ
தேங்காய் பால் - மூன்று டம்ளர்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 4
மஞ்சள்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
அதில் பச்சை மிளகாயைக் கீறியும், கொத்தமல்லித்தழையை போடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நண்டு புரண்டார்போல் எண்ணெய்விட்டுக் கொண்டு இருக்கும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான நண்டு ரிச் மசாலா தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டியட்டில் இருப்பவர்கள் இந்த அடையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சத்தானது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 கப்,
முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,
தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
இஞ்சி - சிறு துண்டு,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை
புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்கவும்.
கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சத்தான வெள்ளரிக்காய் அடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செஸ்வான் சாஸ் செய்வதற்கு
வரமிளகாய் - 6
இஞ்சி - சிறிதளவு
பூண்டு பல் - 3
ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 2
கேரட் - சிறிதளவு
பீன்ஸ் - சிறிதளவு
குடைமிளகாய் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் செஸ்வான் சாஸ் செய்வதற்கு 6 முதல் 7 வரை மிளகாயை சுடுதண்ணியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். செஷ்வான் சாஸ் இப்பொழுது தயாராகிவிட்டது.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்கவும்
கேரட், பீன்ஸ் நன்கு வதங்கிய பின்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சிறிதளவு மிளகு தூளை சேர்த்துக் கொள்ளவும்.
முன்பே தயார் செய்து வைத்திருந்த செஸ்வான் பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறவும்.
கிளறிய பிறகு வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுத்தால் காரசாரமான செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன. இன்று சாமை அரிசியில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு (மிளகு 8-10)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு
தண்ணீர் - 450 மில்லி.
முந்திரி - 3 (பொடித்துக்கொள்ளவும்)
செய்முறை:
நன்கு கழுவி சுத்தம் செய்த சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான சாமைப் பொங்கல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 100 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்
கேரட் - 20 கிராம்
பீன்ஸ் - 20 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
தேவையான அளவு - உப்பு
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை வதக்கவும் .
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
அடுத்து நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்....
கடைசியாக வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து வெங்காய தாள் தூவி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.....
சூப்பரான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலை உணவு ஹெல்தியாக இருந்தால்தான் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இயங்க முடியும். இன்று சத்தான ஓட்ஸ் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1/2 கப்
முட்டை - 2
தக்காளி - சிறியது 1
வெங்காயம் - சிறியது 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கேரட் - சிறியது 1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக்கொள்ளுங்கள்.
முட்டையை உடைத்து வெள்ளையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பவுலில் அரைத்த ஓட்ஸுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக உப்பு, முட்டை வெள்ளையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
தோசை கல் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்துவிட்டு தோசைபோல் ஊற்றவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான ஓட்ஸ் வெஜிடபிள் ஆம்லெட் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பருப்பு பாயாசம், பால் பாயாசம் என்று பல வித பாயாசம் செய்வார்கள். ஆனால் இன்று பன்னீரில் பாயாசம் செய்து குடும்பத்தாரை அசத்துங்கள்..
தேவையான பொருள்கள்:
பால் - 1 லிட்டர்
பன்னீர் - 1 கப்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 6
சர்க்கரை - 1/4 கப்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு
பாதாம் - 5
பிஸ்தா - 5.
செய்முறை:
பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளற வேண்டும்.
கிளறும் பொழுது கட்டிகள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்த பிறகு பால் கெட்டி ஆகி விடும்.
பிறகு அதில் உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக கெட்டி பதத்தில் வந்த பிறகு அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விடவும்..
அடுத்து அடுப்பை அனைத்து பாயசத்தை ஒரு பௌலில் மாற்றி பாதாம், பிஸ்தா குங்கும பூ ஆகியவை கொண்டு அலங்கரித்தால் பன்னீர் பாயசம் தயார்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கில் வறுவல், சிப்ஸ், போண்டா என பல ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், எளிமையான முறையில் வீட்டிலேயே உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பால் - 1 டம்ளர்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க:
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பால் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வேகவைக்கவும்.
பிறகு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி கொள்ளவும்.
இதனிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் மைதா மாவு, பால், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து, அதை அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்கவும்.
பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியான பிறகு கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. நீங்கள் வீட்டில் சாப்பாத்தி செய்தால் இந்த மேத்தி மலாய் பன்னீரை தவறாமல் ட்ரை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
எண்ணெய் - 4 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
முந்திரி - 3 ஸ்பூன்
பாதாம் -3 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன்
க்ரீம் - ½ கப்
உப்பு -தேவையான அளவு
சர்க்கரை -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித் தூள் -1 ஸ்பூன்
சீரகப் பொடி -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்.
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும்.
முந்திரி மற்றும் பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம்,வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 15-20 நிமிடம் வேக வைக்கவும்.
கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மேத்தி மலாய் பன்னீர் ரெடி...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் கொண்டு பல வகையான ஹெல்தி உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில் இந்த அடை உங்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 7
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 துண்டு
தக்காளி - 1/2 பாதி
கேரட் - 1
ஓமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஓட்ஸை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
ஓட்ஸ் ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள்.
குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் குடை மிளகாய், பச்சை மிளகாய், சீரகம், ஓமம், இஞ்சி, கொத்தமல்லி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடுத்ததாக மாவை அடை போல் தட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
அவ்வளவுதான் ஓட்ஸ் மசாலா அடை தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






