search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெள்ளரிக்காய் அடை
    X
    வெள்ளரிக்காய் அடை

    நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் அடை

    பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் உகந்தது வெள்ளரிக்காய் அடை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்
     
    புழுங்கலரிசி - 1 கப்,
    முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,
    தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,
    காய்ந்தமிளகாய் - 4,
    இஞ்சி - சிறு துண்டு,
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
    நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். 

    முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்கவும். 

    பின்னர் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×