என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும்.
21 -ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வேதனை. இன்றைய காலக்கட்டத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பெண்களுக்கு அநீதிகளும், கொடுமைகளும், எல்லா தரப்பிலும், எல்லா வயதினருக்கும் பாகுபாடின்றி சரளமாக இழைக்கப்படுகிறது. கருவிலே அழிப்பது, சிசுக்கொலை என தொடங்கி வாழ்நாள் இறுதிவரை கொடுமைகள்தொடர் கதையாக தொடர்கிறது.
பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைப்பார்க்குமிடம், வழிப்பாட்டு தலங்கள், பஸ், ரெயில், என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இதைத்தவிர ஆணவ கொலைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பெண்கள், மனிதர்களாக, அவர்களுக்கும், அறிவு, ஆற்றல் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாது ஆண் சமூகம் அவர்களை இன்பம் துய்க்கும் பொருளாக மட்டுமே பார்ப்பது கொடுமையிலும் கொடுமை. குடும்ப சூழலை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட முடியாத நிலை தானே நிலவுகிறது.
தாய் தந்தையர் கடும் சொற்களால் கண்டிப்பது, காயம் ஏற்படும்படி அடிப்பது, மன உளைச்சல் ஏற்படும்படி தண்டிப்பது என்று பல விதமான கொடுமைகளை சிறுவயதில் இருந்தே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பத்து வயதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வகுப்பில் முதல் இடம் பெறவில்லை என்று அறையில் பூட்டிவைக்கப்பட்ட மாணவி, விலை உயர்ந்த பேனாவை தொலைத்து விட்டாள் என்பதற்காக வீட்டிற்கு வெளியே பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்ட சிறுமி என்பன போன்ற நிகழ்வுகளை அன்றாடம் நாம் காண்கிறோம்.
பெண்கள் என்றால் கண்ணுக்கு அழகாக, லட்சணமாக இருக்கவேண்டும் என்கிற மூடக்கருத்து பல பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறது. கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய் என்று விமர்சித்து அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாக்குதல் ஒருபுறம் என்றால்,.மறு புறம் உனக்கு பாடத் தெரியுமா ஆடத் தெரியுமா என்று கேட்டு அவர்களை கடையில் விற்கும் பொருள்கள் போல பார்க்கப்படுகிறது.
சின்னஞ்சிறு சிறுமியர்களை பலநாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு கொள்ளும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் உடன் பணியாற்றும் ஊழியர்கள், மேலதிகாரிகள் என பாலியல் தொடர்பான சித்திரவதைகள் தொடர்கின்றன. குழுக்களாக ஆண்கள், பெண்கள் கூடியிருக்கும்போது பாலியல் தொடர்பான நகைச்சுவைகள், சீண்டல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன. தன் இச்சைக்கு இணங்காத பெண்ணின் மீது அமிலம் வீசி தாக்குதல், ஊர்திகளை கொண்டு ஏற்றி கொல்லுதல், பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொலைசெய்தல் என்ற பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை, ஓயாத வீட்டு வேலைகள், மனைவியின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் உடலுறவுகள், கட்டாய கருச்சிதைவுகள் என தொடரும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.. இத்தகைய சூழலில், பெண்களுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்புகள் என்ன என்பதை அறிவோம்.
பெண்கள் பாதுகாப்பு சட்ட விதிகள் 2005-ன் படி, குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள், 2018-ல், சுமார் 2,785 சச்சரவுகளை நீதிமன்றம் செல்லாமலேயே தீர்த்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு 5 பெண்களில், இரண்டு பெண்கள், கணவர்களால், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1983-ல் இந்திய தண்டனை சட்டம் 498-ன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் புகார்கள் கொடுக்க எல்லா பெண்களும் முன்வருவதில்லை. நிதி நிலைமை, குழந்தைகளின் எதிர்காலம், சமூகப் பார்வை போன்றவை புகார் அளிக்கத் தடைகளாக உள்ளன.
வரதட்சணை தொல்லையால் பெண்களை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடியது. வரதட்சணை தடுப்பு சட்டம் பெருமளவில் இத்தகைய குற்றங்களை குறைத்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, பெண்கள் தைரியமாக காவல்நிலையத்துக்கு தாங்களாவே சென்று முறையிட வாய்ப்பு அதிகரித்தது. இருந்தாலும், பல இடங்களில், விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், வன்கொடுமைகள் திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.
வரதட்சணை தடுப்பு சட்டம் (1961), பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (2013), கடத்தல் தடுப்பு சட்டம் (1986), சதி தடுப்பு சட்டம் (1987), பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடுப்பு) சட்டம் (1986), குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் (2005), என்று பெண்களுக்காக சட்டங்கள் உள்ளன. இது தவிர, இந்தியக் குற்றவியல் சட்டமும் (திருத்தப்பட்டது 2013) பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்து திருமண சட்டத்தின்படி, கணவனால் இழைக்கப்படும் கொடுமையில் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் பெற சட்டத்தில் வழியுள்ளன. பரஸ்பர உடன்பாட்டின்படி விவாகரத்து பெற வழிவகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கிடைக்க சட்டங்கள் வழிவகுக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிப்பார்கள். மீண்டும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு தக்க ஆலோசனை கூறுவர். ஒருவேளை, இம்முயற்சி கைக்கூடவில்லை யென்றால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முழுமையாக விசாரணை செய்து தக்க ஆலோசனைகள் வழங்குவார். இந்த முயற்சியிலும் வெற்றிப்பெற முடியவில்லையெனில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், வன்முறைகளையும் முதலில் மற்றவர்களுடன் பேசவேண்டும். அலுவலகமாக இருந்தால் சக பெண் ஊழியர்களிடம் பேச வேண்டும். அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தனியாக போராடுவதைவிட குழுவாக இணைந்து எதிர்கொள்ளும்போது பலன்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களை பொறுப்புள்ளவர்களாகவும், பெண்களை மதிக்கக்கூடிய தன்மையுடனும் உருவாக்கவேண்டும்.
தாட்சாயணி, ஐகோர்ட்டு வக்கீல், சென்னை.

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவை (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.
தேவையான பொருட்கள் :
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்
காராமணி - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்

செய்முறை :
காராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.
காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
பழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)
அதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
அனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.
சூப்பரான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் ரெடி.

உப்பு - சுவைக்கேற்ப

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோம்.
உஸ்! அப்பா என்ன வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா?
ஒவ்வொரு சீஸனுக்கும் ஏற்ற வகையில் நமக்கு பழங்கள் கிடைக்கின்றன. பழங்களும் பச்சைக்காய்கறிகளும் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இவற்றிலுள்ள மினரல்களும் விட்டமின்களும் நமது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும், அதுமட்டுமல்ல இதில் உள்ள நீர்ச்சத்தும் உடலுக்கு குளுமையை அளிக்கும். இவை நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற உதவும்.
நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த சம்மருக்கு முக்கியமான தாரகமந்திரம் குறைவாக சாப்பிட்டு நிறைவாக வாழுங்கள். சரி பழம், பச்சைக்காய்கறி சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம் , எந்த பழம், காய் என்று பார்ப்போமா?
பழங்களில் பெரிக்கள் - ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, ராஸ்ப்பெரி, பப்பாளி, மாம்பழம், கீர்ணிப்பழம், தர்பூசணி, ஆப்பிள், செர்ரி, காய்கறிகளில் பாகற்காய், கோஸ், காலிப்ளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆல்கஹால் உள்ள பானங்கள், சாப்ட் டிரிங்ஸ் குடிப்பதை தவிருங்கள், ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள். மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதை தவிருங்கள். அவ்வாறு குடிப்பது அந்த நேரத்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கெடுதலையே விளைவிக்கும்.
லெமன் ஜூஸ், இளநீர் குடியுங்கள். “மோர் பெருக்கி நெய்யுருக்கி” என்பார்கள், நீர்த்த மோர் குடியுங்கள். சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பண்டங்களையும் தவிருங்கள். சூடான, மசாலா உணவுப்பதார்த்தங்களை அறவே தவிருங்கள். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம்.
சென்சிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. அதுவும், பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்திக்கொள்ள நினைக்கும் போது, மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் கண்களுக்கு சரியாக மேக்கப் செய்யவில்லையென்றால், கண்களில் எரிச்சல் ஏற்படும், கண்கள் கலங்கும், பலருக்கு கண்கள் சிவந்து விடும். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில எளிய மேக்கப் டிப்ஸ்கள்.
* சுத்தம் செய்யப்படாத பிரஷ்சைக் கொண்டு உங்கள் கண்களுக்கு மேக்கப் செய்தால் அதில் உள்ள அழுக்குகள் உங்கள் கண்களைப் பாதிக்கும். எனவே, அந்த பிரஷ்சை சோப்பு அல்லது ஷாம்பு போட்டு சுத்தமாகக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து விட்டு, அப்புறம் உபயோகிக்கவும்
* உங்களுக்கு சென்சிட்டிவ்வான கண்கள் இருந்தால், பவுடர் ஷேடோக்கள் அல்லது பளபளப்பான ஷேடோக்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்குப்பதில், க்ரீம் ஷேடோக்களையே பயன்படுத்துங்கள்.
* கண்களின் உள் பகுதிகளில் லைனிங் செய்வது நல்லதுதான். அது கண்களைப் பெரிதாகவும் அழகாகவும் காட்டும். ஆனால், சென்சிட்டிவ் கண்கள் உடையவர்கள் இதைத் தவிர்த்தே ஆகவேண்டும்.
* பிரைமர்கள் மற்றும் பவுண்டேசன் ஆகியவை மிகவும் முக்கியம். அவை உங்கள் சென்சிட்டிவ்வான கண்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளும். ஆனால் சரியான மற்றும் தரமான பிரைமர்கள் மற்றும் பவுண்டேசன் பொருள்களை மட்டும் பயன்படுத்தவும்.
* சென்சிட்டிவ்வான கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன்தான். அதில் உள்ள நார்ச்சத்துப்பொருள்கள் கண்களுக்கு நல்லதல்ல. எனவே, மஸ்காராவைத் தவிர்க்கவும்.
* சென்சிட்டிவ்வான கண்களை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேக்கப் போடும்போது கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களைக் கசக்கக்கூடாது.
* எவ்வளவு அக்கறையோடு உங்கள் கண்களுக்கும் முகத்துக்கும் மேக்கப் போடுகிறீர்களோ, அதே அக்கறையோடும் நேரத்தோடும் சரியான வழிமுறைகளோடும் மேக்கப்பை தேவையில்லாத போது கலைத்துவிடவும் வேண்டும். உங்கள் சென்சிட்டிவ்வான கண்களுக்கு இதுதான் பாதுகாப்பு.
* சென்சிட்டிவ்வான கண்களை உடைய நீங்கள், அடர்த்தியான கருமைநிற கண் மையைப் பயன்படுத்துவதற்கு பதில், சில லைட்டான நிறங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். அது உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்தூள், பெருங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
பூண்டை நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும். ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான வெந்தயக்கீரை ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேசபெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.
சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? இந்தப் பதிவில் இதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.
குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும். நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.
குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும். கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.
முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.
குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.
குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு ஏதாவது வார்த்தை சொல்லி தரும்போது அதன் படத்தை காண்பித்து சொல்லி தரலாம். நாய், பூனை படம் காண்பித்து அதன் பின் அந்த வார்த்தை சொல்லி தரலாம். குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, சொல்லிக் கொடுக்க வேண்டும்.
படங்கள், வார்த்தை, சத்தம், ரைம்ஸ், பாடல்கள்… இதெல்லாம் பேசுவதற்கான பயிற்சிகள்தான்.
மம்மு, புவா போன்ற மழலை வார்த்தைகளை சொல்லலாம். சாப்பாடு, சாதம், ரசம், குழம்பு, பிஸ்கெட் என நேரடியாக வார்த்தைகளை சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு பாட்டுபாடி காண்பிக்கலாம். ரைம்ஸ் சிடி போடலாம். குழந்தை பாடல்களை ஒலிக்க விடலாம்.
அதிகமாக வெட்கப்படும் குழந்தைகளின் வெட்கத்தைப் போக்க பெற்றோர் நிறைய பழக வேண்டும். குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்கலாம். பின்னர் பேச பயிற்சி தரலாம்.
குழந்தைகளை பெரியவர்கள், மற்ற குழந்தைகள் போன்ற அனைவரிடமும் பழகினால்தான் பேச்சு விரைவில் வரும்.
அதிகமாக நாம் குழந்தையிடம் நேரம் செலவழிக்கவில்லை எனில் குழந்தை பேச தாமதமாகும்.
உறவு முறைகளின் பெயர்கள், உங்களது பெயர், விலங்குகள் பெயர் போன்றவற்றை சொல்லி தரலாம்.
கதைகளை சொல்லுங்கள். புதுப்புது வார்த்தைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கதை சொல்லுவது அற்புதமான பயிற்சி.

அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி.

மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு ஏதாவது வார்த்தை சொல்லி தரும்போது அதன் படத்தை காண்பித்து சொல்லி தரலாம். நாய், பூனை படம் காண்பித்து அதன் பின் அந்த வார்த்தை சொல்லி தரலாம். குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, சொல்லிக் கொடுக்க வேண்டும்.
படங்கள், வார்த்தை, சத்தம், ரைம்ஸ், பாடல்கள்… இதெல்லாம் பேசுவதற்கான பயிற்சிகள்தான்.
மம்மு, புவா போன்ற மழலை வார்த்தைகளை சொல்லலாம். சாப்பாடு, சாதம், ரசம், குழம்பு, பிஸ்கெட் என நேரடியாக வார்த்தைகளை சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு பாட்டுபாடி காண்பிக்கலாம். ரைம்ஸ் சிடி போடலாம். குழந்தை பாடல்களை ஒலிக்க விடலாம்.
அதிகமாக வெட்கப்படும் குழந்தைகளின் வெட்கத்தைப் போக்க பெற்றோர் நிறைய பழக வேண்டும். குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்கலாம். பின்னர் பேச பயிற்சி தரலாம்.
குழந்தைகளை பெரியவர்கள், மற்ற குழந்தைகள் போன்ற அனைவரிடமும் பழகினால்தான் பேச்சு விரைவில் வரும்.
அதிகமாக நாம் குழந்தையிடம் நேரம் செலவழிக்கவில்லை எனில் குழந்தை பேச தாமதமாகும்.
உறவு முறைகளின் பெயர்கள், உங்களது பெயர், விலங்குகள் பெயர் போன்றவற்றை சொல்லி தரலாம்.
கதைகளை சொல்லுங்கள். புதுப்புது வார்த்தைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கதை சொல்லுவது அற்புதமான பயிற்சி.
கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.
கர்ப்பக்கால விதிகள் தவிர்க்க வேண்டியவை
* எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
* திறந்த வெளியில் கர்ப்பிணிகள் படுத்துத் தூங்க கூடாது.
* கருவுற்ற 10-16 வது வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மசக்கையைத் தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.
* அடிக்கடி தாம்பத்ய உறவு, அலைச்சல், அதிக எடை சுமப்பது, இறுக்கமான ஆடைகள் அணிவது, நீண்ட நேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவை செய்ய கூடாது.
* தூங்கி கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம் போட்டோ பயமுறுத்தியோ எழுப்ப கூடாது.
* வேக்சிங் செய்ய கூடாது.
* பகலில் தூங்க கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் வந்து விடும்.
* சிறுநீரை அடக்க கூடாது. அடக்குவதால் சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்.
* உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
* வாகனங்களில் பயணம் செய்வது, சமநிலையில்லாத சேர், ஆசனங்களில் உட்கார்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவை செய்ய கூடாது.
* பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், சம்பங்கள், செய்திகள் ஆகியவற்றைப் பார்க்க கூடாது.
* கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் மரபணு மூலமாக குழந்தையைத் தாக்கலாம்.
காதில் ஹேர் பின் போன்ற அன்னிய பொருட்களை நுழைப்பது போன்ற செயல்கள் கூடாது.
செய்ய வேண்டியவை
* வெள்ளை, இளஞ்சிவப்பு போன்ற மைல்டான நிறங்களில் உடைகளை அணியலாம். அடர்நிறங்களைத் தவிர்க்கலாம்.
* சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக குளியல் சூரணம், நீராட்டுச் சூரணம் ஆகியவற்றைக் குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இதனால் உடல் சுத்தமாகும். * பிறப்புறுப்பு, மார்பக பகுதிகளில் கிருமிகள் உண்டாவது தடுக்கப்படும். கர்ப்பமும் பாதுகாக்கப்படும்.
* உணவில் சீரகம், சோம்பு, இஞ்சி, ஏலக்காய், இந்துப்பு ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* ஆரம்பக் கால முதல் ஆறு மாதங்கள் வரை பால், வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
* உயரம் குறைவான கட்டில் மெத்தையில் படுக்கலாம்.
* குங்குமப்பூவை லேசாக வறுத்து, பொடித்துக் காய்ச்சிய பசும்பாலில் குடித்து வர இரும்புச்சத்து கிடைக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.
* உலர்திராட்சை, ஆல்பகோடா, மாதுளை, நெல்லி வற்றல், நாரத்தை, எலுமிச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தி மசக்கையைத் தடுக்கலாம்.
* வாந்தி வந்தால் வாந்தி எடுப்பது நல்லது. மாத்திரையால் தடுக்க முயன்றால் குடல் பாதிப்புகள் ஏற்படலாம்.
* தளர்வான ஆடைகளை அணியலாம்.
* வெயில் காலங்களில் மட்டும் உடல் சூட்டைக் கட்டுப்படுத்த பகலில் 2 மணி நேரம் வரை தூங்கலாம்.
* இரவில் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
* மருத்துவரின் ஆலோசனைப்படி, மாதம் ஒரு முறை என ஆறாம் மாதம் வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.
* இளஞ்சூடான வெந்நீரில் தினமும் குளிக்கலாம். வாரம் இருமுறை தலைக்கு குளிக்கலாம்.
* வெயில் காலங்களில் தினந்தோறும் அல்லது வாரம் 4 முறை குளிக்கலாம். ஈரத்தை நன்கு துவட்டி விட வேண்டும். சைனஸ், தலைவலி வருபவர்கள் தவிர்க்கலாம்.
* கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தை வளர வளர வயிற்றுத் தசைகள் தளர்ந்து, கூபக தசைகள் மற்றும் இடுப்பு தசைகளில் இறுக்கம் ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும்.
* கீரைகள், காய்கறிகள், விதை அதிகம் உள்ள பழங்கள், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் வராது. மலச்சிக்கல் அதிக நாட்கள் நீடித்தால் திரிபலா சூரணம் 3 அல்லது 5 கிராம் தினமும் இரவில் வெந்நீருடன் கலந்து சாப்பிடுங்கள்.
* சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால், நீரைப் பெருக்க கூடிய சுரை, பூசணி, புடலை, பரங்கி, வெண்டை, காசினிக் கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
* கர்ப்பிணிகள் எளிமையான, சிறிய வேலைகளை செய்யலாம்.
* தினமும் 15-30 நிமிடங்கள் வீட்டிலே, வெளிப்புறத்திலே நடைப்பயிற்சி செய்வது நல்லது.
* எளிமையான சமையல் வேலை, நிமிர்ந்தபடி கூட்டுதல், துணிகளை அலசி காயப் போடுதல் ஆகியவற்றை செய்யலாம்.
* மெல்லிய இசை கேட்கலாம். மியூசிக் தெரபி கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.

நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரெய்தா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெய்தாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - 1,
புளிக்காத தயிர் -1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - அலங்கரிக்க.
தாளிக்க :
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை,

செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும்.
உருளைக்கிழங்கு - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - 1,
புளிக்காத தயிர் -1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - அலங்கரிக்க.
தாளிக்க :
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை,
பெருங்காயம்

செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும்.
இந்த கலவையை தயிருடன் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டயட்டின் மூலம் வெறும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளப்படுவது தான் தடுக்கப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சியின் மூலம் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்க முடியும்.
உண்மையில் சொல்லப்போனால், டயட்டின் மூலம் வெறும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளப்படுவது தான் தடுக்கப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சியின் மூலம் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்க முடியும்.
அதற்காக வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்து உடல் எடையைக் குறைக்கவோ மற்றும் உடலை நல்ல வடிவமைப்புடன் வைத்துக் கொள்ளவோ முடியாது. முதலில் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு ஆற்றல் வேண்டும். அத்தகைய ஆற்றலை உணவின் மூலம் தான் பெற முடியும். அதற்காக டயட் இருந்து தான் ஆற்றல் பெற வேண்டும் என்பதில்லை.
சொல்லப்போனால், வெறும் டயட்டை மேற்கொண்டால் உடல் சோம்பேறித்தனத்துடன் தான் இருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்தால், சுறுசுறுப்புடன இருப்பது போல் உணர முடியும். இதுப்போன்று நிறைய காரணங்கள் உள்ளன. சரி, இப்போது ஏன் டயட்டை விட உடற்பயிற்சி சிறந்தது என்று பார்ப்போம்.
கடுமையான டயட் அல்லது பட்டினி கிடப்பது மிகவும் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் வயிறு நிறைய சரியான உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சியை செய்து வருவது எடையைக் குறைப்பதற்கான யதார்த்தமான அணுகுமுறையாகும்.
டயட்டில் இருந்து, உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதை விட, உடற்பயிற்சி மூலம் ஏராளமான கலோரிகளை எரிக்கலாம். மற்றொரு முக்கியமான நன்மை, உங்களுக்கு விருப்பமான உணவை உட்கொண்டு, அதற்கேற்ப உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
டயட்டில் இருந்தால், ஒருகுறிப்பிட்ட உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் சத்து குறைபாடு ஏற்படும். ஆனால் உடற்பயிற்சி செய்து வந்தால், டயட் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்த எந்த உணவையும் உட்கொள்ளலாம்.
டயட் மூலம் கொழுப்புக்களை மட்டுமே குறைக்க முடியும். ஆனால் உடற்பயிற்சியின் மூலம் அழகான உடலமைப்பைப் பெற முடியும். உடற்பயிற்சி உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். ஆனால் டயட் இருந்தால், விரைவில் உடலில் உள்ள ஆற்றல் குறைந்து, சோர்ந்துவிடக்கூடும்.

பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.
“எப்படி இவ்வளவு மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.” இது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கவலை தோய்ந்த வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கடிதம் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வரை நடந்து முடிந்த முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எழுதப்பட்டது. முதல் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 489. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க் களின் எண்ணிக்கை, வெறும் 22 தான். 62 ஆண்டுகள் ஆன நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த இடங்கள் 543. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை 66. இது மொத்த இடங்களில் 12.15 சதவீதம். முக்கிய பதவிகளை அரசியலில் பெண்கள் அலங்கரித்தாலும், காலங்கள் மாறினாலும், நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை என்பது கசப்பான உண்மை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் உலகளவில் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் 190 நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 153. நமது அண்டை நாடான பாகிஸ்தானில்கூட பெண்களுக்கு நடப்பு நாடாளுமன்றத்தில் 20 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தெற்கு சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாதான் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களை கொண்ட நாடு. இங்கு 61 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.
உலகளவில் பெண் எம்.பி.க்களின் சராசரி எண்ணிக்கை 22.4 சதவீதம். அதைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலை.இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெண்களின் பங்களிப்பு ஒற்றை இலக்கத்தில் அமைந்திருக்கிறது என்பது இன்னும் வெட்கக்கேடானது. அது 9 சதவீதம். அதிலும், புதுச்சேரி, நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பெண் பிரதிநிதிகளே கிடையாது. இது இன்டர் பார்லிமென்டரி யூனியன் தருகிற புள்ளிவிவரம்.
இந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறபோது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விடுவோம் என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கே அதை வழக்கம் போல மறந்து விடுகிறார்கள்.
முதன்முதலாக 1996-ம் ஆண்டு, நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா, அரசியல் சாசனத்தின் 108-வது திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒரு போதும் ஓட்டெடுப்புக்கு விடப்படவும் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, மக்களவையில் இந்த மசோதா காலாவதியாகி விட்டது. அதன் பிறகு இன்றுவரை உயிரூட்டப்படவே இல்லை.
இந்த மசோதாவை நிறைவேற்றி விடுவோம் என ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சிகள் கூறினாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆக 23 ஆண்டுகளாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற விடாமல் பல அரசியல்கட்சிகள் சீனப் பெருஞ்சுவராய் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.
சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது, “நாடாளுமன்ற, சட்டசபைக்கு வர பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மனம் உவந்து தர மாட்டோம், ஆனால் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று பல தேசிய கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி கணக்கு போடுகின்றன.
2014 நாடாளுமன்ற தேர்தலில் நாட்டில் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 16-ல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்று இந்திய தேர்தல் கமிஷன் புள்ளி விவரம் சொல்கிறது.
இந்த நிலையில்தான் 17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனியாவது நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பரிதவிக்கிறது. ஆனால் இந்த மசோதா ஒரு பக்கம் கிடப்பில் போடப்பட்டாலும், அரசியல் கட்சிகள் நினைத்தால் குறைந்தபட்சம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடியும்.
ஒடிசா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக அந்தக் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்து இருக்கிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் அதை விட ஒரு படி மேலாக 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு தேசிய கட்சியும், மாநில கட்சியும் 33 சதவீத அளவுக்கு பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தினாலே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ இப்போதைய நிலையை விட, அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் வருவதற்கு வழி பிறக்கும்.எந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அந்த கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்ற ஒரு நிலைப்பாட்டை பெண்கள் எடுத்தால் அது மாற்றத்தை கொண்டு வரும். ஏற்றத்தைக் கொண்டு வரும். கெஞ்சியது போதும் பெண்களே, நிமிர்ந்து நின்று முடிவு எடுங்கள். அதுதான் உங்கள் முன்னேற்றத்தின் முதல்படி.
- இலஞ்சியன்

உடல் சுத்தம் என்பது உடலினை சோப்பு கொண்டு தண்ணீர் ஊற்றி, குளித்து சுத்தம் செய்வது மட்டுமல்ல. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, உபயோகிக்கும் பொருட்கள் இவற்றிலும் அசுத்தங்கள், நச்சுப் பொருட்கள் உள்ளன.
உடல் சுத்தம் என்பது உடலினை சோப்பு கொண்டு தண்ணீர் ஊற்றி, குளித்து சுத்தம் செய்வது மட்டுமல்ல. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, உபயோகிக்கும் பொருட்கள் இவற்றிலும் அசுத்தங்கள், நச்சுப் பொருட்கள் உள்ளன. அவை நம் உடலினுள் சென்று தாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆக நம் உள்அகவினையும், உள் உறுப்புகளையும் சுத்தம் செய்து கொள்வதே உடலினை ஆரோக்கியமாக வைக்கும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை இவையெல்லாம் நம்மை அதிகம் தாக்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இல்லையெனில் எளிதில் தாக்கி விடுகின்றன. ஆக நச்சுகளை நீக்கும் பொழுதே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
அசைவ உணவு உண்பவர்கள் எலும்பு சூப் எடுத்துக் கொள்வது மிக சிறந்த சத்தினை அவர்களுக்கு அளிக்கும். கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே, பி12, டி, அமினோ அமிலங்கள் என அனைத்தும் கிடைத்து விடும். மேலும் இந்த உணவு உடலின் வீக்கத்தினை நீக்கும்.
குடலினை பாதுகாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும்.
சருமம், நகம், முடியினை பாதுகாக்கும்.
மூட்டுகளை வலுவாக்கும்.
தூக்கமின்மை நீங்கும்.
தொந்தரவில்லா தூக்கம் கொடுக்கும்.
நிணநீர்: நிணநீர் தசைகளின் அசைவுகளினால் நம் உடலில் சுற்றி வருகின்றது. ஈரமின்றி மென்மையான பிரஷ் கொண்டு உடலின் மீது தேய்த்து விட நிணநீர் ஓட்டம் சீராகி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
* சருமத்தின் மீதுள்ள உயிரற்ற செல்கள் உதிரும்.
* ரத்த ஓட்டம் நன்கு இயங்கும்.
* உடலில் சக்தி கூடும்.
இவ்வாறு செய்த பின் சிறிது நேரம் ஷவர் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் நிணநீர் ஓட்டத்தினையும் ரத்த ஓட்டத்தினையும் சீராய் வைக்கும்.
துரித நடை, நடை பயிற்சி இவை அன்றாடம் 20 நிமிடங்கள் செய்ய முடியாதா என்ன? 20 நிமிட அன்றாட தியானம் தரும் பலன்களைப் பாருங்கள்.
* உடல் வீக்கத்தினை குறைக்கும்.
* ஞாபக சக்தியினைக் கூட்டும்.
* ஸ்டிரெஸ் இருக்காது.
* கவனம் செலுத்தி செயலாற்றும் திறன் கூடும்.
* வலி குறையும்.
* மூளை பலம் கூடும்.
* எடை குறையும்.
* அமைதியான உறக்கம் கிடைக்கும்.
* குடல் பாதிப்புகள் வெகுவாய் மட்டுப்படும்.
யோகா பயிற்சி செய்யுங்கள். டி.வி., போன், கம்ப்யூட்டர் இவற்றினை இரவில் முழுமையாய் அனைத்து விடுங்கள்.வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. நன்கு நீர் அருந்துங்கள். காலையில் திறந்த வெளியில் நன்கு சுவாசியுங்கள். கிரீன் டீ அருந்தும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
* இனிமை யான இசை கேளுங்கள். நம்புங்கள். உங்கள் ஆரோக்கியம் கூடும்.
* அவ்வப்போது 10 மணி நேர உண்ணாவிரதம் இருங்கள். தண்ணீர் குடிக்க வேண்டும்.
* எப்ஸம் உப்பினை நீரில் கலந்து அவ்வப்போது குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்.
* காலை அல்லது மாலை இளம் வெயிலில் சிறிது நேரம் இருங்கள்.
* உங்கள் உடல் உள்ளும் புறமும் சுத்தமாகவும் ஆரோக்கிய மாகவும் இருக்கும்.
தைராய்டு சுரப்பி புற்று நோய்: இவ் வகை புற்று நோய் அதிக அளவில் இல்லை என்றாலும் இதற்குரிய கவனத்தினை அளிக்காமல் இருக்க முடியாது. சில நேரங்களில் வேறு காரணங் களுக்காக நடத்தப்படும் பரிசோதனையிலே எதேச்சையாக கண்டறியப்படுகின்றது. சில அறிகுறிகள் தென்படும் போது அதற்குரிய கவனத்தினை அளித்து விட்டால் பல பிரச்சினை களிலிருந்து ஒருவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்.
கழுத்து பகுதியில் ஏதேனும் கடித்தோ,, உருண்டையாகவோ இருந்தால் மிக சிறியதாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். இது புற்று நோய்தான் என்பதில்லை. ஆனால் உரிய மருத்துவ கவனம் பெற வேண்டும்.
திடீரென தடித்த கரகரப்பான குரல் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவ கவனம் தேவைப்படும். 14&16 வயதில் இயற்கையாக ஆண் பிள்ளைகளுக்கு குரல் மாற்றம் ஏற்படும். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது தடித்த கரகரப்பான குரல் மாற்றம் எந்த வயதிலும் ஆண்&பெண் இருவருக்கும் ஏற்படும் தாக்குதலைப் பற்றியதாகும்.
* தொடர்ந்து நீண்ட நாள் இருமல். ஆனால் ஜீரமோ, சளியோ இல்லாது இருந்தால் மருத்துவ கவனம் தேவை.
* விழுங்குவதில் கடினம் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
* மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
* சில பிரிவு புற்று நோய்கள் ஆரம்ப கால கட்டத்தில் எளிதில் வெளியில் தெரிவதில்லை. உதாரணமாக
* ஆண்களுக்கு சிறு நீர் செல்வதில் கடினம்
* ஆண் பிறப்புறுப்பில் மாற்றம்
* திடீரென ஏற்படும் சரும மாற்றம்
* வாயில் ஏற்படும் சூடு புண்
* நீண்ட நாள் இருமல்
* வெளிப் போக்கில் ரத்தம்
* வயிற்று வலி, வயிற்று பிரட்டல்
* அடிக்கடி ஜீரம், கிருமி தாக்குதல்
* விழுங்குவதில் கடினம்
* காரணமின்றி எடை குறைதல்
* தொடர் சோர்வு
* தீரா நீண்ட நாள் தலைவலி
இவைகளை உடனடியாக கவனித்தால் மிகவும் நல்லது.
பொதுவில் புற்று நோய் நிபுணர்களால் சில தவிர்ப்பு முறைகள் அறிவுறுத்தப்படுகின்றன. அன்றாடம் விருந்து என்பது கூடாது. அதிக சர்க்கரை, தவறான உணவுகள் இவை உங்கள் கல்லீரலில் அதிக கொழுப்பினைச் சேர்த்து விடும். எனவே பிற்காலத்தில் கல்லீரல் புற்று நோய்க்கு காரணம் ஆகின்றது.
* பதப்படுத்தப்பட்ட அசைவம்
* மைக்ரோவேவில் செய்யப்படும் பாப்கார்ன்
* மிக அதிக தீயில் கருகிய அசைவம்.
* செயற்கை இனிப்புகள்
* அதிக மது
* கெட்ட கொழுப்பு
* டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்
* அதிக சர்க்கரை
* செயற்கை வாசனை, நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகள்.
இவைகளை அடியோடு தவிர்த்து விடுவது நல்லது என வலியுறுத்தப்படுகின்றன.
* நோய், எதிர்ப்புச் சக்தி நன்கு இருக்க வேண்டும் என்றால் ‘ஸ்ட்ரெஸ்’ அளவு ஒருவருக்கு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
* பூண்டு *ப்ராகலி *கொட்டை வகைகள் *எலுமிச்சை *கிரீன் டீ *ஆப்பிள் *சாலட் *நார்சத்து *முட்டைகோஸ் *காரட் *சோளம் *பேரீச்சை *முட்டை *இஞ்சி *திராட்சை * பட்டாணி *மாதுளை இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
* ஆரோக்கியமாக இருந்தாலும் வருடம் ஒருமுறை செக்-அப் செய்து கொள்ளுங்கள்.
* தேவையான தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.
* அளவான எடையில் இருங்கள்.

மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுத்தம்பருப்பு - 1 கப்,
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,

செய்முறை:
உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.
அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
உளுத்தம்பருப்பு - 1 கப்,
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.
அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான கோஸ் வடை ரெடி.