search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makeup tips"

    பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம்.
    சென்சிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. அதுவும், பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்திக்கொள்ள நினைக்கும் போது, மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் கண்களுக்கு சரியாக மேக்கப் செய்யவில்லையென்றால், கண்களில் எரிச்சல் ஏற்படும், கண்கள் கலங்கும், பலருக்கு கண்கள் சிவந்து விடும். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில எளிய மேக்கப் டிப்ஸ்கள்.

    * சுத்தம் செய்யப்படாத பிரஷ்சைக் கொண்டு உங்கள் கண்களுக்கு மேக்கப் செய்தால் அதில் உள்ள அழுக்குகள் உங்கள் கண்களைப் பாதிக்கும். எனவே, அந்த பிரஷ்சை சோப்பு அல்லது ஷாம்பு போட்டு சுத்தமாகக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து விட்டு, அப்புறம் உபயோகிக்கவும்

    * உங்களுக்கு சென்சிட்டிவ்வான கண்கள் இருந்தால், பவுடர் ஷேடோக்கள் அல்லது பளபளப்பான ஷேடோக்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்குப்பதில், க்ரீம் ஷேடோக்களையே பயன்படுத்துங்கள்.

    * கண்களின் உள் பகுதிகளில் லைனிங் செய்வது நல்லதுதான். அது கண்களைப் பெரிதாகவும் அழகாகவும் காட்டும். ஆனால், சென்சிட்டிவ் கண்கள் உடையவர்கள் இதைத் தவிர்த்தே ஆகவேண்டும்.

    * பிரைமர்கள் மற்றும் பவுண்டேசன் ஆகியவை மிகவும் முக்கியம். அவை உங்கள் சென்சிட்டிவ்வான கண்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளும். ஆனால் சரியான மற்றும் தரமான பிரைமர்கள் மற்றும் பவுண்டேசன் பொருள்களை மட்டும் பயன்படுத்தவும்.

    * சென்சிட்டிவ்வான கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன்தான். அதில் உள்ள நார்ச்சத்துப்பொருள்கள் கண்களுக்கு நல்லதல்ல. எனவே, மஸ்காராவைத் தவிர்க்கவும்.

    * சென்சிட்டிவ்வான கண்களை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேக்கப் போடும்போது கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களைக் கசக்கக்கூடாது.

    * எவ்வளவு அக்கறையோடு உங்கள் கண்களுக்கும் முகத்துக்கும் மேக்கப் போடுகிறீர்களோ, அதே அக்கறையோடும் நேரத்தோடும் சரியான வழிமுறைகளோடும் மேக்கப்பை தேவையில்லாத போது கலைத்துவிடவும் வேண்டும். உங்கள் சென்சிட்டிவ்வான கண்களுக்கு இதுதான் பாதுகாப்பு.

    * சென்சிட்டிவ்வான கண்களை உடைய நீங்கள், அடர்த்தியான கருமைநிற கண் மையைப் பயன்படுத்துவதற்கு பதில், சில லைட்டான நிறங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். அது உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.

    மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்கப் அதிகமாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும்.

    மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

    அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாகிவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.



    இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது. மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும். 
    ×