என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயம் தான். ஏனென்றால் இதுவரை நமக்கிருந்த தினசரி பழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை என அத்தனையும் மாற்ற வேண்டியிருக்கும்.
உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயம் தான். ஏனென்றால் இதுவரை நமக்கிருந்த தினசரி பழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை என அத்தனையும் மாற்ற வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான முதன்மையான விஷயம் என்பது உணவு தான். நான்கு விதமான உணவு இணைகளை சாப்பிட்டு வந்தால் மிக வேகமாக எடை குறையும்.
குறைந்த அளவில் சிக்கன் சாப்பிட்டாலே உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு உண்டாகும். தசைகளும் வலுவடையும். எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்குளுக்கு சிக்கன் ஒரு நல்ல சாய்ஸ் அல்ல. அதை தவிர்ப்பதே நல்லது. அதேசமயம் எடை குறைக்க வேண்டும் என்பவர்கள் சிக்கனின் மார்புப்பகுதியை தேர்வு செய்யுங்கள். அதுதான் முழுக்க முழுக்க சதைப்பகுதியாக இருக்கும்.
அந்த சிக்கனோடு மிளகாயை மிக அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டீர்கள் என்றால் நாளைடைவில் எடை குறையும். மிளகாய் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். எனவே சிக்கன் பிரஸ்ட்டில் நல்ல மிளகாயை அரைத்த மசாலாவும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். இது சுவையான உணவாக இருப்பதுடன், எடையைக் குறைக்கும் ஒரு உத்தியாகவும் உள்ளது.
பொதுவாக பிரட் ஆரோக்கியமான உணவு என்று சொல்கிறோம். ஆனால் அதிலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஒயிட் பிரட்டை விடவும் ஹோல் வீட் (முழு தானியம் கோதுமை) பிரட் தான் ஆரோக்கியமானது. அதில்தான் கோதுமையின் முழுமையான நார்ச்சத்தும் கிடைக்கும். அந்த கோதுமை பிரட்டில், மிகவும் எளிதாக அதேசமயம் சுவையான ரெசிபி ஒன்று இருக்கிறது.
பொதுவாக பழம் (பட்டர் புரூட்) கொழுப்பைக் கரைக்கும். எடையைக் குறைக்கும் என்பது தெரியும். அதனுடன் அதிக நார்ச்சத்தான கோதுமை பிரட்டும் சேரும் போதும் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். இந்த பழத்தை தோல் நீக்கிவிட்டு, நன்கு மசித்து அதில் சிறிதளவு மிளகாயும் உப்பும் எலுமிச்சையும் சுவைக்காக சேர்த்துக்கொண்டு, அதை பிரட்டில் டோஸ்ட்டாக தடவி சாப்பிடுங்கள். இது உங்களை சிக்கென்று மாற்றிவிடும்.
பொதுவாக உடல் எடையைக் குறைப்பவர்களின் முதல் சாய்ஸாக கிரீன் டீ இருக்கும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சையும் சில புதினா இலைகளும் சேர்த்துக் குடிக்க வேண்டும். கிரீன் டீயுடன் எலுமிச்சையும் புதினாவும் சேர்க்கும் போது, அதில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் எடையை மிக வேகமாகக் குறைக்கச் செய்கிறது.

வைரத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், அது என்ன போல்கி வைரங்கள் என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வைரத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், அது என்ன போல்கி வைரங்கள் என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா.
இயற்கையான அன்ஃபினஷ்டு வைரங்களைக் கொண்டு செய்யப்படுபவையே போல்கி வைர நகைகளாகும். பூமியிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் அன்கட் வைரங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இவ்வகை வைர நகைகளுக்கு உலகம் முழுவதிலுமே அதிக தேவை உள்ளது எனலாம்.
போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் சோக்கர் மட்டுமே மூன்று முதல் பதினைந்து லட்சங்கள் வரை இருக்கும். சோக்கர் செட் என்பது அதன் டிசைன், அதில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் மற்றும் வேலைப்பாட்டைப் பொறுத்து பல கோடிகள் வரை விலையைத் தொடும்.
போல்கி வைரங்களின் வடிவத்திற்கு ஏற்ற அழகழகான டிசைன்களில் மோதிரங்கள் செய்யப்படுகின்றன. ரூபி, எமரால்டு மற்றும் நீல நிறக்கற்களுடன் போல்கி வைரங்கள் பதித்து செய்யப்பட்டிருக்கும் மோதிரங்களை அணிவதற்கு அனைவருமே ஆசைப்படத்தான் செய்வார்கள்.
போல்கி டயமண்ட் சோக்கர்களை ஒரு விழாவிற்கு அணிந்து சென்றால் அங்கு கூடியிருக்கும் அனைவரின் கண்களும் நம் சோக்கரின் மேல்தான் இருக்கும். போல்கி வைர சோக்கர்களில் குந்தன் பீகாக் வேலைப்பாடு என்பதை நம்மால் வர்ணிக்கவே முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடன் இருக்கும்.
அதேபோல், மரகதம் மற்றும் பச்சை ஜேட் கற்களுடன் போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் சோக்கர் செட்டானது அற்புதம் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானது எனலாம்.
போல்கி நெக்லஸ்கள் மிகவும் பாரம்பரியத்துடனும் அதே நேரம் நவநாகரீகப் பாணியிலும் வடிவமைக்கப்படுகின்றன. முகலாயர் ஆண்ட காலம் முதல் இன்று வரை தனக்கென்று ஒரு இடத்தைப் போல்கி வைர நகைகள் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் வளையல்களும், பிரேஸ்லெட்டுகளும் ரிச்சான தோற்றத்தைத் தருபவை என்று உறுதியாகச் சொல்லலாம்.
பெரிய கடா வளையல்கள், விக்டோரியன் ஸ்டைல் ஆன்டிக் தோற்றத்தைத் தரும் பிரேஸ்லெட்டுகள், கஃப் மாடல், ரூபி, ஸஃபயர் மற்றும் போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் பெரிய அளவிலான பிரேஸ்லெட்டுகள், எனாமல் மற்றும் வைரங்கள் பதித்த பிரேஸ்லெட் வளையல்கள் என்று அருமையான பல பாணிகளில் வடிவமைக்கப்பட்டு செலிப்ரட்டிகளின் தங்கநகை சேகரிப்பில் கட்டாயம் இடம் பிடிப்பவையாக இருக்கின்றன.
காதணிகளிலும் தனக்கென்று முத்திரையைப் பதிக்கின்றன போல்கி வைரங்கள். ரிவர்சிபள் ரோஸ் ஹூப்களுடன் வரும் காதணிகள், நீண்ட கிறிஸ்டல் மற்றும் போல்கி வைரங்களுடன் வடிவமைக்கப்பட்ட சாண்டிலியர் மணப்பெண் காதணிகள், சந்திர பாலி மாடல் காதணிகள், திராட்சைக் கொத்து போல் போல்கி வைரங்களாப் பதித்து வடிவமைக்கப்பட்ட காதணிகள், எமரால்டு ஸ்டிரிங் மற்றும் போல்கி வைரங்களுடன் வடிவமைக்கப்பட்ட காதணிகள் என்று காதணிகளின் வகைகளைப் பட்டியல் போட்டு சொல்லலாம்.
வைரக்கற்களின் வடிவம், நிறம் மற்றும் அளவைப் பொறுத்தே அவற்றின் விலையானது நிர்ணயிக்கப்படுகின்றது.
இதுபோன்ற விலை அதிகமான வைரங்களை வாங்கும் போது மிகவும் நம்பகமான நகைக் கடைகளில், வைரத்தின் தரச்சான்றுடன் வாங்குவதே உத்தமம். வைர நகைகளில் இருக்கும் வைரக்கற்களை அடிக்கடி தொட்டுப் பார்க்கக் கூடாது. தொட்டுப் பார்த்தால் வைரத்தின் ஜொலிஜொலிப்பானது குறைய வாய்ப்புள்ளது. வைர நகைகளை அணிந்து கொண்டு நீச்சலடிப்பது, கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
வைர நகைகளை வைப்பதற்கென்றே பிரத்யேகமாக உள்ள பேடட் பெட்டிகளில் மட்டுமே வைக்க வேண்டும். மற்ற நகைகளுடன் வைர நகைகளைச் சேர்த்து வைத்தால் வைரக் கற்களில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். இந்த நோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். பெண்களின் கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை இது.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.
சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.

கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.
ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.

வாயுத்தொல்லை இருக்கும் போதும், கர்ப்பிணிகள் மாதமாக இருக்கும் போதும் இந்த கஞ்சியை பருகலாம். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 1 கப்
முருங்கைக்கீரை - 1/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
பால் - 1 கப்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
அரிசியை தண்ணீரில் சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவேண்டும். கஞ்சி செய்வதால் தண்ணீர் 4 கப் ஊற்றவேண்டும்.
கஞ்சிக்கு போதுமான அளவு உப்பு , பூண்டு, சீரகம், வெந்தயம், பால் கால் கப் சேர்த்து வேகவிடவேண்டும்.

கஞ்சி கெட்டியாக சோறு பதத்தில் வெந்து இருப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து மீண்டும் நன்றாக வேகவிட்டு உப்பு சரிபார்த்து இறக்கினால் வாயுக்கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் அடி வயிற்றில் அதிகமாக இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை : விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கால்களை ஒட்டி வைத்துக்கொண்டு கைகளையும் உடலோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும். இப்போது மெல்ல மெல்ல முழங்கால்களை மடிக்காமல் பாதங்களை மட்டும் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்குத் தூக்கவும்.
நன்கு செங்குத்தாக 90* கோணத்தில் தூக்குவது எளிது. ஆகையால் அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு மேல் தூக்காமல் பார்த்துக்கொள்ளவும். அதிக நேரம் இவ்வாறு இருப்பது கஷ்டமானது. அடி வயிற்றில் நடுக்கம் போல் உணர ஆரம்பிப்போம்.
அப்போது மெல்ல மெல்லப் பாதங்களைக் கீழே இறக்கவும். பாதங்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு பாதங்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சை விட வேண்டும். பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் முயல வேண்டும். இம்முறை கொஞ்சம் அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான ஒன்று.
பயன்கள் : அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும். சிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும். இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.

விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்களே படிப்பிலும் பல தனித்திறமைகளிலும் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்விலும் சாதனையாளராக முன்னேற்றம் அடைகின்றனர்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை அஸ்தமனமாகி, தனிக்குடுத்தன வாழ்க்கை உதயமானபின், அடுக்குமாடி குடியிருப்புகளாகி விட்ட நகர வாழ்க்கையில் குழந்தைகள் தினசரி வெளியில் சென்று விளையாடுவதே அரிதாகி விட்டது. நகரங்களில் தான் இத்தகைய நிலை என்றால் கிராமங்களிலும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பார்க்க முடிவதில்லை.
கையில் மொபைல் போனுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதன் விளைவாக உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் இளம்வயதிலேயே வந்துவிடுகிறது. இந்தியாவில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிக்குழந்தைகள் உடல்பருமனால் அவதிபடுகின்றனர். உண்ணும் உணவுமுறைகளில் ஆரோக்கிய குறைபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது குறைந்ததே இதற்கு காரணம். கணினி மற்றும் மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவதால் விடுமுறை நாட்களில் கூட வீட்டிலேயே சிறார்கள் சிறைபடுகின்றனர்.
விளையாட்டு உடலுக்கு தேவையான ஆரோக்கியம் தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறது. இன்றைய உலகில் வெற்றிகரமாக ஜொலிக்கும் தொழில் அதிபர்கள் தங்களை பற்றிய நேர்காணலில் “தன் சிறுவயதில் ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபாட்டுடன் விளையாடியதாக” தெரிவிக்கின்றனர். விளையாட்டுக்கும் மன உறுதிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என பல உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்களே படிப்பிலும் பல தனித்திறமைகளிலும் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்விலும் சாதனையாளராக முன்னேற்றம் அடைகின்றனர். நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தால் வெளியில் சென்று விளையாடும் விளையாட்டுகள் மட்டுமின்றி வீட்டிலேயே சிறுக்குழுக்களாக விளையாடும் விளையாட்டுகளும் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன.
அறிவுக்கூர்மையை சோதிக்கும் இந்தியாவில் உருவான விளையாட்டான சதுரங்க விளையாட்டும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒருநபர் மட்டுமே கணினியுடன் மோதும் விளையாட்டாக மாறிப்போனது. குழு விளையாட்டுகளான கிரிக்கெட், கால்பந்து போன்றவைகளும் மொபைல் திரையிலேயே செயலிகளாக வந்துவிட்டன.
இன்றைய நவீன தொழில்நுட்பம் மனிதனை நோய்களிலிருந்து பாதுகாப்பதை விட நோய்களுக்கே காரணமாக மாறிவருவது மறுக்க முடியாத உண்மை. வசதி படைத்தவர்கள் தங்கள் பணத்தை கிளப், ஜிம் போன்ற இடங்களில் கொட்டி உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கி தங்கள் ஆரோக்கியம் காக்கின்றனர். ஏழைகளுக்கு இங்கு செல்வதெல்லாம் இயலாது. ஆனால் ஏழைகள் கடினமாக உழைக்கின்றனர். இந்த கடின உடல் உழைப்பே ஏழைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் அகோர பணப்பசிக்கு இரையாவது நடுத்தர வர்க்க மக்களின் ஆரோக்கியமே.
இதற்கு என்ன தான் தீர்வு என நினைக்கும்போது, பாம்பின் விஷத்தை வைத்தே பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து தயாரிப்பது போல, ஆரோக்கியத்தை கெடுக்கும் இத்தகைய தொழில்நுட்பத்தை வைத்து ஆரோக்கியத்தை காக்கவும் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. இது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று.
வீட்டிலேயே நடைபயிற்சி செய்யும் உபகரணங்களில் ஆரம்பித்து வெளியில் நடைபயிற்சி செய்தால் எவ்வளவு தூரம் நடந்தோம், எந்த திசையில் நடந்தோம், நடக்கும்போது நம் இதயம் எத்தனை முறை துடித்தது, எவ்வளவு கலோரிகள் குறைந்தது என்ற தகவல்களை செல்போன் திரையில் பார்க்கக்கூடிய வசதிகள் தற்போது வந்துவிட்டன. சர்வதேச விளையாட்டுகளில் நடுவர்கள் துல்லியமாக முடிவெடுக்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகின்றனர். உலகத்தில் எங்கோ நடக்கும் விளையாட்டை திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் நேரில் சென்று பார்க்கும் அனுபவத்தையும் வெர்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது.
ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் ஆரம்பித்து அவர்கள் அணியும் ஆடைகளிலும் சென்சார் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மூங்கிலை வைத்து நீளம் தாண்டும் போட்டியில் மூங்கிலுக்கு பதிலாக நைலான் பைபர் இழைகளால் ஆன கம்பங்கள் பயன்படுத்தி வருவது விளையாட்டு துறையில் எந்திரப் பொறியியலின் பங்களிப்பே. இது நம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் ஒரு ஆரோக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களின் ஆரோக்கியம் மேம்படவும் உலக அளவில் பல ஆராய்ச்சிகள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. இதற்காக பல சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைந்து குழுக்களாக அசோசியேசன்களை ஏற்படுத்தி அவசியமான தொழில்நுட்பங்களை பற்றி விவாதித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் பல ஆராய்ச்சி பயிலரங்கம் நடத்தி விளையாட்டில் தொழில்நுட்பத்திற்கான பங்கை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவிலும் டிஜிஸ்போர்ட்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இந்திய இளைஞர்களின் தொழில்நுட்ப திறமையை வெளிக்கொணர பயிலரங்கம், சொற்பொழிவு போன்றவற்றை கன்னியாகுமரி போன்ற சுற்றுலா இடங்களில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவர்கள், சத்துணவு நிபுணர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் விளையாட்டு வீரர்களை தினசரி கண்காணித்து ஆலோசனை கூறி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதேபோல இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப உதவியால் பயிற்சியின்போதே விளையாட்டு வீரர்கள் நுட்பமாக கண்காணிக்கப்பட்டு அவர்களின் திறனை மேம்படுத்தி வெற்றியை பெறுமாறு செய்யலாம். இந்தியா போன்ற நாடுகளில் பொறியியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விளையாட்டு துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கான நேரத்திற்கு வந்துவிட்டோம்.
இந்தியர்களுக்கு இயற்கையாகவே கிரேட்டிவிட்டி எனும் ஆக்கத்திறன் அதிகம் உள்ளது. இந்த தனித்திறமையை விளையாட்டை மேம்படுத்தும் சிந்தனையிலும் நேரம் செலவழிக்க ஆரம்பித்தால் சுய முன்னேற்றம் ஏற்படுவதோடு வேலைவாய்ப்பு வசதிகளையும் பெருக்கலாம். பொறியியலில் மின்னணு வகை பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி மெக்கானிக்கல், உயிரியியல் மற்றும் கட்டிட பொறியியல் வல்லுநர்களும் விளையாட்டுத்துறைக்கும், அதனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் மேலான பங்களிப்பை விரும்பி கொடுக்கலாம்.
ரா.ராஜ்குமார், துணை பேராசிரியர், தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.

நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக்கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
எந்த வங்கியும் எனக்கு கடன் கொடுக்க மாட்டேங்கிறாங்க‘ என்று சிலர் புலம்புவார்கள். அவர்கள், கடன் நிலை தகவல் அறிக்கை‘யின் (கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்‘ சுருக்கமாக சி.ஐ.ஆர்.‘) அடிப்படையில்தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறியாதவர்கள். கடன் கொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் சி.ஐ.ஆர்.‘ தான் வங்கிகளுக்கு வேதம்.
ஆனால் இதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மிகச் சமீபமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்பத் தங்கள் வங்கி நிலை, நிதித் தொடர்புகளை பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடன் நிலை தகவல் அறிக்கையை புரிந்துகொள்வதன் மூலம், எந்த நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது, கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பை எப்படி அதிகரித்துக்கொள்வது எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, கடன் கொடுப்பவர்கள் இந்த அறிக்கையில் முக்கியமாக எவற்றைக் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தவணை செலுத்திய பட்டியல், உங்களுக்கான சி.ஐ.ஆரில் கணக்குப் பிரிவில் இது இடம்பெறும். இதுவரை செலுத்தியிருக்கும் தவணைத் தொகைகள், மாத, வருட விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும். கடைசி மாதத்தில் தவணைத் தொகை எத்தனை நாள் தாமதத்தில் செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இருக்கும். அதுகுறித்து, 000‘ தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டிருந்தால் கடன் கொடுக்கும் நிறுவனம் நெகட்டிவாக‘ கருதும். 3 மாதங்கள் வரை இந்தப் பட்டியல் இருக்கும். சமீபகால மாதங்கள் முதலிலும், பழைய மாதங்கள் அதைத் தொடர்ந்து வரிசையாகவும் இடம்பெற்றிருக்கும்.
சி.ஐ.ஆர். கணக்குப்பிரிவில் காணப்படும் இன்னொரு விவரம், நீங்கள் பெற்றுள்ள பல்வேறு கடன்களில் செலுத்த வேண்டிய தொகைகளை சுட்டிக்காட்டும். அதன் மூலம் உங்கள் கடன் சுமையை உணர முடியும். ஒவ்வொரு கடனிலும் செலுத்த வேண்டிய தொகையைக் கூட்டுவதன் மூலம், தற்போது உங்களால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கணக்கிடுவார்கள். அப்போது அவர்கள் உங்களின் நடப்பு வருமானத்தையும் கணக்கில்கொள்வார்கள். இயல்பாகவே, நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும்போது, புதிய கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
உங்களுக்கு சமீபமாக புதிய கிளைக் கடன் வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால் மாதாந்திர தவணைத்தொகையும் அதிகரித்திருக்கும். அப்படி ஏதாவது கிளைக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே நீங்கள் பெற்ற ஒரு புதிய கடன் வசதி, மேலும் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.
நீங்கள் சமீபமாக பல விதமான கடன்களுக்கு விண்ணப்பித்திருந்தால், புதிதாகக் கடன் பெறும் வாய்ப்புக் குறையும். உங்களின் அந்தப் பழக்கம், நீங்கள் கடன் பசி‘யில் இருக்கிறீர்கள் என்பதையும், கடன் பெற வேண்டிய தலைபோகிற அவசரத்தில் நீங்கள் உள்ளதையும் காட்டிக் கொடுத்துவிடும். கடன் கொடுப்போர், உங்கள் கடன் விண்ணப்பத்தை அலசும்போது ரொம்பக் கவனமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக்கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

குடைமிளகாயில் சட்னி, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குடைமிளகாய், முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 1
மிளகு சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வதங்கக்கூடாது.
பிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும்.
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
முட்டை - 3
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 1
மிளகு சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வதங்கக்கூடாது.
பிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும்.
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
சுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உணவு உண்ணும் போதும் பேசக்கூடாது என்று கூறுவார்கள் அதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் உள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் உண்ணும் உணவுக்கும், உண்ணும் முறைக்கும் பல்வேறு தொடர்புகள் உண்டு. நொறுக்க தின்றால் நூறு வயது என்று பழமொழி கூட உண்டு. அதேபோல உணவு உண்ணும் போதும் பேசக்கூடாது என்று கூறுவார்கள் அதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் உள்ளன.
நம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.
வாய்ப்பகுதியில் இருந்து நமது உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்று பகுதிக்கு செல்கிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது.
நமது உணவு குழாயும், சுவாச குழாயும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது. இதனால் நாம் உணவு உண்ணம்போது தப்பி தவறி உணவானது சுவாச குழாயினுள் சென்றுவிட்டாள் அது நமது உயிருக்கு மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும். இதுபோன்று நேரத்தில் சுவாச குழாயில் இருந்து உணவை வெளியேறும் நிகழ்வே புரையேறுதல்.
அதேபோல உணவு உண்ணும் நேரத்தில்தான் புரையேறுமா என்றால் நிச்சயம் இல்லை. நாம் தூங்கும் நேரங்களில் கூட பலமுறை புரையேறி பார்த்திருப்போம். அதற்கு காரணம் நாம் தூங்கும்போது உமிழ்நீர் சுவாச குழாயினுள் சென்றுவிடும் அந்த நேரத்தில் உமிழ்நீரை வெளியேற்றும்போதும் நமக்கு புரையேறுகிறது.
பொதுவாக நாம் உண்ணும்போது மற்றவர்களுடன் பேசுகையில் உணவு, காற்று இரண்டும் சேர்ந்து ஒன்றாக செல்லும்போதே இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நிகழ்கிறது. இதனால்தான் நாம் உண்ணும்போது பேசக்கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

தினமும் உணவு கட்டுப்பாட்டுடன் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தால் எந்த வயதிலும் தொப்பையே வராது.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ தொந்தி வைத்துவிட்டால் அதைக் குறைப்பது கூடாத காரியம் என்று அனேகர் நினைக்கிறார்கள். அது தவறு, அயராத உடற்பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உணவுக் கட்டுப்பாடு, வல்லுநர்களின் ஆலோசனை இவற்றால் தொந்தியைக் குறைக்க முடியும்.
உடற்பயிற்சி, வயதிற்குத் தகுந்தபடி மாற்ற வேண்டும். தவிர, ஒரு நாளும்பயிற்சியை விட்டுவிடக்கூடாது. வயிற்றுக்கென்று பயிற்சிகள் செய்தால் வயிறு குறைந்து விடும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். முழு உடம்புக்கும் பல பயிற்சி களையும் செய்து வயிற்றுக்கும் விசே பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
எவ்வளவு அதிகஎடை இருக்கிறீர்கள் என்று கணக்கிட்டு அந்த எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.
l. Power Walking பவர் வாக்கிங் 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ஒவ்வொரு கையிலும் ஒரு பவுண்டு எடையை வைத்து கையை நீட்டி வேகமாக நடத்தல்.
2. நீந்துதல் பயிற்சி
3. படிகளில் ஏறி இறங்குதல்
4. ஜாக்கிங் அல்லது மெதுவாக ஒடுதல்
5. லெக் ரெய்ல் - தினசரி படுத்துக்கொண்டு கால்களை 90 டிகிரிக்கு இடுப்பிலிருந்து உயர்த்தி மெதுவாகத் தரைக்குக் கால்களை இறக்கும் பயிற்சி 10 தடவையாக 5 செட்டுகள் செய்ய வேண்டும்.
6. கிரஞ்சஸ் (Crunches) கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு கால் மூட்டுகள் மடங்காமல் யாரையாவது பிடிக்க வைத்து இடுப்பிலிருந்து பின்மேல் உடம்பைத் தரையிலிருந்து மேலே கொண்டு வருவது, பின் தரையில் படுப்பது.
7. குட்மார்னிங் பயிற்சி நேராக நின்று இடுப்பில் கைகளை வைத்துக் குனிந்து நிமிர்வது.
8. சைட் பெண்ட்ஸ்(Side Bends) : டம்பெல்களை இரு கைகளில் பிடித்துக்கொண்டு நின்று இரு பக்கங்களிலும் சரிந்து நிமிர்வது
9. குனிந்து முழு உடலையும் வளைத்துத் தரையைத் தொட முயற்ச்சிப்பது.(Toe Touching)
ஸ்டெப்பர் பயிற்சிகள், Twister இல் பயிற்சிகள், உட்கார்ந்து எழும்பும் பயிற்சி – Free Squats செய்யலாம்.
காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வயிற்றை உள்ளிழுத்து இழுக்க முயற்சி செய்து மெதுவாக மூச்சுவிட வேண்டும்.
Horizontal Bar இல் தொங்கிக் கொண்டு காலை 45 டிகிரிக்குத் தூக்குவது. அதிகாலையில் தண்ணிரில் சிறிது தேன் கலந்து அருந்தலாம். இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், எண்ணெய், நெய் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவுகளைக் குறைத்து உடற்பயிற்சி மூலம் எரிக்கும் கலோரிகளைக் கூட்ட வேண்டும். மனம் தளராது தினமும் 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்டமன் வைப்ரேட்டர் மூலம் வயிற்றுக்கு மசாஜ் கொடுக்கலாம். எண்ணெய் பூசி வயிற்றுப் பகுதியைத் தேய்த்து மாலிஷ் செய்யலாம்.
நீங்களே உங்கள் வயிற்றை உள்ளுக்கு இழுக்க முயற்சி செய்து கைகளை வைத்து உரசி மசாஜ் செய்யலாம். எல்லா வயிற்று பயிற்சிகளும் தினமும் செய்ய வேண்டும்.

கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.
நாம் கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். சீக்கிரம் அழியாது என்பதற்காகச் செயற்கை ரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதில் லெட் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது, புதிதாக பென் (pen) மாதிரியான வடிவில் ப்ரௌன், ப்ளாக் கலர்ஸில் கிடைக்கின்றன. இவை மாதிரியான காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.
ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெயைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.
காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை - 2 கப்
முட்டை - 3 ( வெள்ளைக்கரு மட்டும்)
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 1

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை வதங்கியவுடன் முட்டையின் வெள்ளைக்கருமை மட்டும் ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.