என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தையின்மைப் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தற்போதைய வாழ்கை முறையும், உணவு பழக்கவழக்கம் முறையும் இருந்து வருகிறது.
    தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தையின்மைப் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தற்போதைய வாழ்கை முறையும், உணவு பழக்கவழக்கம் முறையும் இருந்து வருகிறது. திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே, குழந்தை இல்லையே என கவலைப்பட தேவை இல்லை.

    அவ்வாறு இருந்தால், மருத்துவரிடம் சென்று இருவரும் தங்களது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. திருமணமான ஓரிரு மாதங்களிலேயே,  உறவினர்கள் என்ன... ஏதாச்சும் விசேஷம் உண்டா? எனக் கேட்பது வழக்கமாகிவிட்டது. எனவே இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    மனதில் எந்த கவலையும் வைத்துக் கொள்ளாமல் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகச் சிறந்தது ஆகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொஞ்ச நாட்களுக்கு இறைச்சியை தவிர்ப்பது நல்லதாகும். மீன்,  முட்டை, கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

    குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு போதும் புகை, மது உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. ஆண்கள் தினசரி இரண்டு வேளை உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்ததாகும். அதுவும் குறிப்பாக, அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    தானிய வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்றவற்றை தினமும் எடுத்துக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிக நேரம் உறங்குவது சிறந்ததாகும். மருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் உணவு முறை மிக முக்கியமானது. 2 வயது வரை குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் உணவு முறை மிக முக்கியமானது. குழந்தையின் முதல் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். அதிகவேகமான வளர்ச்சி முதல் 2-3 வருடங்களில் இருப்பதால் அது இன்னும் முக்கியத்துவமானது. மேலும் இந்த வயதில் குழந்தைகள் பெற்றோரை நம்பி இருப்பதால் இது முக்கியத்துவமானது.

    முதல் ஆறு மாதம்

    முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தவிர மற்ற திர, திடவ உணவுகள் முதல் ஆறு மாதத்திற்கு கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. குழந்தை நோய் வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது.

    குழந்தை தாய்ப்பால் சப்பி குடிக்க குடிக்கத் தான் தாய்ப்பாலே உற்பத்தி ஆகும். தாய்ப்பால் இல்லை என தவறாக கற்பனை செய்து குழந்தைக்கு தாய்பால் கொடுக்காமல் நிறுத்தினால் தாய்ப்பால் உற்பத்தி ஆவதும் குறைந்துவிடும்.

    ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை

    ஆறு மாதம் முடிந்த பின்னும் தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இனி சிறிது சிறிதாக மற்ற ஆகாரங்களும் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஆகாரங்களாக ஆரம்பிக்க வேண்டும். அதாவது ஒரு உணவு ஆரம்பித்து ஒரு வாரமாவது ஆன பின் தான் அடுத்த உணவை கொடுத்து பழக்க வேண்டும். மாதுளை, ஆரஞ்சு சாறு கொடுக்கலாம். ஆப்பிளை மிக்சியில் அடித்து கொடுக்கலாம்.

    ஆப்பிளை வேக வைத்து கொடுத்தால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் விடும். மசித்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக் கிழங்கு, கேரட்) கொடுக்கலாம். வாழைப்பழம், சப்போட்டா மசித்து கொடுக்கலாம். ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் தாய் தனது கையை சோப்பு போட்டு கழுவி விட்டு தான் உணவு ஊட்ட வேண்டும்.

    எட்டு மாதத்திற்கு பின் முட்டை, பருப்பு சாதம், கீரை சாதம், நெய் சாதம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டும்.

    பாட்டிலில் தண்ணீரை அடைத்து ரப்பர் மூலம் கொடுக்காமல், சிறிய கரண்டி மூலமோ அல்லது டம்ளர் மூலமோ தண்ணீர் கொடுத்து பழக்குவது நல்லது.

    ஒரு வயதுக்கு மேல்


    குழந்தை விரும்பும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே இனி கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலாம். தாய் தனது கையையும், குழந்தையின் கையையும் சோப்பு போட்டு கழுவிய பின்பே உணவு கொடுக்க வேண்டும். இந்த வயதில் தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்க வேண்டும் முடிந்த வரை ஊட்டக் கூடாது.

    இரண்டு வயதுக்கு மேல்

    பசும் பால் கொடுத்தால் தண்ணீர் சேர்க்காத பாலே கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். நாம் சாப்பிடுவது போல் முட்டை, பழங்கள் உணவில் சேர்க்க வேண்டும். சாப்பிடு வதற்கு முன் கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிட பழக்க வேண்டும்.

    எந்த உணவையும் தயார் செய்த இரண்டு மணி நேரத்தில் கொடுத்து விட வேண்டும். உணவுகளை பிரிஜ்ஜில் வைத்தால் ஒரு நாளைக்கு மேல் வைக்கக்கூடாது.

    பசும் பால், பழச்சாறு கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்பது கட்டுக்கதை. இது தவறு பால் மற்றும் பழங்களால் சளி ஏற்படுவதில்லை.

    மூன்று வயதுக்கு கீழ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

    மசிக்காத கேரட், வருத்த பயறு, நிலக்கடலை வகைகள், பயறு, பருப்பு வகைகள், பாப்கார்ன், வலுவான சாக்லெட் துண்டுகள், முழு திராட்சைப் பழங்கள். ஏனெனில் இவை குழந்தைகள் சாப்பிடும் போது புரையேறி தொண்டை மூச் சுக்குழாயை அடைக்க வாய்ப்பு உள்ளது.

    குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்காக பதிவு செய்யப்படும் அத்தனை வழக்குகளுமே துயரம் தோய்ந்த உண்மைக் கதைகள். நம்மைப் பதறச்செய்யும் கதைகள்.
    ‘கடவுள் மட்டும்தான் உயிரைப் பறிக்க முடியும். ஏனென்றால், அவரால் மட்டும்தான் உயிரைக் கொடுக்க முடியும்’. இது, மகாத்மா காந்தியடிகள் சொன்ன வாசகம். இப்படி வன்முறைக்கு, கொலைகளுக்கு, மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர். ‘ஓர் உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை’ என்பதைத் தீவிரமாக நம்புகிறவள் நான்.

    ஆனால், விதிவிலக்காக சில நேரங்களில், சில தண்டனைச் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சட்டம்தான், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனைவரை விதிக்கச் செய்யும் ‘போக்சோ’ மசோதா. இந்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமாக்கப்பட இருக்கிறது. அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் புள்ளிவிவரங்களையும் கண்டால் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    2010-ம் ஆண்டு, கோவையில் ஒரு 10 வயது சிறுமியும், 7 வயது சிறுவனும் பள்ளிக்குச் சென்றபோது, கார் டிரைவர் மோகன்ராஜும், அவருடைய கூட்டாளி மனோகரனும் சேர்ந்து இருவரையும் கடத்துகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். போலீசார் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற மோகன்ராஜ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். மனோகரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை. ஆனால் அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அண்மையில்தான் அவருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

    இத்தகைய வழக்குகளில் தண்டனை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான 320 வழக்குகளில் 5 வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. எனவே, சிறப்பாக இவ்வழக்கைக் கையாண்ட தமிழக காவல்துறை பாராட்டுக்குரியது.

    2017, ஜூன் 4-ந் தேதி உத்தரப்பிரதேசத்தில், வேலை கேட்டு ஒரு எம்.எல்.ஏ. வீட்டுக்குச் சென்றார் 17 வயது பெண் ஒருவர். அவர் உன்னாவ் பகுதியிலிருக்கும் மாகி கிராமத்தைச் சேர்ந்தவர். சென்றவர், வீடு திரும்பவில்லை. ஒரு வாரம் கழித்து வேறோரு இடத்தில் மீட்கப்பட்டார். தன்னை அந்த எம்.எல்.ஏ.வும், அவர் உறவினர்களும் பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்தப் பெண் கதறியழுது சொல்ல, அவரும் அவர் உறவினர்களும் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கப்போனார்கள். புகார் பதிவாகவில்லை.

    அடுத்த வாரம், மீண்டும் அவர் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாட, தொடர்ந்தன துன்பங்கள். அவருடைய தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இறந்தும் போனார். அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், பெண்ணின் மாமா வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரைச் சந்திக்கச் சென்ற உன்னாவ் பெண்ணின் கார் மீது அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதி, விபத்துக்குள்ளானது. அவரின் அத்தை இறந்துபோனார். அந்தப் பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில்...

    தேசிய குற்றப்பிரிவு ஆணையத்தின் புள்ளிவிவரப்படி (2016), இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறது. 2016-ம் ஆண்டு இறுதிவரை, இந்தியா முழுக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குக் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரம்.

    இவையெல்லாம் மிக மிகச் சில துளி உதாரணங்கள். உண்மையில், குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்காக பதிவு செய்யப்படும் அத்தனை வழக்குகளுமே துயரம் தோய்ந்த உண்மைக் கதைகள். நம்மைப் பதறச்செய்யும் கதைகள். 16 வயதுக்கு உட்பட்டவர்களை, ‘குழந்தைகள்’ என வரையறுத்திருக்கிறது நம் சட்டம். சரி... குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்கள் உலகம் அலாதியானது. சட்டென்று யாரையும் நம்பிவிடுவார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவர்கள் சொல்வதைச் செய்வார்கள். இதுதான் குற்றவாளிகளுக்கு வசதியாகிப் போய்விடுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், பெரும்பாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள் தங்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தினரால்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது.

    ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்கிறது நம் பாரம்பரியம். அந்த தெய்வத்தை, 7 வயது, 5 வயது, 3 வயதுடைய குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் கயவர்களை என்ன செய்யலாம்? அவர்களுக்கு என்ன தண்டனை பொருத்தமாக இருக்கும்? ‘போக்சோ’ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளின் விவரங்களைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது. உயிரைவிட்ட குழந்தைகள், உயிரிருந்தும் நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தைகள், இந்தப் பிரச்சினையாலேயே அனாதைகளாக்கப்பட்டு தெருவில் விடப்பட்ட குழந்தைகள், மான, அவமானத்துக்கு அஞ்சி பதிவே செய்யப்படாமலிருக்கும் குழந்தைகளின் வழக்குகள்... நினைக்க நினைக்க பதற்றம்தான் அதிகரிக்கிறது.

    அண்மையில் கேரளாவில், பாலியல் வன்முறைக்கு ஆளானாள் ஒரு சிறுமி. அதற்குக் காரணமான கயவனை, மெரின் ஜோசப் என்ற பெண் போலீஸ் அதிகாரி சவுதி அரேபியாவரை சென்று பிடித்து, நீதி விசாரணைக்கு நிறுத்தியிருக்கிறார். இன்றைய சூழலில் இவையெல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு உண்டாகியிருக்கிறது. இவை இன்னும் அதிகமாக வேண்டும். நெருங்கிய உறவினர்களாகவே இருந்தாலும், தொடுதல் விஷயத்தில் கறாராக இருக்க, குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்ற புரிந்துணர்வை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

    இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான கடினமான சூழலில், போக்சோ சட்டத்தின் ‘மரண தண்டனை’ உட்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு புதிய தீர்வைத் தரலாம். ஓரிரு தண்டனைகள் நிறைவேற்றப்படும்போது, குற்றவாளிகள் பயம்கொள்ளலாம். குற்றம் செய்யத் தயங்கலாம். உண்மையில், எதிர்காலத்தில் இந்தச் சட்டம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாகவே திகழலாம். அதற்காகவே ‘போக்சோ’ சட்டத்தை வரவேற்கலாம்.

    திலகவதி, ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் லஸ்ஸி இது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரோஸ் எசன்ஸ் - 3 மேஜைக்கரண்டி
    சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    தயிர் - ஒரு கப்
    நட்ஸ் - அலங்கரிக்க
    ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

    ரோஸ் லஸ்ஸி

    செய்முறை :

    மிக்ஸியில் தயிர், ரோஸ் எசன்ஸ், உப்பு, ஐஸ் க்யூப்ஸ், சீனி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

    ஒரு உயரமான கண்ணாடி டம்ளர் உள்ளே ஓரங்களில் சிறிது ரோஸ் எசன்ஸை ஸ்பூனால் ஊற்றவும். பின்பு மிக்ஸியில் அரைத்த ரோஸ் லஸ்ஸியை ஊற்றவும்.

    இறுதியாக மேலே நட்ஸ் மற்றும் ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இடுப்பு, வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்வதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உணவுமுறைகளை கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

    பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.

    நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.

    எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

    அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்... அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.

    சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.

    தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

    டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.

    தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.

    எப்போதும் உணவை மென்று சாப்பிடவும்.

    சோடா கலந்த குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும். வாயுத் தொல்லை அதிகமானால் இடுப்பு எடையும் அதிகமாகும்.
    குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
    குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு அழகு பார்க்கிறோம். கீச்… கீச்… என்று அதிலிருந்து ஒலியை கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.

    ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

    ‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.

    அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
    ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    காபியில் கலந்திருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது குழந்தையின் கல்லீரல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது இளமை பருவத்தில் கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிகள் தினமும் காபி பருகும்போது மன அழுத்தத்தையும், வளர்ச்சிக்கான ஹார்மோன் அளவில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஆய்வை மேற்கொண்ட சீனாவின் வுஹான் பல்கலைக்கழக இணை ஆசிரியர் இன்க்சியன் கூறுகையில், ‘‘எங்கள் ஆய்வின் முடிவின்படி கர்ப்பிணிகள் அதிக காபின் உட்கொள்ளும்பட்சத்தில் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. அது கருவில் இருக்கும் குழந்தையின் கல்லீரல் வளர்ச்சியை தடுக்கிறது. தாய் மூலம் காபினை நுகர்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் காபினை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.

    இந்த ஆய்வுக்கு சினை அடைந்த எலிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றுக்கு குறைந்தபட்சமாக 2-3 கப் காபிக்கு சமமான காபினையும், அதிகபட்சமாக 6-9 கப் காபிக்கு சமமான காபினையும் கொடுத்து பரிசோதித்திருக்கிறார்கள்.

    இந்த ஆய்வு பற்றி டெல்லியை சேர்ந்த கருத்தரிப்பு மைய இயக்குனரான டாக்டர் சுவேதா குப்தா, ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவித ஏக்கம் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலையில் மனதை இதமாக்குவதற்காக சிலர் காபியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இருக்கும் அதிக அளவு காபின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்’’ என்கிறார்.

    புனேவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஹர்ஷல் ராஜேக்கர், ‘‘கர்ப்பிணி பெண்ணுக்கோ, அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் கல்லீரலுக்கோ காபின் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில் அதிகபடியான காபினை உட்கொண்டால் தூக்கம் தடைபடும். அது கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என்கிறார்.
    சளி, தொந்தரவால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். இன்று பூண்டு மஞ்சள் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    பூண்டு - 6 பல் (அரைக்கவும்)
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    பனங்கற்கண்டு - தேவையான அளவு

    பூண்டு மஞ்சள் பால்

    செய்முறை:

    பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

    கொதித்து வந்ததும் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.

    ஓரளவு வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.

    சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த யோகாவை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, இடுப்புச் சதை குறையும். தொப்பையைக் கரைக்கும். முதுகு வலி சரியாகும்.
    செய்முறை : பிரிப்பில் உட்கார்ந்து, கால்களை நன்கு நீட்டி, கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் பதிக்க வேண்டும். இப்போது, வலது காலை மடக்கி இடது முட்டியின் அருகில் பதித்திருக்க வேண்டும். வலது கையை சற்று பின்நோக்கி வைத்து, இடது கையை மடக்கி, முழங்கையை உயர்த்திய நிலையில், வலது கால் முட்டிக்கு வெளியேவைக்க வைத்து, வலது கால் பாதம் அருகே தரையில் கையை பதிக்க வேண்டும்.

    இப்போது, கழுத்து மற்றும் மேல் உடலை மெதுவாகத் திருப்பிக்கொள்ள வேண்டும். இது உடலையே ட்விஸ்ட் செய்யும் பயிற்சி. இதேபோல இடது காலை மடக்கி, வலது முட்டியின் அருகில் பதித்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    இந்தப் பயிற்சி செய்யும்போது, மூச்சு சாதாரணமாக இருந்தாலே போதும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யலாம். காய்ச்சல், மாதவிலக்கு சமயத்தில் செய்ய வேண்டாம்.

    பலன்கள்: கல்லீரலைப் பலமாக்கும். வயிறு, இடுப்புச் சதைகளைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும். முதுகு வலி சரியாகும். செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். வயிறு தொடர்பான புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும். மலவாய்க் காற்று பிரியும். சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும்.
    மின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது.
    மின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது.

    இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காது நரம்புகளில் சிறு அளவில் மின்சாரத்தை பாய்ச்சி நரம்பு மண்டலத்தை 55 விநாடிகளுக்கு மறுசமச்சீர் செய்யும் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்து உள்ளனர். இந்த புதுமை சிகிச்சையானது நரம்பு மண்டலத்தையே புத்துணர்ச்சிப் படுத்துவதுடன், வயது முதுமையையும் தள்ளிப்போடுகிறது. ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது.

    மின் சமநிலை நரம்பு தூண்டல் (டி.வி. என்.எஸ்.-tVNS) என்று இந்த சிகிச்சை முறை அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 2 வாரங்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடம்பில் மின்சாரம் செலுத்தினாலும் வலி இருக்காது. அந்த அளவுக்கு குறைந்த அளவில் மின்சார தூண்டல் காதில் உள்ள வாகஸ் எனும் சமநிலை நரம்பில் செய்யப்படுகிறது. மெல்லிய இந்த தீண்டலால் லேசான கூச்ச உணர்வு தான் ஏற்படும். எனவே இது காதுகூச்ச சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. அங்கிருந்து உடலின் மொத்த நரம்பு மண்டலத்திற்கும் மின் சமிக்ஞைகள் கடத்தப்படுகிறது. இதனால் நரம்பு மண்டலம் புத்துணர்வு பெறுகிறது. மனநிலையில் தெளிவு ஏற்படுவதுடன், நல்ல உறக்கமும் வருகிறதாம்.

    முதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை

    இந்த சிகிச்சையால் வயது மூப்பு ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது. மேலும் பல்வேறு நோய்களின் வளர்ச்சி நிலையும் தடுக்கப்படுகிறது. அதாவது வயதாவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, இதய நோய்கள் ஏற்படுவது, படிப்படியாக வளரும் இதர நோய்களின் வளர்ச்சி நிலையும் தடுத்து நிறுத்தப்படுகிறது.

    ஆய்வின்போது 55 வயதுக்கு மேற்பட்ட 29 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 15 நிமிட நேரம், 2 வாரத்திற்கு மின்தூண்டல் சிகிச்சை பெற்றனர். அவர்களின் உடலில் மேற்கண்ட மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்பட்டதும், அவர்கள் தெளிந்த மனநிலையுடன், நிம்மதியான உறக்கத்திற்கு உள்ளானதும் உறுதி செய்யப்பட்டது.

    “உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் சிறந்த சமநிலையை உருவாக்கும் புதிய சிகிச்சையாக தங்கள் சிகிச்சை முறை மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்.
    சமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது.
    தற்கொலை என்பது குற்றமா? அல்லது தனிப்பட்டவர்களின் உரிமையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா? பிரச்சினைகளின் தொடக்கமா? அதைத் தவிர்க்க முடியுமா? தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக எல்லா வயது தரப்பினரிடையே நடந்தாலும் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக டீன்ஏஜ் மாணவர்களிடம் நடப்பது தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல நாட்டுக்கும் நன்மை பயப்பதல்ல.

    இன்று உலக நாடுகளில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பது, எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இன்றைய சூழலில் இளைஞர்களை மிகவும் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை பட்டியலிட்டால் அவை போதைப் பொருள்கள், விபத்துகள், தற்கொலைகள், சமூக ஊடக சீர்கேடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில் விபத்துகளும், தற்கொலைகளும் உடன் கொல்லிகள்; போதைப் பொருள்களும், சமூக ஊடகங்களும் மெதுவாகக் கொல்லும் காரணிகள்.

    இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை இல்லை என்ற குறை இருந்து வருகிறது. அதற்கான முக்கியமான காரணம் இளைஞர்களின் படிப்பிற்கும், வேலை அமர்த்தப்படுவதற்குத் தேவையான திறமைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

    வேலை கொடுப்பவர்கள்; எதிர்பார்க்கும் திறமைகள் இன்று வேலை தேடுபவர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்றால் அது குறைவு.

    தற்கொலையைத் தேடி செல்வோர் பலவகைவாழ்வை வாழ்வாய் வாழ்ந்தவர்கள் கூடக் கடைசிக் காலத்தில் நோய் நொடியால் அவதிப்படும் போது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இளம் வயது பாலின ஈர்ப்பால் இணைந்தவர்கள் உறவின் விரிசலின் போது, உறவை ஒட்ட வைக்க உற்றார் உறவினர் இன்றி ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கனவால் வரைந்த வாழ்வு கானல் நீராய் காணாமல் செல்லும் போது கடைசி ஆசையாய் தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.

    கல்லூரி மாணவர்களின் சிகை அலங்காரம், உடை பற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கின்றன. அது தனிமனித உரிமை, அவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடாத வரைக்கும் அதைபற்றிய கவலைத் தேவையில்லை, மேலும் உடை மற்றும் சிகைப்பற்றிய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மாணவர்களுடைய கல்வி திறமையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என்பது விவாதத்திற்கு உரியது.

    அதே நேரம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கு முறையும், மனித உரிமை மீறல்களும் ஏற்படும்போது சில மாணவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தற்கொலை இளைஞர்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக இளம் சிறார்கள் அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் நடப்பது சமூகத்தில் அக்கறைக் கொண்ட அனைவருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கிறது.

    தற்கொலை

    இதற்கு என்னதான் தீர்வு?

    வேலைக் கிடைக்காமல் விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் முதலில் தங்களை வேலைச்சந்தைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமா என்று நினைத்து பார்த்து அதனை நிவர்த்தி செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும் அல்லது தான் அதே வேலைக்காக ஒரு நபரைத் தேடுவதாக இருந்தால் இந்த தகுதிகள் மற்றும் திறமைகள் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுப்போமா என்ற கோணத்தில் பார்த்தால் தம்முடையத் தகுதியை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற ஒரு தெளிவு வரும்.

    அதேபோல கல்லூரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிக்கும் போதே நேரம் கிடைக்கும்போது படிப்போடு தொடர்புடைய அல்லது எந்த வேலைக்கு திட்டமிடுகிறீர்களோ அது தொடர்பானப் பயிற்சியில் சேர்வதோ அல்லது மேலை நாடுகளில் இருப்பது போல படிக்கும் போதே பகுதி நேர வேலைக்குச் செல்வதோ படித்தவுடன் வேலைக்கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

    பெரும்பாலான இளைஞர்கள் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது சில நேரங்களில் ஏமாற்றத்தைத் தரலாம். அதுபோன்ற நேரங்களில் பெரு நகரங்களுக்கு வேலை தேடி செல்வது தவிர்க்க முடியாததாகும். நான் பி.எஸ்சி(விவசாயம்) முடித்தவுடன் 2500 ரூபாய் சம்பளத்திற்குதான் 1996-ல் வேலைக்குச் சேர்ந்தேன். பின்புத் தேர்வு எழுதி உதவித்தொகை மூலம் எம்.எஸ்சி (விவசாயம்)படிப்பதற்குச் சென்றேன். படித்து முடித்த பின் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒருவருடைய வேலைக்குச் செல்லும் திறனை பெருமளவில் பாதிக்கும்.

    தற்கொலை உணர்வுகள் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுடன் நேரம் செலவிடுதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. ஆனால் ஒரு குழுவாக செய்தால் எளிதாக இருக்கும். எப்படி குழு ஒருவரை ஒரு கெட்ட பழக்கத்திற்கு கொண்டு செல்வதற்கு அழுத்தம் கொடுக்கிறதோ அதே போல் அவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் உதவி செய்ய முடியும். குறிப்பாக கல்லூரிகளில் இதை முயற்சிக்கலாம்.

    தற்கொலை என்பது தனிப்பட்ட மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதைத் தடுப்பதற்கான தார்மீகப் பொறுப்புள்ளது. ஏனெனில் ஒவ்வொருத் தற்கொலைக்கு பின்னும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. அந்தக் கதையில் நிரம்ப கதாபாத்திரங்கள் சமூகக் குற்றவாளிகளாக வலம் வருகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்குப் பின்னால் ஒரு காதலனின் நடிப்போ அல்லது பெற்றோர்களின் பாசமற்ற நடவடிக்கையோ கண்டிப்பாக இருக்கிறது. இந்தக் கதாபாத்திரங்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி கொண்டு தற்கொலை எண்ணம் கொண்டவர்களை பாதுகாக்க வேண்டும்.

    குறைந்து வரும் கூட்டுக் குடும்பப் பாரம்பரியத்தால் நாம் இழந்த அன்பு மற்றும் ஆதரவைக் கொடுப்பது நண்பர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், தோழிகள், ஆசிரியர்கள் என அனைவரின் கடமையாகும்.

    சமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. ஒருசிலக் கல்லூரிகள் உடனடியாக அலை பேசித் தடைச் சட்டத்தை அமல்படுத்திகிறார்கள். முழுமையாகத் தடை செய்வதை விட முதிச்சியான உபயோகத்தை பலப்படுத்துவது முக்கியம். இளைஞர்களே!தவமாய்ப் பெற்ற வாழ்வு உன்னுடையது. வேண்டுமென்றால் உன் தாயைக் கேட்டுப்பார்.. தற்கொலை செய்து கொள்ளும் ஒருசிலருக்கு நடுவே வாழ்க்கையை வென்றுக் காட்டி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அந்த ஏராளமானோர்களில் ஒருவராகிய நாம் ஏன் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது. “தத்தெடுப்போம்; தற்கொலையைத் தடுப்போம்”.

    வே.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., காவல்துறை துணைத் தலைவர், திருச்சி சரகம்
    பப்பாளியை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளி உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.

    பப்பாளியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் சி, ஏ என்று பல்வேறு சத்துகள் உள்ளன. எனவே, அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளியை உண்பதால் கீழ்வரும் நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

    * உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும்.

    * குழந்கைளின் பல், எலும்பு வளர்ச்சிக்கு மிக நல்லது.

    * ஈரல், கல்லீரலின் அழற்சியை போக்கும். ஈரலின் வீக்கங்களை சரி செய்யும்.

    * வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது

    * மலச்சிக்கலை போக்கும்.

    * ரத்தத்தை விருத்தி செய்யும்.

    * பப்பாளிக்காயை சமைத்துண்ண தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருகும்.

    * தேள் கொட்டிய இடத்தில் பப்பாளிக்காய் பிசினை தடவ வலி குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ×