என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளுக்கு விருப்பமான காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது மிகவும் எளிது. இன்று இந்த ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - இரண்டு கப்,
    காளான் - ஒரு கப்,
    வெங்காயம் - 2,
    மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    நசுக்கிய பூண்டு - 2 பல்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    காளான் ஸ்டப்ஃடு தோசை

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்கி வைக்கவும்…

    தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து மாவு வெந்ததும் எடுத்து மடித்து பரிமாறவும்.

    இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

    சூப்பரான காளான் ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன்.
    ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாகக் கருவில் வளரும் குழந்தை 17 முதல் 20 அங்குலம் வரை வளரலாம்.

    மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் இருக்கும். நிலக்கடலை அளவிலிருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது; உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோனின் சுரப்பு குறைவதற்கும் கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமித் தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவை காரணங்களாகலாம்.

    முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயதுவரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம்கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும். சிலருக்கு அதிகபட்சமாக 23 வயதுவரை வளர்ச்சி இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

    ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இதுபோன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும். சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ‘ட்வார்பிசம்’ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது.

    உயரம் குறைந்த குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்குப் பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம். பெற்றோர்கள், குழந்தைகளிடம் உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்லி தம்மைத் தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
    பெண்களின் கைகள் வலுவடையவும், கையில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கவும், 4 உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    பெண்கள் உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். பெண்களின் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. பெண்களின் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

    ட்ரைசெப்ஸ் டிப்ஸ் (Triceps Dips)

    கைகளின் பின்புறம் வலுவடைய ட்ரைசெப்ஸ் டிப்ஸ் முறையை கையாளலாம். நாற்காலியின் நுனியில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி, உங்கள் கால்களை நாற்காலியில் இருந்து சற்று தள்ளி தரையில் படும் படி நீட்டிக் கொள்ளுங்கள். கால்களை நேராக நீட்டி நாற்காலியை விட்டு விலகி வைத்து, உடலின் மொத்த எடையையும் கைகளில் ஏத்திடுங்கள்.

    பின் மெதுவாக உடலை நேராக இறக்கி முழங்கை 90 டிகிரி திரும்பும்படி செய்யுங்கள். இப்போது கைகளின் பின்புற தசைகளை அழுத்தி, மீண்டும் உடலை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள். முதலில் பாதங்களை தரையில் நேராக வைத்து, முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ப்ராக்டிஸ் செய்து உடலின் மேல் பகுதிக்கு வலு சேர்க்கும் போது, கால்களை விரித்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்யலாம்.

    ட்ரைசெப்ஸ் பிரஸ் (Triceps Press)

    இதனை ஆரம்பிக்க நாற்காலியில் அமரலாம் அல்லது நின்று கொள்ளலாம். உங்கள் முதுகை நேராக வைத்து கொண்டு 3-5 பவுண்ட் எடை உள்ள ஒரு கர்லாக்கட்டையை (டம்ப் பெல்) தலையின் மேல் தூக்குங்கள். இப்போது முழங்கையை மடித்து எடை அனைத்தும் தலையின் பின்பக்கம் செல்லுமாறு செய்யுங்கள். இதன் பின் முழங்கையை நேராக்கி ஆரம்பித்த நிலைக்கு மீண்டும் செல்லுங்கள். இதனை ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

    புஷ் அப்ஸ் (Push Ups)

    கைகளுக்கான உடற்பயிற்சியில் முக்கியமானதாக விளங்குகிறது புஷ் அப்ஸ். நன்றாக அழுத்தி புஷ் அப் செய்து கைகளுக்கு அழுத்தத்தை கொடுங்கள். அதற்கு முதலில் தட்டையான இருக்கையில் முட்டி தரையில் படும் படி படுங்கள். கீழே நோக்கிய நிலையில் இருக்கும் போது, உங்களின் முழு எடையையும் முட்டி மற்றும் கைகளில் ஏத்திடுங்கள். நல்ல பயனை பெற தினமும் 15 முதல் 20 புஷ் அப் வரை எடுங்கள். இது நெஞ்சு மற்றும் கைகளில் உள்ள தசைகளை திடமாக்கி வலுவடையச் செய்யும்.

    ட்ரைசெப்ஸ் கிக் பேக் (Triceps Kickback)

    இந்த உடற்பயிற்சி கைகளின் பின்புறத்தை வலுவடைய செய்யும். இந்த பயிற்சியில் இடுப்பு வரை வளைந்து தொடங்க வேண்டும். அப்படி செய்யும் போது உடலின் எடையை தாங்க, ஒரு கையை நேராக நீட்டி ஒரு நாற்காலி, மேஜை அல்லது சோபா மீது வைத்துக் கொள்ளுங்கள்.

    மற்றொரு கையில் டம்ப் பெல் ஒன்றை பிடித்து கொண்டு, உங்கள் முழங்கை 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ட்ரைசெப்ஸ் தசைகளை இறுக்கி, கைகளை நேராக்க டம்ப் பெல்லை பின்புறம் கொண்டு சென்று, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு கொண்டு வாருங்கள்.
    வயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தாம்பத்திய உறவு என்பது இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த வரம். தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் மனிதன் உடல் அளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சி பெறுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும், ஆணும் பெண்ணும் சம அளவில் உறவில் ஈடுபட்டால் மட்டுமே இந்த பலன்களை பெற முடியும்.

    ஆனால், வயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதம் மாதம் வரக்கூடிய பிரச்சனைகளில் ஓன்று. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது உடளவிலும், மனதளவிலும் பெண்கள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆய்வில் மாதவிலக்கு அடைந்த 4,500 பெண்களுடன் உரையாடல் நடத்தியபோது இறுதியாக நீங்கள் எப்போது உறவில் ஈடுபட்டிர்கள் என்ற கேள்விக்கு பலரும் ஞபாகமே இல்லை என பதில் கூறியுள்ளனர். ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாதவிலக்கு நின்ற பிறகு உறவில் திருப்தியுடன் ஈடுபட முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி ஈடுபட்டாலும் பெண்களின் வெஜினா வறண்டுபோவதால் அதிக வலியை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

    இறுதியாக இப்படி பல்வேறு காரணங்கள், பிரச்னைகளால்தான் மாதவிடாய் விலக்கிற்குப் பின் பெண்களால் உறவில் திருப்தியாகவோ அல்லது முற்றிலுமாகவோ ஈடுபட முடியாமல் போகிறது என்று விவரிக்கிறது இந்த ஆய்வு.
    கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காலையில் டிபன் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட் சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - இரண்டு கப்,
    கேரட் - 3,
    வெங்காயம் - 1
    பொடித்த காய்ந்த மிளகாய் - தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கேரட் தோசை

    செய்முறை :


    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை தோல் நீக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தோசை மாவில் கேரட் விழுது, பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    தோசை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாளவும்.

    சூப்பரான கேரட் தோசை ரெடி.

    இந்த தோசையை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெற்றோர்கள் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்கின்றனர் என்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்.
    தற்போதைய வாழ்க்கைமுறையில் ஆண்ட்ராய்டு போன் இல்லாத குடும்பமே இல்லை. இன்றைய தலைமுறை குழந்தைகள் அனைத்தும் செல்போன்களுக்கு அடிமையாக உள்ளனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்கின்றனர் என்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கின்றனர்.

    குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்ப்பதால், பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகள் பேசுவதற்கு ரொம்ப தாமதம் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் மொபைலில் வீடியோ பார்ப்பது தான்.

    குழந்தைகள் வீடியோ பார்ப்பதால், கற்றல் திறனும் குறைகிறது. குழந்தைகள் நீண்டநேரம் வீடியோவில் நேரத்தை செலவிடுவதால் வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் சரியாக பழக மாட்டார்கள். எப்பொழுதுமே குனிந்துகொண்டு வீடியோ பார்ப்பதால் விரைவில் கழுத்துவலி ஏற்படும்.

    குழந்தை வயதிலேயே வீடியோ பார்ப்பதால், வயதானபிறகு தண்டுவடம் பாதிக்கப்படும். குழந்தைகள் வீடியோ பார்ப்பதை ஆரம்பத்திலே தடுத்துவிட்டால் மேற்கொண்ட பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை தவிர்க்கலாம். ஆரம்பத்திலே குழந்தைகளிடம் நீண்ட நேரம் செலவிடுங்கள். தங்களின் சுயநலத்திற்காக குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களின் எதிர்காலத்தை வீணாக்காதீர்கள்.
    பெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள். சுடிதார்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.
    சுடிதார் என்பது இந்திய பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய பாரம்பரிய உடை என்றே சொல்லலாம்.

    சுடிதார் பேன்ட் என்பது இடுப்பிலிருந்து கணுக்கால்வரை கச்சிதமாக ஃபிட்டாக இருக்கக்கூடிய கீழாடையாகும். முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நிறைய சுருக்கங்கள் இருக்கும். அதையே ‘சுரி’ என்கிறார்கள். இதுபோன்றே மேலே அணியக்கூடிய குர்தி அல்லது கமீஸின் கைகளானது மிகவும் ஃபிட்டாகவும் அதே நேரத்தில் மணிக்கட்டில் சுருக்கங்கள் வருவது போலும் வடிவமைக்கப்படும்.

    சுடிதார்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவை அனார்கலி சுடிதார், ஷார்ட் சுடிதார், ஃப்ளேர்டு சுடிதார்ஸ், ஸ்கின் ஃபிட் சுடிதார்ஸ், பதானி சுடிதார்ஸ், பாட்டியாலா சுடிதார்ஸ், ட்ரெளஸர் ஸ்டைல் சுடிதார், பளாஸோ சுடிதார்ஸ்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஸிம்பிள் காட்டன் சுடிதார்ஸ்

    தினந்தோறும் அணிவதற்கு ஏற்றவை என்று காட்டன் சுடிதார்களைச் சொல்லலாம். இது போன்ற சுடிதார்களை பெண்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அவை மிகவும் டீசண்ட் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை தருகிறது. சுடிதார் பேன்ட்டுடன் ஸ்லிம்ஃபிட் டாப்பை அணியும் பொழுது அணிபவரை ஒல்லியாகவும், அழகாகவும் காட்டுகின்றது. எனவே, அலுவலகம் குடும்ப விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு இது போன்றே காட்டன் சுடிதார்களை பெண்கள் அணிகிறார்கள்.

    காட்டன் சில்க் சுடிதார்

    காட்டன் சில்க் துணியானது மிகவும் ரிச்சான தோற்றத்தை தருகின்றது. இதுபோன்ற சில்க் காட்டனில் உடல்வாகிற்கு ஏற்றாற் போல் தைத்து அணியப்படும் சுடிதார்கள் பளபளப்பாகவும், ஆடம்பரமாகவும் கல்யாணம், வரவேற்பு போன்ற விசேஷங்களுக்கு அணிந்து செல்லக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாகவும் இருக்கின்றன.

    டிசைனர் காட்டன் சுடிதார்

    டிசைனர் சுடிதார்கள் மேல் டாப்பானது பெரும்பாலும் மிக அழகிய வேலைபாட்டுடனும் கீழ் பேன்டானது பிளெயின் துணியாகவும் இருக்கும்.

    பெரும்பாலும் மேல் டாப்பில் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடு, மிரர் வொர்க் வேலைப்பாடு அல்லது அழகிய கற்கள் மணிகளைக் கொண்டு தைத்தும் மிக அழகான டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற சுடிதார் மற்றும் டிசைனர் செட் என்றால் முழுக்கை வைப்பதே மிகவும் சூட்டாகும்.

    சுடிதார்( கோப்பு படம்)

    ஹைகலார் டிசைனர் ஃபுல் ஸ்லீவ் சுடிதார்

    ஹைகாலரில் ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு முழுக்கையின் மேற்புறம் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டு வரை ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு வரும் துணிகளே மிகவும் ட்ரெண்டியாக உள்ளன எனலாம். இவற்றை நம் உடல்வாகிற்கு ஏற்றார்போல் மிகவும் ஃபிட்டாக தைத்து அத்துடன் ஹைஹீல்ஸ் செப்பலை அணிந்தால் உங்களது தோற்றம் அனைவரையும் பார்க்க தூண்டும்.

    ஸ்ரெயிட்கட் டிசைனர் சுடிதார்

    உயரம் குறைந்தவர்கள் இது போன்ற சுடிதார்களையே பெரிதும் விரும்புவார்கள். நீண்ட குர்த்தி முன்புறம் கழுத்திலிருந்து குர்த்தியின் அடி வரை ஒரு சாண் அளவிற்று அழகிய டிசைன், பக்கவாட்டில் ஸ்லிட். சற்று யோசித்துப் பாருங்கள் இது போன்ற மிகவும் ஹெவியான டிசைன் செய்யப்பட்ட சுடிதார்களை எந்தப் பெண்ணும் விரும்பாமல் இருக்க முடியாது.

    கான்ட்ராஸ்டிங் கலர் சுடிதார் சூட்

    டாப், பாட்டம் மற்றும் ஷால் என எல்லாமே வெவ்வேறு நிறம் மற்றும் டிசைனில் வருகிறது. மாறுபட்ட விருப்பமுடையவர்கள் இதனை விரும்பி அணிகிறார்கள்.

    ஷார்ட் சுடிதார்

    இந்தியாவில் பஞ்சாப் மாநிலப் பெண்களின் பிரத்தியேக மாடல் என்று இதைச் சொல்லலாம். டாப்பானது முட்டிக் கால்களுக்கு மேல் இருப்பது போன்று தைக்கப்படும். கழுத்தை சுற்றியும், வயிறுவரை நீண்டும் டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதே போல் டாப்பின் கீழ்புறம் பட்டையாக டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற துணிகளில் ஷார்ட் டாப் சுடிதார் தைக்கப்படும் பொழுது அவை பார்ப்பதற்கும், அணிவதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    இவை மட்டுமல்லாமல் எளிமையாக ஆனால் நேர்த்தியாக இருக்கும் சுடிதார்கள், ப்ரோக்கேட் சுடிதார்கள், சில்க் டிசைனர் சுடிதார்கள், நெட்டட் சுடிதார்கள், பனாரஸ் சுடிதார்கள், முட்டி வரை இருக்கும் அனார்கலி, மாடல் சுடிதார்கள், ஃப்ராக் டைப் சுடிதார்கள், அம்பர்லா கட் சுடிதார்கள், பார்ட்டி வேர் சுடிதார்கள், மொகல் டைப் சுடிதார்கள், கைகளாலேயே நெய்யப்பட்ட சுடிதார் துணிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

    இது போன்ற சுடிதார்களை ரெடிமேடாக வாங்குவதோடு துணிகளை எடுத்து அவற்றை நம் ரசனைக்கேற்ப தைத்து அணிந்து கொண்டால் வர்ணிக்க வார்த்ததைகளும் வேண்டுமா?.
    ஒருவரது சுய உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் சேர்த்த ‘சுயார்ஜித’ சொத்துக்களை, அவரது விருப்பப்படி வேண்டியவர்களுக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்கலாம்.
    ஒருவரது சுய உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் சேர்த்த ‘சுயார்ஜித’ சொத்துக்களை, அவரது விருப்பப்படி வேண்டியவர்களுக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்கலாம். அதற்காக ‘விருப்ப உறுதி ஆவணம்’ என்ற உயிலை (WILL) எழுதி, ஆவணமாக பதிவு செய்வது பற்றி பதிவுத்துறை குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

    * தனது விருப்பப்படி ஒருவர் உயில் எழுதுவது அவரது அடிப்படை உரிமையாகவும், கடைசி ஆசையாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

    * உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்.

    * உயில் ஆவணத்தை பொறுத்த வரையில், அதன் பதிவுக்கான தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.

    * உயில்களை சீலிடப்பட்ட உறைகளுக்குள் வைத்து மாவட்டப் பதிவாளரிடம் பாதுகாப்பாக ‘டெபாசிட்’ செய்து கொள்ள இயலும்.

    * அவ்வாறு பாதுகாக்கப்படும் சீலிடப்பட்ட உறைக்குள் உள்ள உயிலை அதை எழுதியவர் அவரது ஆயுட்காலத்திற்குள் திரும்பவும் பெற இயலும்.

    * உயில் எழுதி சீலிட்ட உறையில் வைப்பு செய்தவர், இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றுடன், அங்கீகரிக்கப்பட்ட நபர் விண்ணப்பம் செய்யும்போது, மாவட்டப் பதிவாளரால் உறை பிரிக்கப்பட்டு உயில் ஆவணம் பதிவு செய்யப்படும்.

    * பதிவு செய்யப்பட்ட உயிலுக்கான சான்றிடப்பட்ட நகலை, அதனை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்வரை அவர் மட்டுமே பெற முடியும்.

    * உயிலை எழுதிக் கொடுத்தவர் இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்து எவரும் சான்றிடப்பட்ட நகலைப் பெறலாம்.

    * சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அசையாத சொத்துக்களை பொறுத்து, விருப்ப உறுதி ஆவணம் என்ற உயில் எழுதப்பட்டிருக்கும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் மூலம் அது உண்மை என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னரே சட்டப்படி (Pr-o-b-ate) அதை செயல்படுத்த இயலும்.
    தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோஸ் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - கால் கிலோ,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 4,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    பூண்டு - 1 பல்.

    கோஸ் குருமா

    செய்முறை :


    முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.

    பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.

    சுவையான கோஸ் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களுக்கு கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். இதற்கான காரணத்தையும், அறிகுறிகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பமாக இருக்கிறோம் எனும் உணர்வு பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க கூடிய ஒன்று. ஆனால், அவர்கள் உடலில் பல மாற்றங்களும் ஏற்பட துவங்கும். புத்தம் புதிதாக ஒரு உயிர் உருவாகும் போது, இதுபோன்ற அறிகுறிகள் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும் மற்றும் இந்த ஹார்மோன்கள் சமநிலையில் இருக்காது. இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப்படும் வரை வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படும். இதை தான் பெரியவர்கள் மசக்கை என்பார்கள். இங்கு மசக்கை ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.  

    கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம் போன்றவை சுவையற்றதாக தோன்றும். அதுவரை சுவைத்த விருப்ப உணவுகளும், பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். ஏதாவது வாசனை வந்தால் கூட, வாந்தி ஏற்படும்.

    அதற்காக எதையும் சாப்பிடாமல் தவிர்க்க கூடாது. அடிக்கடி பழச்சாறுகளை குடிக்க வேண்டும். எந்த வகை உணவுகளை சாப்பிட பிடிக்கிறதோ, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.

    இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், புளிப்பு சுவையுடைய உணவை சாப்பிடுவது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொருந்தாது. அது ஒருவருக்கு மற்றொருவர் வேறுபாடும்.

    மருத்துவர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். என்ன செய்தாலும், ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே வந்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

    இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவு, இரத்தப்போக்கு இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சாதாரண மயக்கம் மற்றும் வாந்தி தான் மசக்கை எனப்படுகிறது. அடிக்கடி தலைசுற்றல், எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் போன்றவை ஏற்பட்டால், அலட்சியம் செய்யக் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இது போல ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறைய பேர் உள்ளனர்.

    கருவில் குழந்தையின் முடி அதிகமாக இருந்தால் வாந்தி ஏற்படும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக சொல்லப் பட்டதே. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானது தான் என்றாலும், அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்.
    பெண்கள் அரைகால் சட்டை அணிவது தற்போதைய பேஷன்களில் ஒன்று. ஆண்கள் வசதிக்காக அணியும் கால் சட்டைகள் பெண்களுக்கு பேஷனாக மாறிவிட்டது.
    பெண்கள் அரைகால் சட்டை அணிவது தற்போதைய பேஷன்களில் ஒன்று. அரைகால் சட்டையை ஆண்கள் அணிவதற்கும், பெண்கள் அணிவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்கிறார் பேஷன் டிசைனர் காஷ்னி கபீர். ஆண்கள் வசதிக்காக அணியும் கால் சட்டைகள் பெண்களுக்கு பேஷனாக மாறிவிட்டது. பேஷனை விரும்பும் பெண்களை திருப்திப்படுத்தவேண்டும் என்றால், அது நாளுக்கு நாள் வித்தியாசமாக அமையவேண்டும். அதை கருத்தில்கொண்டு, கால்சட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது விதவிதமாக டிசைன்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி வருகிறது.

    ஸ்டோன் வாஷ், பிரிண்டெட், ஜிக்ஜாக், டிசைனர், பார்மல், கேஷுவல், மேட்சிங், ஹாட், மினி போன்று பல ரகங்கள் வந்துவிட்டன. டி-ஷர்ட்டிற்கு பொருத்தமான கால் சட்டைகளை பெண்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள் என்பதால், பிரபலமான ஜீன்ஸ் கம் பெனிகள் பல வண்ணங்களில் அழகிய கால் சட்டைகளை உருவாக்கி குவிக்கிறார்கள்.

    இந்திய பெருநகர பெண்கள் அத்தகைய கால்சட்டைகளை விரும்பி அணிவதால் இப்போது வெளிநாட்டு நிறுவனங்களும் ஆன்லைனில் அமோகமாக விற்பனை செய்கின்றன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ‘இமேஜ் கன்சல்ட்டன்ட்’ சவுமியா சதுர்வேதி, “பெரும்பாலும் கால் சட்டைகளை சவுகரியத்திற்காக அணிகிறார்கள். இமேஜ் என்று பார்த்தால் மற்ற இந்திய உடைகளைவிட கால்சட்டைகள் வித்தியாசமானவை. ஒரு சில உடைகளை இமேஜிற்காக உடுத்தாமல் சவுகரியத்திற்காக உடுத்த வேண்டியுள்ளது. அந்த இடத்தை கால்சட்டைகள் பிடித்துவிட்டன.

    இதில் பார்மல் கால் சட்டைகளுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. இதை அலுவலகம் செல்லும் பெண்களும் அணிந்துகொள்ளலாம். கால்சட்டைகள் மேலே அணியும் டி-ஷர்ட் மற்றும் நீண்ட கேட்டுடனும் வடிவமைக்கப்படுகிறது. இதை அணிந்துகொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லலாம். பார்மலாகவும், ரிலாக்சாகவும் இருக்கும். படகு சவாரி போகும்போது உடை பறக்குமே என்றெல்லாம் கவலைப்படவேண்டியதில்லை. கால்சட்டைகள் நம்மை டென்ஷன் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்” என்கிறார்.

    லண்டனின் வசிக்கும் கிளாரா, “இந்திய பெண்கள் இப்போது ரொம்பவும் மாறிவிட்டார்கள். வெளிநாட்டு பெண்களுக்காக வடிவமைக்கப்படும் கால் சட்டைகளை இன்று இந்தியப் பெண்களும் அணிகிறார்கள். வாகனம் ஓட்ட வசதியானது என்று டெல்லியில் உள்ள என் தோழிகள் சொல்கிறார்கள்” என்கிறார்.

    பரவுகிறது கால்சட்டை கலாசாரம்

    கால் சட்டை குட்டையானது என்பதால் விலை குறைவதில்லை. சில வகை கால் சட்டைகளுக்கு முழுபேண்ட்டைவிட விலை அதிகம். துணியின் தரம், முறையான பிட்டிங்க், உயர்தர பட்டன்களை பொருத்துவதால் விலை அதிகமாகிவிடுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கென தனியாக கால்சட்டைகள் தயாராகின்றன.

    கால்சட்டைகளுக்கு மவுசு அதிகரிப்பதற்கு நடிகைகள் முக்கிய காரணம். தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் சினிமாக்களில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் கால்சட்டைகளோடு நடந்து அதற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து சராசரி பெண்களும் பெருநகரங்களில் கால்சட்டை அணிந்து காலாற நடக்கிறார்கள். தங்களுக்கு அவை மிகவும் ஏற்ற உடைகள் என்றும் சொல்கிறார்கள்.

    கால்சட்டைகளை வடிவமைக்கும் நிறுவனங்கள் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு சூழலுக்கு ஏற்ற வகையில் அவைகளை உருவாக்கி வருகிறது. முன்பெல்லாம் சிறந்த கால் சட்டைகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. பெண்கள் தேவையை உணர்ந்து கால் சட்டைகளை வாங்குகிறார்கள்.

    இதில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. கால்சட்டை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் உடல் எடையையும் கட்டுக்குள்வைத்துக் கொள்வார்கள். கால்களையும், அழகாக பராமரித்துக் கொள்வார்கள். அதனால் அவர்களது ஒட்டுமொத்த அழகும் எடுப்பாக தெரிகிறது. கால்சட்டை அணியும் பெண்கள் மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவர்களாகவும், கம்பீரமானவர்களாகவும் கருதிக்கொள்கிறார்கள். கால்சட்டை அணியும் பெண்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், செயல்திறன் மிக்கவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்ளவும் செய்கிறார்கள். 
    இன்றைய தினம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் வேண்டி cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    குழந்தை தத்தெடுப்பு என்பது பெருமளவில் சட்டத்திற்கு வெளியே தான் அதிகம் நடக்கிறது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் அல்லது ஆயா வேலை செய்பவர்களை குழந்தையில்லா தம்பதியினர் அணுகி ''யாராவது குழந்தை வேண்டாம் என்று போட்டு விட்டு போய்விட்டால் தயவு செய்து அதை எங்களுக்கு கொடுங்கள். புண்ணியமாக போகும்” என்று வேண்டுகோள் வைப்பதுண்டு.

    நர்ஸ் மற்றும் ஆயாக்களும் குழந்தையை காப்பாற்றும் நல்லெண்ணத்துடனும், குழந்தை இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் பணத்தையோ, பொருளையோ எதிர்பார்க்காமல் பெற்றவளால் அனாதையாக கைவிடப்பட்ட குழந்தையை அவர்களிடம் கொடுப்பதுண்டு. இதில் சிலர் பணத்திற்காக ஆசைப்பட்டு செயல்படுவதும் நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் குழுவிலுள்ள இளம் பெண்கள் காதலிலோ, குடும்பத்தாலோ பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் தற்கொலை முயற்சியில் இறங்கும் போது தடுத்து காப்பாற்றி குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து, அந்த குழந்தையை குழந்தையில்லா தம்பதிகளுக்கு கொடுக்கும் மனிதாபிமான காரியங்கள் பிறர் கவனத்திற்கு வராமல் அங்குமிங்குமாக நடக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    நர்ஸ் அமுதவள்ளியின் வக்கீல் ஜெயராஜ் கூறுகையில் ‘எங்களுக்கு வேண்டாத யாரோ போனில் பேசி சதி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். குழந்தையை கொடுத்தவர்களோ, வாங்கியவர்களோ யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. எனவே இந்த வழக்கு நிச்சயம் நிற்காது. இது பொய்யான புகார்’ என்றார்.

    இன்றைய தினம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் வேண்டி cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,893 ஆகும். ஆனால், அரசின் குழந்தை காப்பகத்தில் 298 குழந்தைகள் தான் வளர்ப்பில் உள்ளனர். அதாவது தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி மிக அதிகம். விவரமறிந்து இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ...!

    குழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை. வரிசைப்படி வரும்போது அவரவருக்கு எந்த குழந்தை அமைகிறதோ, அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

    தத்தெடுப்பு முறை குறித்து மக்களிடம் கேட்டபோது ‘தத்தெடுப்பு வழிமுறைகள் கடினமாக உள்ளது. அனைவராலும் பூர்த்தி செய்ய கூடியதாக இல்லை. ஆகவே தான் தவறுகள் நடக்கின்றன” என ஆதங்கத்துடன் கூறினார்கள். மேலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை விடவும் நோகாமல் குழந்தையை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்பதும் குழந்தைகள் விற்பனைக்கு ஒரு காரணமாகும்!

    குழந்தைகள் விற்பனையை பொறுத்தவரை, வாங்குபவர்களும் வெளிப்படுத்துவதில்லை, கொடுப்பவர்களும் வெளியே தெரியப்படுத்துவதில்லை. பரஸ்பரம் அவரவர்களின் தேவைகளை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றி, போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது. ‘குழந்தை தத்தெடுப்பு விவகாரங்களில் கடந்த காலங்களில் அனாதை இல்லங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துவிட்டன. அதை களைவதற்குத் தான் மத்திய அரசு ‘இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து முறைப்படுத்தி உள்ளது. இதில் யாரும் தவறு செய்யவே முடியாது’ என்கிறார்கள் சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

    தமிழகத்தில் 1992-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதலில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அந்த திட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் 150 குழந்தைகள் வந்து சேர்ந்தன.

    இது வரை இந்த திட்டத்தின் மூலமாக மொத்தம் 5,239 குழந்தைகள் கிடைத்துள்ளன. முதல் 7 ஆண்டுகளில் மட்டுமே இத்திட்டத்தில் 3,279 குழந்தைகள் வந்தன. ஆனால், 1999 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 1,963 குழந்தைகள் மட்டுமே வந்துள்ளன. ஏன் தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டது?

    இந்த மாதிரி குழந்தைகளை யாராவது கண்டால், 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இது கட்டணமில்லா தொலைபேசி எண்ணாகும். இந்த எண்ணில் பேசினால் மறுபுறத்தில் பேசுபவர் தெளிவாக விசாரித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பார்.

    இந்த குழந்தைகள் 18 வயது வரை அரசால் பேணி வளர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் நேரடியாக இந்த மையங்களுக்கு சென்று இந்த குழந்தைகளை பார்வையிட்டு தத்து எடுக்க வாய்ப்பில்லை. இணையதளத்தின் வழியாகத்தான் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.

    தத்து எடுப்பதற்கான வழிமுறைகள்

    குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-


    • குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.
    • தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.
    • தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.
    • தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்கு மானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.
    • இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.
    • வருமான சான்றிதழ் தேவை.
    • சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
    • 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.
    • தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு ''குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.
    • இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.
    ×