என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பாசிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக திகழ்கிறது. இதனை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனை கட்லெட்டாக செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய பாசிப்பயிறு - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    பாசிப்பயிறு கட்லெட்

    செய்முறை


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முளைகட்டிய பாசிப்பயிறை மிக்சியில் போட்டு கொரகொர வென்று அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பாசிப்பயிறில் வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பிசைத்த மாவை உருண்டையாக செய்து வட்டமாக கட்லட் வடிவில் தட்டி வைக்கவும். அதை பச்சையாகவே சாப்பிடலாம்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான பாசிப்பயிறு கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தியானம் மேற்கொள்வதை மகிழ்ச்சியான பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஒரு பணியை மேற்கொண்டால், அந்த பணியை தொடர்ந்து எளிதாக செய்ய முடியும்.
    நாகரீக யுகத்தில் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் போன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மன நிம்மதி இழப்பதோடு, பல்வேறு நோய்களிலும் சிக்கி அவதிப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய தியானம் செய்வது ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. தினமும் தியானத்தை கடைபிடிப்பது கடினமான செயல் என கருதுபவர்களுக்கு சில எளிதான ஐடியாக்கள்...

    1) நீண்டநேரம் தியானம் செய்தால்தான் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஒரு தவறான கணிப்பாகும். அதாவது தொடர்ந்து 20 முதல் 30 நிமிடம் வரை தியானம் மேற்கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டாம். சில நிமிடங்கள் மட்டுமேகூட தியானம் மேற்கொண்டால் கூட சிறந்த பலன் கிடைக்கும். ஆனால், அதனை வழக்கமாக கடைபிடிக்க வேண்டும்.

    2) தியானம் மேற்கொள்ளத் தொடங்கும்போது முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிப்பது நல்லது. அதேபோல், தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்து முடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை வழக்கமாக்கிக் கொள்வர்.

    3) தியானம் மேற்கொள்ளும்போது சில நேரங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். அதனைத் தவிர்ப்பதற்காக குறைந்த அளவிலான நேரத்தை எடுத்துக்கொண்டு, இடைவேளை விட்டுவிட்டு தியானம் செய்ய முயற்சி செய்யலாம்.

    4) தியானம் மேற்கொள்ள ஏன் தொடங்கினோம் என அடிக்கடி நினைத்து பார்த்துக் கொண்டு, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்ளவதால், நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தொடர்ந்து தியானம் மேற்கொள்வதை வழக்கமாகக் கடைபிடிக்க முடியும்.

    5) தியானம் மேற்கொள்வதை மகிழ்ச்சியான பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஒரு பணியை மேற்கொண்டால், அந்த பணியை தொடர்ந்து எளிதாக செய்ய முடியும்.
    பிளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
    தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பிளம்ஸ் அதிகம் பயிராகிறது. சர்வதேச அளவில் பிளம்சை அதிகம் விளைவிக்கும் பாராக சீனா முதல் இடம் பெறுகிறது.

    அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம். மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் பிளம்சில் மொத்தம் 2 ஆயிரம் வகை இருக்கின்றன. அபரிமிதமான வைட்டமின்களைக் கொண்டது பிளம்ஸ்.

    வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.

    பிளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து செறிந்த பழம் இது. எனவே, ஆரோக்கியமாக உடலை பராமரிப்பதை போலவே அழகைப் பராமரிக்க உதவும் சரும நல மருத்துவராகவும் பிளம்ஸ் செயல்படுகிறது. குறிப்பாக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், கருப்பாக ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன திட்டுக்களையும் சரி செய்கிறது. இதனாலேயே பல்வேறு சரும நல பொருட்கள் தயாரிப்புகளில் பிளம்ஸ் பழத்தின் எசன்சை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளதாக கூறுகிறார்கள். நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றில் இருந்து நம்மைக் காக்கும் வேலையை பிளம்சில் செறிந்திருக்கும் வைட்டமின் சி செய்கிறது.

    பிளம்ஸ் பழத்தில் இருக்கும் ஆக்சலேட், சிறுநீரக் கோளாறு உடையவர்களுக்கும், பித்தப்பையில் பிரச்சினை கொண்டவர்களுக்கும் அவர்களுடைய நோயை தீவிரமாக்கும். அதேபோல் சிலருக்கு அலர்ஜியையும் பிளம்ஸ் உண்டாக்கும். எனவே, இவர்கள் பிளம்சைத் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்சினை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு பிளம்ஸ் பிரச்சினைகள் தீர்க்கும் அருமருந்து.

    வைட்டமின்கள் நிறைந்த பழம் என்பதைப் போலவே பொட்டாசியம், ப்ளூரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாமிரச்சத்துகள் கொண்டதாகவும் விளங்குகிறது. உடலில் காயங்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு, விரைவில் ஆற்றும் மருந்தாக பிளம்சில் உள்ள மருத்துவ குணம் அமைகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதும், சீரான ரத்த ஓட்டமும் கூந்தல் வளர்ச்சிக்கான அடிப்படை மருத்துவக் காரணிகள். எனவே, பிளம்ஸ் கூந்தல் பிரச்சினைகளை நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.

    பிளம்ஸ் எடுத்துக்கொள்பவர்களுக்கு முக்கியமாக இதில் உள்ள மினரல் சத்துகள், அதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த அணுக்களுக்கு துணையாக இருப்பதுடன் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியையும் இப்பழம் செய்கிறது. ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் இருப்பதால் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் பழம் இது. கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவுகிறது.

    ‘புதிய வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பிளம்ஸ் சாப்பிடுங்கள்‘ என்கிறது ஜப்பானின் ஆய்வு ஒன்று.
    குட்டீஸ்... உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்? நல்ல நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும், உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.
    குட்டீஸ்... உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்? உங்கள் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அம்மா, அப்பா, பள்ளியில் அவள், அவன் என்று ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும், உயர்வும் நிச்சயம் கிடைக்கும். உலகில் சிறந்த உறவு முறைகளில் நட்புக்கு முக்கிய இடம் உண்டு. நட்பை பெருமைப்படுத்துவதற்காக ஒரு தினம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆம், நண்பர்கள் தினமான அது ஆகஸ்டு முதல் ஞாயிறு (வரும் 4-ந்தேதி) வருகிறது. இந்த நண்பர்கள் தினத்தில் நாம் நட்பின் பெருமை பற்றி சிறிது பேசுவோமா...

    நட்புறவு வாழ்க்கைக்கு முக்கியமானது. பிறந்த குழந்தைகள் 9 மாதம் ஆகிவிட்டால் அவர்கள் மற்றவர்களின் நட்புறவை நாடுவார்கள். நட்பை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி. அவர்கள் தன்னுடன் பழகும் சகோதரன் சகோதரி மற்றும் பிற குழந்தைகளுடன் நட்புறவாக பழகுவதும், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்துக் கொள்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

    நட்புறவு என்பது நமது மனநலன், உடல்நலனில் சிறந்த விளைவுகளை உருவாக்குவதாகவும் ஆய்வு சொல்கிறது. நிறைய நண்பர்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்களாம். நண்பர்கள் மன அழுத்தங்கள், கவலைகளைப் போக்குவதில் பங்கெடுப்பதால் நம் மகிழ்ச்சி அதிகரித்து ஆயுளும் கூடுவதாக சொல்கிறார்கள். நண்பர்களுடன் கூட்டாக இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

    சில நேரங்களில் நண்பர் குழுவில் இருந்து வெளியேறி தன்னை ஈர்ப்புடையவராக, சிறந்தவராக காட்டிக் கொள்ள முற்படுவோம். இதற்கு “மகிழ்ச்சியான தலைமை விளைவு” என்று பெயர். அதாவது குழுவில் உள்ளவர்களின் பார்வை அல்லது சிந்தனை தன்னைப் பற்றியும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் வெளியேற்றத்திற்கான காரணமாகும் என்கிறது ஆய்வு.

    நட்பு வட்டாரமானது 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேய்ந்து, மலர்வதாக தெரிகிறது. அதாவது சிறந்த நட்பாக இருப்பவர்களின் உறவு, 7 ஆண்டுகால தொடர் நட்புக்குப் பின்பு சரிவு காண்பதும், பின்னர் புதிய நட்பு வட்டாரம் ஒன்று உருவாவதும், அடுத்த 7 ஆண்டில் அதிலும் பாதிக்கு மேலான நட்புறவுகள் சிதைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    பிள்ளைகளே நட்பால் உயர்வோம்

    மனிதர்களைவிட விலங்குகள் சிறந்த நட்புறவாக திகழும் என்கிறது ஒரு ஆய்வு. அதனால்தான் குழந்தைகளான உங்களுக்கு மற்ற பிள்ளைகளைவிட பொம்மைகள், விலங்குகள் முதலில் நண்பர்களாகிவிடுகிறார்கள். அவற்றிடம் பாசம் வைத்தால் அவை நம்மை ஏமாற்றாமல், எதிர்பார்க்காமல் அன்பை வெளிப்படுத்தும் என்பது உண்மையே. நாய், பூனை, ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் தங்களை வளர்ப்பவர்களுடன் நெருக்கமான பாசம் காட்டுவதை நாம் அறிவோம்.

    விலங்குகளும் நட்புறவு பேணும். மனித குரங்குகள், பபூன் குரங்குகள், செந்நாய், யானைகள், டால்பின்கள், குதிரைகள், வவ்வால்கள் போன்றவை தங்களுக்குள் மிகுந்த நட்புறவுடன் பழகுகின்றன.

    நம்முடன் நெருங்கிய குண ஒற்றுமை, மரபணு ஒற்றுமை கொண்டவர்களுடன்தான் நம்மால் நட்புறவு பேண முடியும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றவர்களுடன் நாம் வலிந்து நட்புறவு ஏற்படுத்தினாலும் அவை நிலைப்பதில்லை. அவ்வப்போது கருத்து வேறுபாடுகளால் முட்டி மோதிக்கொள்ள வேண்டியது வரும்.

    உங்களால் எவ்வளவு நண்பர்களைப் பெற முடியும் என்றும் ஒரு ஆய்வு மதிப்பிட்டுக் கூறுகிறது. அதிகபட்சம் 396 நண்பர்களை நீங்கள் பெற்றுவிட முடியுமாம், ஆனால் அவர்களில் வெகு சொற்பமாக 36 பேர்தான் உண்மையான நட்புறவுடன் இருப்பார்கள். அதாவது நான்கில் ஒருவர்தான் நல்ல நட்புடன் பழகுவார். மற்றவர்கள் தேவை கருதியோ, சூழல் கருதியோ நட்பை தொடர்வார்கள் என்கிறது அந்த ஆய்வு.

    உங்களுக்கு சிறந்த நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் உங்களுக்கு எப்போதும் கைகொடுப்பார்களா? நீங்களும் அவர்களின் தேவைக்கும், நட்புக்கும் கைகொடுத்து வாழ்வில் சிறந்த உயரங்களை எட்டுங்கள். மகிழ்ச்சி கொள்ளுங்கள்!
    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் 65 செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - கால் கிலோ
    மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவைக்கு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு

    பன்னீர் - 65

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    அவற்றுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

    இறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சுவையான பன்னீர் 65 ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று.
    நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று. நாம் வாழும் தென்னிந்திய பகுதி அதிக வெப்பம் நிறைந்தது. அதனால் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் நலத்திற்கு ஏற்றது. நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வந்த இந்த பழக்கம் பின்பு வழக்கத்தில் இருந்து மறைந்திருந்தாலும்,  தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு சனிநீராடலுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஆனாலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.

    - எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன்?

    - எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பொழுது எண்ணெய் தோல் அடுக்கு களுக்கு உள் செல்லுமா?

    - உடல் சூடு குறையுமா?

    - சருமத்திற்கு பளபளப்பு கிடைக்குமா?

    என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கான விடையை ஒவ்வொரு வரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எதற்காக?

    சருமம், நம் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, மாறி வரும் பருவ காலங்களுக்கு ஏற்ப தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைகளால் சருமம் பாதிக்கப்படுகிறது.

    நமது சருமத்தில் படியும் எல்லாவிதமான அழுக்குகளும் நீரில் கரையும் தன்மை வாய்ந்தவை இல்லை, சில வகை அழுக்குகள் கொழுப்பில்தான் கரையும். அப்படிப்பட்ட அழுக்குகள் எண்ணெய் தேய்க்கும்போது அகற்றப்பட்டு விடும்.

    எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கண், காது, மூக்கு, சருமம் போன்ற புலன் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.

    எண்ணெய்யை உடலில் தேய்க்கும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும். இதனால் உடலுக்குள் பத்து முதல் பதினைந்து சதவீதம் பிராணவாயு கூடுதல் செல்வதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கிறது. இது உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

    தசைகளில் தேங்கியுள்ள கழிவு, நிணநீர் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து சுத்தி கரிக்கப்பட்டு கழிவாய் வெளியேற்றப் படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

    உட்கார்ந்தபடியே கம்ப்யூட்டரை இயக்கி வேலை செய்பவர்கள் பலருக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் தசை பிடிப்பு ஏற்படும். அது ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி வலியை உருவாக்கும். எலும்பு தேய்மானமும் ஏற்படும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எலும்புகள் பலம் பெறும். கை, கால், மூட்டுகளிலும் எலும்பு தேய்மானம், எலும்பு சிதைவு போன்றவை ஏற்படாது. தலை முடியும் உதிராது.

    எண்ணெய் தேய்த்து குளித்தல்

    எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை

    50 மி.லி. நல்லெண்ணெய்யில் 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிதளவு மிளகு இட்டு சூடு செய்து, ஆறவைத்து தலைமுதல் பாதம் வரை கீழ் நோக்கி தேய்க்க வேண்டும்.

    தலையின் மயிர்கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். காது மற்றும் மூக்கில் இரண்டு சொட்டு இட்டு அழுக்குகளை நீக்க வேண்டும். கழுத்து தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் அழுத்தி தேய்த்து தசைப்பிடிப்புகளை போக்க வேண்டும்.

    அக்குள், தொடையிடுக்கு பகுதியில் வியர்வை உண்டாவதால் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அந்த இடங்களில் எண்ணெய் தேய்ப்பதால் சருமம் ஆரோக்கியமாகும்.

    பாதங்களில் சிறப்பு கவனம்கொடுத்து தேய்க்க வேண்டும். சிலருக்கு கால் மரத்து போகுதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஆகியவை நரம்பு இழைகள் பாதிப்பால் உண்டாகும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நரம்புகள் தூண்டப்பட்டு நன்கு செயல்படும்.

    பாதத்தின் பின்புறம் சிலருக்கு வெடிப்பு ஏற்பட்டு குதிகால் வலியுண்டாகும். அங்கு எண்ணெய் தேய்க்கும்போது பாதம் மிருதுவாகும். வெடிப்புகள் மறையும். விரல் இடுக்குகளிலும், விரல் நகக்கண்களிலும் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் அங்கு ஏற்படும் பூஞ்சை தொற்றுக்களை தவிர்க்கலாம்.

    வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல்சூடு நீங்கும். கண் எரிச்சல் தீரும். நல்லெண்ணெய் தேய்க்கும் பொழுது அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தோல் அடுக்குகளை தாண்டி எலும்பு மஜ்ஜை வரை செல்வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய், பூவந்திக்கொட்டை, அரப்புதூள், உதிலப்பொடி போன்றவற்றை கொண்டு தலை மற்றும் உடலை சுத்தம் செய்வது சிறந்தது. கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. சூரியன் உதித்த இரண்டு மணிநேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இளம் வெயிலில் உடல்படுமாறு இருந்து, பத்து முதல் இருபது நிமிடம் கழித்து குளிப்பது சிறந்தது.

    உணவு உண்ட பின் குளிப்பது தவறானது. அப்படி குளித்தால் அது ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அஜீரணத்தை உண்டாக்கும்.

    சிலருக்கு சைனஸ், தலைவலி, மூக்கடைப்பு போன்ற தொந்தரவு இருக்கும். அவர்கள் சுக்குத் தைலம், பீனிச தைலம், நொச்சித் தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி குளிக்கலாம். உடல் சூடு இருந்தால் சந்தனாதி தைலம் பயன்படுத்தலாம். பொடுகு இருப்பவர்கள் பொடுதலை தைலம் பயன்படுத்தலாம். தேவைப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.

    எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். இளநீர், சில்லென்ற பானங்கள் பருகுவதை தவிர்த்து விட வேண்டும். அன்று மட்டும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் ஓய்வை நாடும். எனவே அன்று கடினமான வேலைகளை செய்வதையும், வெயிலில் அலைவதையும் தவிர்க்கலாம். அன்று பகலில் உறங்க கூடாது. உடலுறவு கூடாது. வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. இயலாதவர்கள் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற் படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இளமையையும், அழகையும் பாதுகாக்கலாம்.

    எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாதவர்கள்

    கண்நோய், வயிற்றுப்போக்கு, வாந்தி, அஜீரணம், காய்ச்சல், காதில் சீழ் வடிதல், நீடித்த நுரையீரல் நோய்கள், தொடர் இருமல் போன்ற பாதிப்புகொண்டவர்கள், எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

    கட்டுரை: டாக்டர். இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.
    பெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.
    பெண்கள் எவ்வளவு நவ நாகரீகமான ஆடைகளை அணிந்தாலும், சேலைகளை அணிந்து கொண்டு செல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள். சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.

    ஃபிரில் ரெடிமேட் சேலைகள்

    அதாவது இந்த சேலைகளின் கீழ்ப்பகுதியில் ஃபிரில்லானது ஒரு முனையிலிருந்து துவங்கி மறு முனையில் முடியும். சேலையின் மேல்ப்பகுதியில் அழகிய மணிகள் தொங்குவது போல் இடுப்பிலிருந்து துவங்கி முந்தியில் முடிவது போல் டிசைன் செய்யப்பட்டிருக்கும். தோள் பட்டையிலிருந்து முந்திவரை சேலையானது மடிப்பு வைத்து நாம் அணிந்து கொள்வது போல் அவர்களாகவே ஒரு பேடுடன் இணைத்துத் தைத்திருக்கிறார்கள். அந்தப் பேட் பகுதியை அப்படியே எடுத்த தோள் பட்டையில் வைத்து பின் போட்டுக்கொள்ளலாம்.

    இந்தச் சேலையின் மற்றொரு சிறப்பம்சம் இந்தத் துணியானது எவ்வளவு கசக்கினாலும் கசங்காது. இறக்குமதி செய்யப்பட்ட துணியினால் தயார் படுத்தப்பட்டுள்ள இந்தச் சேலை செல்ஃப் டிசைன்களுடன் பளபளப்பாகவும், மினுமினுப்புடனும் பார்ப்பதற்கு பிளெயின் கலரில் இருக்கின்றது. இதே துணியில் டபுள் ஃபிரில் வைத்த சேலைகளும் உள்ளன. இது போன்ற சேலைகளுக்கு அடர்ந்த வண்ணங்களில் உள்ள வெல்வெட் துணிகளில் மிக அழகிய மணி வேலைகள், சம்க்கி வேலைகள் செய்யப்பட்ட ரெடிமேட் பிளவுஸ்கள் தரப்படுகின்றன. இந்தச் சேலைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

    நெட்டட் சேலைகள்

    வலை போன்ற துணிகளில் இவ்வளவு கலை நயத்துடன் செய்ய முடியுமா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றும் அளவுக்கு ஆச்சரியமான வேலைப்பாடுகளை அந்தச் சேலைகளில் பார்க்கலாம். சேலை முழுவதும் ரேஷம் வேலைப்பாடு அதன் மேல் அழகிய கற்கள் பதித்தும், பார்டர்களில் வேறு வண்ணத்தில் ரேஷம் வேலைப்பாடு செய்தும் வரும் நெட்டட் சேலைகளை காணக் கண் கோடி வேண்டும்.

    கடிசில்க் பிரிண்டட் (டிஜிட்டல்) சேலைகள்

    இவ்வகைச் சேலைகளை அணியும் பொழுது நம்மைப் பாராட்டாதவர்கள் இருக்கவே முடியாது. இவை ஒரு திகைப்பான கம்பீரத் தோற்றத்தைத் தருகின்றன. உடலில் கட்டங்கள் இருந்தால் பார்டர்கள் பிளெயினாகவோ, பார்டர்களில் கட்டங்கள் இருந்தால் உடல் முழுவதும் கட்டங்களாக பிரிண்ட் செய்யப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் வண்ண மயமாகவும், விலையும் நயமாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.

    லெஹங்கா சேலைகள்

    பெரும்பாலும் வேலைப்பாட்டுடன் கூடிய ஜ்யார்ஜெட் துணிகளிலேயே இவ்வகை லெஹங்கா சேலைகள் வருகின்றன. ஒரே சேலையில் பாவாடை போன்று தைக்கப்பட்ட பகுதியும் அதன் தொடர்ச்சியாக சேலையும் இருக்கும். இதனை சரியாக அணிந்தோமென்றால் பார்ப்பதற்கு தனியாக லெஹங்கா போன்றே இருக்கும். இந்த சேலைகளில் உடல் கலரும் பார்டரும் மிகவும் கான்ட்ராஸ்டாகவும், அழகாவும் அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

    ஒன்மினிட் ரெடிமேட் ப்ளேடட் சேலைகள்:-

    இவ்வகைச் சேலைகள் ஒரு நிமிடத்திலேயே அணிந்து கொள்ளும் விதமாக முன்பக்க கொசுவம் மற்றும் முந்தி ரெடிமேடாக தைக்கப்பட்டு இருக்கும். பேன்ட் அணிந்தவர்கள் கூட இந்த சேலைகளை எளிதாக அணிந்து கொள்வதற்கு ஏதுவாக இடுப்பில் கொக்கி அல்லது வெல் க்ரோ வைத்துத் தைக்கப்பட்டு இருக்கும் விதத்தில் இவை சேலை அணியத் தெரியாதவர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலைகளாகும் சோளிகள் மிகவும் வேலைப்பாட்டுடனும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    பனாரஸ் சேலைகள்

    பழைய காலம் தொட்டு இன்றுவரை பனாரஸ் சேலைகளுக்கே தனி மவுசுதான். கான்ட்ராஸ்ட் கலர்களில் உடல் மற்றும் பார்டர்கள் இருக்க அதிலிருக்கும் ஜரி வேலைப்பாடுகள் அதன் அழகை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக உள்ளது. சில்வர் நிற ஜரிகைகளில் இருக்கும் டிசைன்களை உடல் முழுவதும் நெய்து பார்டர் டிசைன்களை வேறுபடுத்திக் காண்பிப்பது போல் வடிவமைத்திருப்பது இச்சேலைகளில் சிறப்பம்சமாகும்.
    சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.
    சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் பற்றி நிதியியல் ஆலோசகர்கள் மற்றும் கட்டுனர்கள் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

    * எதிர்காலத்தில் கூடுதலாக வாய்ப்புள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டிட விரிவாக்கம் ஆகிய விஷயங்களை மனதில் கொண்டு வீட்டின் வடிவமைப்பை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். மேலும், கச்சிதமான அளவு என்பது சொந்த வீடு விஷயத்தில் மிகவும் அவசியமானது.

    * இரண்டு படுக்கையறை வீடே போதுமானது என்ற நிலையில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்க முடிவெடுப்பது கடன் சுமையை அதிகரிக்கும். சிறிய வீடாக இருப்பின், திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் வசதிகள் கொண்டதாகவும், அடிப்படை வசதிகள் உள்ள பகுதியிலும் எளிதாக வாங்க முடியும். பெரிய வீடு என்றால் திட்டமிட்ட அதே பட்ஜெட்டில் புற நகர் பகுதிகளில்தான் வாங்க இயலும்.

    * வீட்டு உரிமையாளரது ஆண்டு வருமானத்தில் 3 மடங்கு அளவுக்கும் மேல் சொத்து மதிப்பு உள்ள வீடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சத்திற்குள் இருப்பதே நல்லது.

    * வீட்டு உரிமையாளர் பெறக்கூடிய மாத வருமானத்தில் 25 சதவிகித அளவுக்கும் அதிகமாக மாதாந்திர கடன் தொகை இருப்பது கூடாது. அதாவது, மாத வருமானம் ரூ.50 ஆயிரம் என்றால் ரூ.12,500-க்கும் மேல் மாதாந்திர தவணைத்தொகை செலுத்தும்படி இருத்தல் கூடாது.

    * கடன் வாங்காமல் வீடு கட்டுவது அல்லது வாங்குவதே நல்லது என்றாலும் அனைவருக்கும் அது சாத்தியமாக இருப்பதில்லை. அதனால், இயன்றவரை பொருளாதார சேமிப்புகளை திட்டமிட்டு பயன்படுத்தி கடன் சுமையை குறைக்க முயற்சிப்பதே எதிர்கால நலன்களுக்கு ஏற்றதாகும். உதாரணமாக, வீட்டின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம் என்ற நிலையில், சேமிப்பாக கைகளில் ரூ.10 லட்சம் இருப்பின், மீதமுள்ள ரூ.20 லட்சம் மட்டுமே கடன் தொகையாக இருக்கும். அதற்கான மாதாந்திர தவணை என்பது பெரிய நெருக்கடியாக இருக்காது.

    * கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்த வருடங்கள் கொண்ட கடன் திட்டத்தை தேர்ந்தெடுப்பது நிதி மேலாண்மைக்கு உகந்தது. கடன் தொகை திருப்பி செலுத்தப்படுவதற்கான காலகட்டம் அதிகப்படியான வருடங்கள் கொண்டதாக இருப்பது கூடுதல் நிதிச்சுமையாக அமையும்.

    * மாதாந்திர தவணைக்கான கடன் வட்டி என்பது மாறாத வட்டி விகிதமாக இருப்பதே நல்லது. மாறுபடும் வட்டி விகிதம் கொண்ட கடன் தொகை கூடுதல் நிதிச்சுமையாக அமையக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
    பார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பார்லி - அரை கப்,
    கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி - ஒரு கப்,
    வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு,
    புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்,  
    உப்பு - தேவையான அளவு,
    எலுமிச்சைப்பழம் - அரை மூடி

    பார்லி - வெஜிடபிள் சூப்

    செய்முறை :


    கொத்தமல்லி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்கறிகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    குக்கரில் பார்லியுடன் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும்.

    ஆறியதும் மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.

    சூப்பரான பார்லி - வெஜிடபிள் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    40 வயது கடந்த பெண்கள் தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம்.
    40 வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    ஸ்குவாட்

    நின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.

    ப்ளாங்க்

    தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

    லெக் ரைஸ்

    நேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.

    40 வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.   ஸ்குவாட்  நின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.  ப்ளாங்க்  தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.  லெக் ரைஸ்  நேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.    லஞ்செஸ்  நின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.  பர்பீஸ்  நேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.  மறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.

    லஞ்செஸ்

    நின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.

    பர்பீஸ்

    நேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.

    மறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    உடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.
    பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
    சொன்ன சொல் தவறாமல் கேட்கும் என் பிள்ளைகள் பதின்மூன்று வயதில் எப்படி மாறினார்கள்? ஏன் மாறினார்கள்? அன்று அன்பொழுக வகுப்பில் நடந்தவற்றை எல்லாம் சொல்லி சொல்லி மடியில் தலைவைத்துத் தூங்கிய பிள்ளைகள் இன்று ஏன் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறார்கள் என்ற வருத்தம் தோய்ந்த கேள்வி எழுகிறதா? பதின்மூன்று வயதிலிருந்து பத்தொன்பது வயது வரை உள்ள குழந்தைப் பருவத்தையே பதின்பருவம் என்றும் வளரிளம் பருவம் என்றும் அழைக்கிறோம். ஆண், பெண் பிள்ளைகளிடம் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாற்றம் நடப்பது இக்காலகட்டத்தில்.

    அந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் பதற்றத்துடனும், பயத்துடனும் எதிர்கொள்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வையும் பிளஸ்-2 அரசுப்பொதுத்தேர்வையும் எதிர்கொள்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாய் அமையும் உயர்கல்விக்காகக் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களைக் கலக்கமுறச் செய்கின்றன.

    அதுவரை குழந்தைகளாய் இருந்த தங்களை அவர்கள் பெரியோராக மெல்லமெல்ல உணரத்தொடங்குகிறார்கள். எதிர்பாலினங்களின் மேல் வரும் ஈர்ப்பை அவர்கள் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு சொல்லமுடியாத தீராத மனவலிக்கு ஆளாகிறார்கள். தங்களின் மன உடல் மாற்றத்தைத் தங்கள் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூச்சப்பட்டு நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    அவர்களின் உலகம் என்னும் புரியாத புதிருக்குள் நுழையும் வழியறியாமல் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். கூட்டுப் பறவைகளாய் அதுவரை வீட்டிற்குள் வளர்ந்த குழந்தைகள் பொதுவெளிக்கு வரவிரும்புகிறார்கள், அவர்களின் உளவியல் உடலியல் சிக்கல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களைச் சரியாக வழிநடத்தத் தவறினால் அவர்களின் எதிர்காலமே பாழாகும் நிலை ஏற்படலாம்.

    பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமூகத்தின் கட்டுப்பாடுகளைக்கண்டு எரிச்சலடைந்து எதிர்வினை புரிகிறார்கள். சுதந்திரமாய் நாலுபேரோடு பேசிப் பழக விரும்புகிறார்கள், தடுக்கும் பெற்றோர்களை எதிர்க்கவும் எடுத்தெறிந்து பேசவும் துணிகிறார்கள். தங்கள் உடலைக் கொண்டாடத் தொடங்கி கண்ணாடிமுன் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். லட்சரூபாய் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பறக்கத்தொடங்குகிறார்கள். சில பிள்ளைகள் மன அழுத்தத்தால் மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.

    அவர்களின் கவனம் எதிர்காலத்திலிருந்து திசைமாறி வேறுதிசை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது. எப்போதும் தனிமை, வெறுமை, இறுக்கம் போன்றவற்றிற்கு ஆட்படுகிறார்கள். அந்தக் காலத்தில்தான் வைரத்தை வாசலில் எறிந்துவிட்டு கூழாங்கற்களை அவர்கள் கையில் ஏந்திக்கொண்டிருப்பதாய் சமூகம் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசத் தொடங்குகிறது.

    பதின்பருவத்துக் குழந்தைகள் அன்புக்கும் தங்கள் பெற்றோர்களின் அங்கீகாரத்திற்கும் ஏங்குகிறார்கள். பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமைக்குச் சமூக ஊடகங்கள் தீனியாய் அமைகின்றன. நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கதிகமான செல்போன் பயன்பாட்டிற்குள்ளாகிச் சமூக ஊடகங்களுக்குள் நுழைகிறார்கள்,

    முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர், டிக்டாக் கணக்குகளைத் தொடங்குகிறார்கள். இணையத்தின் மாயஉலகில் அப்பிள்ளைகள் நுழைவது இப்படித்தான். சமூக ஊடகங்கள் மூலமாக அரும்பும் காதல் அவர்களைக் கவனத்துடன் படிக்கவிடாமல் வேறு திசை நோக்கித் திருப்புகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்கள் சொந்த வாழ்வைத் தந்து அவர்கள் வழி தவறுவதற்கு யார் காரணம்? பள்ளிச் சீருடைகளுடன் அவர்களைக் காதல் பிம்பங்களாய் சித்தரிக்கும் திரைப்படங்கள் அவர்களின் வழி தவறுதலுக்கு ஒருவகையில் காராணம்தான். உண்மை எது? போலி பிம்பங்கள் எது என்று தெரியாமல் அப்பிள்ளைகள் பதின்பருவத்தில் வழி தவறுவதற்குப் பெற்றோர்களும், சமூகமும் ஏன் காரணமாக வேண்டும்?

    பதின்பருவப் பிள்ளைகளின் சிறுநடவடிக்கைகளைக் கூட பெற்றோர்கள் கூர்ந்து கவனமாக நோக்க வேண்டும், பாதை தவறுவதாய் உணர்ந்தால் நம் செயல்கள்தான் நம் முகங்களாக அமைகின்றன என்று மென்மையான சொற்களால் அவர்களைத் திருத்த முயலவேண்டும். அவர்களை அடிப்பதோ, அவர்களைக் கண்டபடி திட்டுவதிலோ பயனில்லை, வாழ்வின் மாயைகளை அவர்களுடன் பேசிப்பேசியே உணர்த்தமுடியும். அவர்கள் செய்யும் செயல் அவர்களின் வாழ்வில் உண்டாக்கப் போகும் தீயவிளைவுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

    அவர்கள் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் வாழ்வைப் பாழாக்கும் என்பதை அவர்கள் உணரச்செய்யவேண்டும். விலையுயர்ந்த ஸ்மார்ட் செல்பேசிகளையும், விலையுயர்ந்த பைக்குகளையும் பெற்றோர்கள் அப்பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். அருகருகே இருந்தாலும் தண்டவாளங்கள் எந்தப் புள்ளியிலும் ஒன்று சேரமுடியாது. அவர்கள் நியாயப்படுத்தும் தவறுகள் பெற்றோர்களைக் காயப்படுத்தத்தான் செய்யும். அதனால் செய்த தவறுகளை நியாயப்படுத்தாமல் ஒத்துக்கொண்டு இனிமேல் செய்யாமல் இருப்பதற்கான நேர்மையை அவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும்.

    கல்கண்டு போல்தான் உடைந்த கண்ணாடியும் காட்சியளிக்கிறது, கவனமாய் இல்லையென்றால் குத்திக்கிழித்துவிடும் இந்த வாழ்க்கை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். பெண்பிள்ளைகளுடன் தாய் நட்பாகப் பழகுவதன் மூலம் சமூகத்தின் பல்வேறு முகங்களை அவர்களுக்குக் காட்டி கவனமாய் இருக்கவைக்க முடியும். மனத்தெளிவே அவர்களின் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் ஒரே வழி. அத்தெளிவை அவர்களுக்கு உண்டாக்கி அல்லதை விலக்கி, நல்லதை நோக்கி நகர்த்தப் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்.

    சுத்தியல்களால் அடிக்கப்படும் ஆணிகள் மாதிரி சொற்களால் அப்பிள்ளைகளை அடிப்பதைவிட மென்மையாலும் உண்மையாலும் அவர்களுக்கு நன்மையை உணர்த்துவோம். காரிருளைப் பழிப்பதைவிட அகல்விளக்காய் இருக்கலாமே. நடந்துபோக மட்டுமல்ல பிடிக்காதவற்றைக் கடந்துபோகவும்தான் கால்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, பிள்ளைகளின் உளவியலும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உண்மையைச் சொல்லி நன்மையைச் சொல்லி வாழ நம் பிள்ளைகளை நாம் பயிற்றுவிக்க வேண்டும்.

    என்னால் முடியாமல் போன என் கனவுகளை என் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வமறியாமல் நாம் முன்னிறுத்தும் லட்சியங்களே அப்பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு சேர்க்கின்றன. உறுத்திய கண்களால் உலகைப் பார்க்கும்போது எல்லாம் கலங்கலாகத்தான் இருக்கும், எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது, நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அவர்களை நம்புவோம், வழி தவறும்போது நண்பர்களைப் போல் நாசுக்காய் அவர்களைத் திருத்துவோம்.

    பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தனியார் கல்லூரி, திருநெல்வேலி.
    புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
    சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகை பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம் உள்ளதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கு வழக்கப்பட வேண்டுமென்று அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இங்கிலாந்தை சேர்ந்த 5 லட்சம் பேரின் ‘பயோ பேங்க்’ தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 வருட காலத்தில் 5,081 பேருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அதில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படுவதைவிட பெண்களுக்கு குறைந்தளவே மாரடைப்பு ஏற்பட்டாலும், சில ஆபத்து காரணிகள் பெண்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

    புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆண்களில் 2 மடங்கு மட்டுமே ஆபத்தை கூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட 83 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

    மாரடைப்பு

    மேலும், முதல், இரண்டாம் வகை சர்க்கரை நோயுடைய ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. பாலினம் சார்ந்து இந்த பாதிப்புகள் எப்படி மாறுபடுகின்றன என்பது குறித்து தங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் உயிரியல் காரணிகள் முக்கிய காரணமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    உதாரணமாக, மோசமான உணவு முறை, வாழ்க்கைப்போக்கின் காரணமாக ஏற்படும் 2-ம் வகை சர்க்கரை நோய் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தங்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை பெரும்பாலான பெண்கள் உணருவதில்லை என்றும், அறிந்தவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையை பெறுவதில்லை எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டாலும், இங்கிலாந்தில் பெண்கள் அதிக அளவு உயிரிழப்பதற்கு இதய நோயே காரணமாக உள்ளதென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான பெண்களுக்கு ஆபத்தின் வீரியம் புரியவில்லை என்றும் ஆராய்ச்சி குழுவினர் கூறுகிறார்கள்.
    ×