என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன். இத்தகைய டிராகன் சிக்கனை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - 1 கையளவு
    வெங்காயம் - 1
    வெங்காயத் தாள் - சிறிதளவு
    வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு…

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    டிராகன் சிக்கன்

    செய்முறை

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

    கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
    கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்

    கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வைகோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.

    யாருக்கு பாதிப்பு ஏற்படும்

    தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.

    கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்

    கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்க வேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.

    20-20-20 விதி

    கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். அரு காமையில் பார்ப்பது கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதற்கு சமமாகும். பழைய சி.ஆர்.டி மானிட்டர்களை பயன்படுத்துவோர் ஆன்டிகிளார் ஸ்க்ரீன் மானிட்டருக்கு முன்பாக மாட்டிக் கொள்ளலாம். புதிய எல்.இ.டி மானிட்டர்களுக்கு இது தேவையில்லை. மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏர் கண்டிஷனர் ஏசி காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரக்கூடாது.

    நாம் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்கள் உலர்ந்து போவதை தவிர்க்க முடியும். இருக்கைகள் பின்னால் சார்ந்து அமர வசதியாக இருக்க வேண்டும். பாதங்கள் தரையில் படும் படியாக இருக்க வேண்டும்.

    கண் கண்ணாடிகள்

    எல்லோருக்கும் பொருந்த கூடிய கம்ப்யூட்டர் கண்ணாடி என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏதாவது பார்வை கோளாறு உள்ளதா என்று கண்டறிந்து அவரவர் தேவைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் கண்ணாடிகள் அணிந்து கொள்வது அவசியம். கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம்.

    கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட் ரோமை நிச்சயம் தவிர்க்கலாம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

    ராஃபா கிளினிக், கே.டி.சி. டெப்போ எதிரில், தென்காசி.
    கர்ப்ப கால கட்டமான 9 மாதங்களிலும் ஒவ்வொரு நாளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஏற்படும். அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கிட்டதட்ட 9 மாதங்களுக்கு மாற்றும் வல்லமை கொண்டது பெண்களின் கர்ப்ப காலம். தலைமுதல் கால்வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் மொத்தமாக புரட்டிப் போடப்படும் பருவம் இது. எனினும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அற்புதமான நாட்கள் இவை என்பது முக்கியமானது.

    கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சினை சாதாரணமானது. எனினும், வெள்ளைப்படுதல் பிரச்சினையால் புண், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

    கர்ப்ப காலத்தின் தொடக்கமான முதல் மாதத்திலிருந்து பிரசவத்திற்கு பிறகு கிட்டதட்ட 6 மாதங்கள் வரையிலோ, அல்லது அதற்கு மேலோ கூட சில பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். கர்ப்பமடையும்போது முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிகவும் மிருதுவாக மாறுகின்றன. மேலும், கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதும், கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, நின்றுகொண்டே இருப்பது முதுகுவலியை மேலும் மோசமடையவைக்கும். எனவே கர்ப்பமடைந்த சிறிது நாட்களுக்கும், பிரசவத்திற்கு பிறகும் இந்த நிலைகளைத் தவிர்ப்பது நல்லது.

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சுத்திணறலும், சரியாக மூச்சு விட முடியாமலும் அதிக பெண்கள் உணர்வார்கள். எனினும், இது இயல்பான ஒன்றுதான். கர்ப்பையில் இருக்கும் குழந்தை கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டம் வழியாக வெளியே கடத்துவதால்தான் இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    குழந்தையால் ரத்தத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடல் சிரமப்படுகிறது. மேலும், கர்ப்ப காலத்தின் நிறைவு பகுதியில் கருப்பையானது உதர விதானத்தை நுரையீரல் வரை மேல்நோக்கி தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்கு போதுமான இடமின்றி போய்விடுகிறது. இதனால், குறிப்பிட்ட அளவு காற்றை கர்ப்பிணிகளால் சுவாசிக்க இயலாமல் போய் சுவாசத்தடை ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் இருமல், சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஆகியவை இருந்தால் சரியான மருத்துவம் செய்து கொள்வது நல்லது.

    பதினாறாவது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்காக கருப்பை பெரிதாவதன் காரணமாக வயிற்றை அழுத்தும். அதனால், இரைப்பையில் உள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியில் தள்ளப்படும். இதனால், அஜீரணம், நெஞ்செரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற உணர்வுகள் அதிகளவில் தோன்றும். எனினும், இந்த அறிகுறிகள் அதிகமாகத் தோன்றினால் மஞ்சள் காமலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒரே அடியாகச் சாப்பிடாமல் கொஞ்ச கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிடுவது இந்த காலகட்டத்தில் நல்லது. சூடான பால் நெஞ்செரிச்சலுக்கு இதமளிக்கும்.

    கர்ப்ப காலகட்டத்தில் தலைவலி ஏற்படுவது சகஜமான ஒன்று. காரணம், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இதைத் தவிர்க்க காற்றோட்டமுள்ள சூழலில் இருக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் தலைவலி அதிகம் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.

    கர்ப்ப காலத்தில் பல் ஈறுகள் மென்மையடையும். அதனால், கடினமான உணவுப்பொருட்களை உண்பது, பற்களை அழுத்தித் தேய்த்தல் போன்ற செயல்கள் பற்களைப் பாதித்து நோய்த்தொற்றினை உண்டாக்கலாம். அதனால், கர்ப்ப காலத்தில் பற்கள் பராமரிப்பு மிகவும் அவசியம். தினசரி இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எக்ஸ்ரே, சிகிச்சை ஆகியவற்றை கர்பப் காலத்தில் மருத்துவர் ஆலோசனையின்றி மேற்கொள்ள வேண்டாம்.

    கர்ப்ப காலத்தில் சிலருக்கு மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்படும். இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், நீண்ட நேரத்திற்கு ரத்த கசிவு நீடித்தால் மருத்துவ பரிசோதனை அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு காது, மூக்கு, தொண்டை நிபுணரை பார்ப்பது நல்லது.

    உடல் எடைக் குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி, யோகா செய்வதன் மூலமும் விரைவில் குறைக்க முடியும்.
    உடல் எடைக் குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி, யோகா செய்வதன் மூலமும் விரைவில் குறைக்க முடியும். முக்கியமாக காலை நேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள் உடல் எடைக் குறைப்புக்கு மிகவும் உதவுவதாக வல்லுநர்கள் அறிவுருத்துக்கிறார்கள்.

    காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு பெரிய டம்ளரில் குடிக்க வேண்டும். அப்படிக் குடிப்பதன் மூலம் உடல் சுத்தப்படுத்தப் படுகிறது. அன்றைய தினம் நீங்கள் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரிக்கச் செய்ய இந்த ஒரு கிளாஸ் தண்ணீர் உதவுகிறது.

    அடுத்து ப்ரீ-வொர்க் அவுட் மீல் என்று கூறுகிறார்கள். அதாவது காலையில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு வாழைப்பழமோ, சாலட்டோ உட்கொள்வதன் மூலம் உடற்பயிற்சியை நீங்கள் எந்தவித சோர்வும் இன்றி செய்ய முடியும். மேலும் உடலில் எனர்ஜி அதிகரித்து நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்வதால் கலோரிகளையும் அதிகமாக எரிக்க முடியும்.

    அடுத்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி. யோகா, கார்டியோ, வெயிட் லாஸ் உடற்பயிற்சி, நீச்சல், வாக்கிங், ஜாகிங் எப்படி உங்களது உடல், சக்திக்கு ஏற்றவாறு கட்டாயம் எதோ ஒன்றை தினமும் செய்வதை வழக்கமாக்குங்கள். முக்கியமாக இப்போது விட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது. அதனால் அதிகாலையில் வெயில் படுமாறு உடற்பயிற்சி செய்வது நலம்.

    அடுத்து போஸ்-வொர்க் அவுட் மீல். இதனை நீங்கள் காலை உணவாகவோ அல்லது ஸ்நாக்ஸாகவோ சாப்பிடலாம். ஸ்நாக்ஸ் என்றால் பப்பாளி, மோர், வேகவைத்த கேரட், முட்டை, ஆப்பிள், பாதாம், இளநீர், வேகவைத்த சிக்கன், ஓட்ஸ் இவற்றில் ஏதோ ஒன்றை நீங்கள் உடற்பயிற்சி செய்தபின் எடுத்துக்கொள்ளுங்கள்.

    இவற்றை உடற்பயிற்சி செய்யும் முன்னும் ப்ரீ-வொர்க் அவுட் மீல்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு காலையில் நேரம் இல்லை என்றால், நேரடியாக காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு 11 மணிபோல இதில் ஏதோ ஒன்றை உட்கொள்ளுங்கள்.  உங்களது காலை உணவு புரதச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கட்டும். இப்படி உங்களது காலையை தினமும் ஆரோக்கியமானதனாக மாற்றினாலே உடல் எடைக் குறைக்கும் வழிமுறை சுலபமாக ஆகிவிடும். சீக்கிரம் உடல் எடையும் குறையும்!
    பார்லியை டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி அரிசி - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு

    பார்லி

    செய்முறை:

    பார்லி அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

    ஆறிய பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் பார்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.

    சத்தான பார்லி கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முகப்பரு தழும்பு, தோல், முடி பிரச்சனை, பச்சை குத்தியது நீக்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.
    முடிமாற்று அறுவை சிகிச்சை (Hair Transplantation)

    தோல் மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக முடி வளர வைப்பதற்கு FUE (Follicular Unit Extraction) என்ற முறையில் தழும்புகள் இல்லாமல் மயக்க மருந்து இல்லாமல் எளிய முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முறையில் வளரக்கூடிய முடியும் அதன் அமைப்பும் இயற்கையான தோற்றம் அளிக்கும்.

    காண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத எளி மையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். மருத்துவமனை யில் தங்க வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்கவிளைவும் கிடையாது. இந்த முறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடி யின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.

    லேசர் முடிநீக்கம்:

    பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்கவிளைவும் கிடையாது.

    இந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யக்கூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.

    பரு தழும்பு நீக்குதல்:

    முகத்தில் வரக்கூடிய பரு தழும்புகள் இளம் வயதினருக்கு பெரும் கவலை அளிக்ககூடிய ஒரு பிரச்சனையாகும். (Fraxel 1550nm Erbium Glass) என்ற அதிநவீன சிகிச்சை முறைபடி முழுமையாக பரு தழும்புகளை நீக்கி விடலாம். இதற்கு 3 முதல் 5 முறை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது. வலி மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது. மயக்க மருந்து தேவையில்லை.

    நரம்பு முடிச்சு நீக்குதல்:


    Varicose vein என்ற காலில் தோற்றும் தடித்த நரம்பு முடிச்சு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகுந்த உபாதை அளிக்க கூடிய ஒரு பிரச்சினையாகும்.

    இதற்கு எளிமையான நிரந்தர தீர்வு லேசர் மூலமாக செய்யப்படும். இந்த லேசர் சிகிச்சை முறையானது அறுவை சிகிச்சை முறையில் நரம்பு முடிச்சுகளை நீக்குவதை விட பல வழிகளில் உயர்ந்த சிகிச்சை முறையாகும்.

    இந்த சிகிச்சை முறைக்கு Endovenous Laser Ablation என்ற பெயர் உண்டு. இந்த முறையில் நிரந்தரமாக பக்க விளைவுகள் இன்றி நீக்கிவிடலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அறுவை சிகிச்சை முறையில் செய்யும்போது மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் மற்றும் வலி, விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. OP (Out patient) முறையில் இந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். சில மணி நேரங்களே ஆக கூடிய இந்த சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம்.

    லேசர் முறையில் பச்சை குத்தியது நீக்குதல்:

    கருப்பு மற்றும் பல நிறங்களில் இருக்ககூடிய பச்சை குத்தியதை Q-Switched Nd Yag (Revlite, Spectra) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். 2 மற்றும் 3 முறை இந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் முழுமையாக பச்சை குத்தியதை நீக்கலாம். இந்த சிக்சைக்கு பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. வலி கிடையாது மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

    பிறப்பு மச்சம் நீக்குதல்:

    இரத்த குழாயில் உருவாகக் கூடிய சிகப்பு மச்சத்தை (Hemangioma) இதனை Pulsed dye Laser (V-beam) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். இந்த சிகிச்சையை 1 அல்லது 2 முறை எடுக்கவேண்டும். இந்த சிகிச்சை பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

    Stretch marks மற்றும் ஆபரேஷன் தழும்பு நீக்குதல்

    ஆபரேஷன் தழும்புகள் மற்றும் உடலில் தோன்றும் Stretch marks பெண்களுக்கு டெலிவரிக்கு பின் ஏற்படக்கூடிய தழும்புகள் (டெலிவரி மார்க்ஸ்) இவற்றை Fraxel 1550nm Erbium Glass சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

    இந்த சிகிச்சையை 4 முதல் 5 முறை எடுக்கவேண்டும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் வலி கிடையாது. இ்ந்த சிகிச்சைமுறை பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாகும்.

    அழகிய உடலமைப்பு மற்றும் உடல் கொழுப்பு நீக்குதல்

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் தோன்றும் தேவையற்ற கொழுப்பு மற்றும் உடலமைப்பு பெற Cryolipolysis சிகிச்சை முறையில் சிறந்த பலனை பெறலாம்.

    அறுவை சிகிச்சை இல்லாத அதிநவீன லேசர் சிகிச்சையின் மூலமாக வயிறு மற்றும் கை கால்களில் பகுதிகளில் உள்ள கொழுப்பு மற்றும் உடல் பருமனையும் அகற்றலாம். இந்த லேசர் சிகிச்சையின் மூலம் அழகிய உடலமைப்பு பெறலாம்.

    இந்த லேசர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க அவசியமில்லை. இந்த சிகிச்சையை OP (Out patient) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். வலி இல்லாத பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத லேசர் சிகிச்சை முறையாகும்.

    மேலும் தொடர்புக்கு:-

    AKJN SKIN & LASER CENTRE, வண்ணார்பேட்டை திருநெல்வேலி. 0462- 2502718, 2501730.
    மனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.
    செல்ஃபி மோகம் இன்றைக்கு இளைய தலைமுறையினர் குறிப்பாக பள்ளி மாணவ -மாணவிகள், கல்லூரி மாணவர்களையும் ஆட்டிபடைக்கிறது. இதனால் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் செல்போனுக்கு அடிமையாகி விடுகின்றனர். கெட்ட செயல்களுக்கு ஆளாகி எதிர்காலத்தை சீரழித்து கொள்கிறார்கள். மேலும் வேலை வாய்ப்பை பெறுகிற போது திறமையின்மையும், தகுதியின்மையாலும் வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.

    தொழில் புரிவோர்கள் செல்ஃபி மோகத்தால் தொழிலில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனத்தை செலுத்தி தொழிலில் தோல்வியடைந்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் மனநோய்க்கும் ஆளாகி விடுகின்றனர். செல்ஃபி மோகத்தை உலக சுகாதார அமைப்பு மனநோய் என குறிப்பிடுகிறது.

    இதை 3 வகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். ஒரு நாளைக்கு 3 முறை செல்ஃபி எடுத்து பதிவு செய்தால் அது அக்யூட் அல்லது மிதமான மனப்பாதிப்பு. 3 முறை செல்ஃபி எடுத்து அதை போடாமலே விட்டுவிடுவது மாடரேட் அல்லது மத்திம மனப்பாதிப்பு. 6, 7 முறை எடுத்து பதிவிடுவது கிரானிக் என்ற தீவிர மனப்பாதிப்பு.

    பதினெட்டு வயது முதல் 25 வரையுள்ள வயதினர் இதற்கு அதிகம் அடிமையாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஆர்வம் அதிகம். ஏனெனில் அவர்களுக்கு தங்களை வெளிப்படுத்தும் ஆவல் மிகுதி.

    அவர்கள் தாங்கள் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ஃபி எடுக்கின்றனர். ஆண்களோ, சுற்றுப்புறத்தை முன்னிறுத்தி எடுக்கின்றனர். இதனால் தான் அபாய விகிதம் அதிகரிக்கிறது.

    தம்மை பிறர் அங்கீகரிக்க வேண்டும் அல்லது பாராட்ட வேண்டும் என்ற மனோபாவம் (நார்சிசிஸ்டிக் பெர்சனா லிட்டி) இதற்கு முக்கிய காரணம், லோ செல்ஃபெஸ்டீம் எனப்படும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும், சமூக, குடும்ப ஆதரவு குறைபாடும் பிற காரணங்கள். பெற்றோர் பிள்ளைகளிடம்அதிக நேரம் செலவழிக்கா விட்டாலும் இவ்வாறு செல்போன் அல்லது செல்ஃபிக்கு அடிமை ஆகிவிடுகின்றனர்.

    இதனால் ஓடும் ரயிலுக்கு முன் நின்று, உச்சிப்பாறையின் மேல் நின்று, வாரிச்சுருட்டும் வேகத்தில் வரும் அலை முன்பு நின்று என்று சாகச வேலை செய்கின்றனர். எல்லாம் தனது அங்கீகாரத்துக்காகத்தான்.

    இதனால், பிள்ளைகளின் படிப்பு குறையும், பிறரிடம் தொடர்பு குறையும் என்பதால் பெற்றோர் பதறுகின்றனர். என்னிடம் அரசுத்துறையில் உயர் பதவியில் உள்ள ஒருவர் தன் மகனை அழைத்து வந்தார். அவன் செல்ஃபி பாதிப்பில் இருக்கிறானே என்று செல்போனை பிடுங்கினால், டிவியை அடித்து நொறுக்குவது, தந்தையின் அலுவலக கோப்புகளை பிடுங்கி கிழிப்பது என்று மூர்க்கமாகியிருக்கிறான்.

    நான் அவனுக்கு அவனது பெற்றோருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் அளித்தேன். சி.பி.டி. எனப்படும் மன நடத்தை சிகிச்சை மேற்கொண்டேன். அச்செயலை நிறுத்த ஊக்கப்படுத்தும் ஸ்டாப்மோட்டிவேசன் செய்தேன். படிப்பு பாதிப்பு, நட்பு இழப்பு, விளையாட்டு திறன் குறைவு போன்ற பாதிப்புகளை படிப்படியாக எடுத்துரைத்தேன். இதில் அவன் குணமாகிவிட்டான்.

    கடந்த பத்தாண்டுக்கு முன்பு கணினி அடிமைத்தனம் பின்பு இணைய அடிமைதனம் என நீண்டு இப்போது கைபேசி, தன்பட அடிமைத் தனம் வந்து சேர்ந்துள்ளது. இதற்கு தீர்வு காண இன்னும் பல மருத்துவ ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறது.

    மனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.

    Dr. C.பன்னீர்செல்வன்MBBS., MD, சினேகா மனநல மையம், திருநெல்வேலி
    பிறப்பின்போதோ அல்லது அதன் பின்பு குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் பாதிப்பின்தன்மைக் கேற்ப குழந்தைகளுக்கு மொழி கற்று கொள்வதிலும், பேசுவதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.
    பிறப்பின் முதற்கொண்டே குழந்தைகள் மொழிகள் கற்றுக் கொண்டு சராசரியாக 10 முதல் 12 மாதத்தில் தனது முதல் வார்த்தையை உச்சரிக்க தொடங்குகிறது.

    பிறப்பின்போதோ அல்லது அதன் பின்பு குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் பாதிப்பின்தன்மைக் கேற்ப குழந்தைகளுக்கு மொழி கற்று கொள்வதிலும், பேசுவதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.

    ஆகையால் பிறந்த இளம் குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்வது அவசியம். பிறந்த 3ம் நாள் முதல் செவித்திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    செவித்திறன் குறைபாட்டினால் மட்டுமின்றி வேறு சில காரணங்களினாலும் குழந்தைகளுக்கு பேசுவதிலும், மொழிகள் கற்றுக் கொள்வதிலும் தடையோ தாமதமோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஆட்டிஸம், ஹைப்பர் ஆக்டிவ், உச்சரிப்பு தெளிவின்மை, அன்னபிளவு, மூளை முடக்குவாதம் மற்றும் திக்கி பேசுபவர்கள், பெண் குரலில் பேசுபவர்கள் மற்றும் அனைத்து விதமான பேச்சு மற்றும் குரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் அனுபவமிக்க நிபுணர்கள் (Senior Speech Therapist) மூலம் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒருவரின் காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு கேட்பதிலும் புரிந்து கொள்வதிலும், சிலருக்கு காதில் இரைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. வேறு சிலருக்கோ செவித்திறன் குறைபாட்டினால் குரல் மற்றும் பேச்சில் மாற்றமும் ஏற்படுகிறது.

    இவற்றை தவிர்க்க இத்துறை சார்ந்த நிபுணர்களின் (Audiologist) ஆலோசனைப்படி சரியான காது கருவியை தேர்வு செய்து அணிவது அவசியம். காது கருவிகள் பலவித மாடல்களிலும் பலவித வர்ணங்களிலும் மட்டுமின்றி டிஜிட்டல், புரோகிராமபிள் காது கருவிகள் இங்கு கிடைக்கும்.

    1. bte

    2. ric

    3. CIC

    4. IIC (கண்ணுக்கு சிறிதும் தெரியாத காது கருவிகள்)

    இரண்டு காதுகளுக்கும் காது கருவிகள் அவசியமா?

    நாம் எல்லோரும் அன்றாட கேட்கும் சப்தங்கள் இரண்டு காதுகள் மூலமே கேட்கப்படுகிறது. ஒருவரின் செவித்திறன் குறையும்போது இரண்டு காதுகளின் அளவையும் தனித்தனியே கண்டறிய முடியும். ஒரு காதில் மட்டும் காது கருவி பொறுத்தும்போது சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒலியின் திசையை கண்டறியவும், பேச்சின் தெளிவு துள்ளியமாக கேட்கவும், இரண்டு காது கருவிகள் மிகவும் அவசியம்.

    மேலும் விபரங்களுக்கு :

    ரோஸ் ஸ்பீச் தெரபி - ஹியரிங் எய்டு சென்டர், 8A, மிலிட்டரி லைன், அன்டன் சவுண்டு சர்வீஸ் அருகில், சமாதானபுரம், பாளையங் கோட்டை, திருநெல்வேலி-2, Mobile : 94427 59958
    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேப்பகிழங்கு   - கால் கிலோ
    நல்லெண்ணெய்   - தேவையான அளவு
    வெந்தயம்  - 1\4 தேக்கரண்டி
    சின்னவெங்காயம் - 1 கைப்புடி அளவு
    கறிவேப்பிலை  - சிறிதளவு
    மஞ்சள் தூள்  - சிறிதளவு
    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    தக்காளி சின்னது  - 2
    பூண்டு பற்கள் -5
    புளி கரைசல் - சிறு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் தயார் செய்யவும்
    தேங்காய் பால் - 150 மி.லி

    சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு

    செய்முறை :

    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மண் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி நன்கு காய்ந்ததும் அதில்நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வெட்டி வைத்துள்ள சேப்பகிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.

    அடுத்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

    சுவையான சேப்பகிழங்கு புளிக்குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம் உடல் எலும்புகள், உருவ அமைப்பை வரையறுப்பது மட்டுமன்றி மேலும் பலசெயல்களைச் செய்கிறது. ரத்த செல்களை உருவாக்குவதோடு, உடல் உள்ளமைப்பை கட்டுப்படுத்தும் வேலைகளை எலும்புகள் செய்கிறது.
    நம் உடலில் உள்ள எலும்புகள் உடலைத்தாங்கிப் பாதுகாக்கும் பணியைச்செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் உடல் எலும்புகள், உருவ அமைப்பை வரையறுப்பது மட்டுமன்றி மேலும் பலசெயல்களைச் செய்கிறது. ரத்த செல்களை உருவாக்குவதோடு, உடல் உள்ளமைப்பை கட்டுப்படுத்தும் வேலைகளை எலும்புகள் செய்கிறது. மேலும் நம் மூளை, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதுகாவலனாக உள்ளது.

    மனிதன் குழந்தையாக இருந்து வளரும்போது உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறன. உடல் வளர்ச்சி, உடல் இயக்கங்கள் என மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் உடலில் உள்ள எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    உடலுக்கு அடிப்படையாக மட்டுமல்லாமல், நம் உடல் வாழ பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்கிறது உடல் எலும்புகள். சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் எலும்பின் மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. நுரையீரல் மற்றும் உடலின் பல பாகங்களுக்கு ஆக்சிஜனை ஏந்திச்செல்லும் பணியை சிவப்பு ரத்த அணுக்கள் செய்கின்றன. அதேபோல் வெள்ளை அணுக்கள் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் போர் புரிகின்றன. இந்த வேலைகளை ஒரு சமநிலையில் வைத்திருப்பது என்பது ஒரு சுலபமான காரியம் அல்ல. இதற்குத்தான் எலும்புக்கூட்டில் பல விதமான எலும்பு கள் உள்ளன.

    மனிதன் தன் வாழ்நாளில் ஒரு சில எலும்புகளை இழக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கின்றான். ஆனால் இறக்கும்போது இருப்பது 206 எலும்புகள் மட்டுமே.

    ஒரு குழந்தைக்குத் தேவை வளைந்து கொடுக்கக் கூடிய எலும்புக்கூடு. குழந்தை கருவில் சுற்றிவரவும், பிரசவத்தின் போது வெளியே வரும் பாதையைக் கடக்கவும் வளைந்து கொடுக்கக்கூடிய எலும்புகள் தேவைப்படுகிறது. இதற்கு குறுத்தெலும்புகள் மிக அவசியம். இந்த குறுத்தெலும்புகள் குழந்தை பிறந்தவுடன் இணைந்து, அந்தக்குழந்தை வளரவளர வலுவான எலும்பாக மாறும்.

    இந்த எலும்பு மாற்ற நிகழ்வை ‘ஆஸ்சிபிகேசன்’ (Ossification) என்பர். இது குழந்தை உருவான 13-வது வாரத்திலிருந்து தொடங்கி 20-வது வாரம் வரை நீடிக்கும். அதேநேரத்தில் வாழ்நாள் முழுவதும் எலும்பு மீளுருவாக்கம் நடைபெறும்.

    மனித உடலுக்குள் எலும்புகளின் சுயசிகிச்சை முறை நடைபெறுகிறது. அதாவது, நம் எலும்புகள் உடலுக்குத் தேவையான கால்சியத்தை சேமித்து, பின்னர் வழங்கும் தன்மை பெற்றவை. இதனால் வளையும் தன்மையை மனித உடல் பெறுகிறது. மேலும், சுமார் 10 வருட காலத்தில் எலும்பு செல்கள் மீளுருவாக்கம் அடைகின்றன. முன்னர் கூறியபடி ஒவ்வொரு தசாப்த காலத்திலும் நமக்கு ஒரு புது உடல் கிடைக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நம் பற்கள் மட்டும் மீளுருவாக்கம் அடையாதவை. பல் மருத்துவர் கூறுவதுபோல் தினசரி இரு முறை பல் தேய்த்து அவற்றை பாதுகாப்பது மிக அவசியம்.

    நம் மணிக்கட்டு வரை ஒவ்வொரு கையிலும் 27 எலும்புகளும், அதேபோல் நம் பாத மணிக்கட்டு வரை ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகளும் உள்ளன. அதாவது, நமது இரு கை கால்களில் மட்டும் 50 சதவீத எலும்புகள் உள்ளன.

    அடுத்து, நமது காது கேட்கும் திறனுக்கு மூல காரணமாக இருப்பதும் எலும்புகள் தான். காதிலுள்ள ‘ஸ்டேப்ஸ்’ (Stapes) என்னும் எலும்புதான் உடலிலேயே மிகச்சிறிய எலும்பு ஆகும். இது, 2.5 மில்லி மீட்டர் அகலம் உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதுபோல் காதில் ஒலி அதிர்வலைகளை ஏற்று, காது கேட்க வைப்பது இந்த எலும்புதான். இதனால் தான் அனைத்து ஒலிகளையும் நம்மால் கேட்க முடிகிறது.

    சில நேரங்களில் நமது முழங்கை எதன் மீதாவது இடித்துவிட்டால் மின்சார ‘ஷாக்’ அடித்தது போல வலியுடன் கூடிய அதிர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் முழங்கையில் உள்ள எலும்பில் இணைந்துள்ள ‘உல்னார்’ என்ற நரம்பில் (Ulnar Nerve) அடிபடுவது தான். நமது முழங்கையில் உள்ள நீண்ட எலும்பின் பெயர் ஹுமரஸ் (Humerus). இந்த எலும்பின் கீழ் இந்த நரம்பு அமைந்துள்ளது. இந்த நரம்புதான் உடலிலேயே பாதுகாக்கப்படாத நரம்பு ஆகும்.

    மனித உடலில் நாக்கின் கீழ் ஒரு எலும்பு உள்ளது. இதை ‘வி’ (V) எலும்பு என்பார்கள். மனித உடலில் உள்ள எலும்புகளில் இது ஒன்றுதான் வேறு எலும்புடன் சேராமல் தனியாக அமைந்துள்ளது.

    நாம் பார்க்கும் எலும்புக்கூடெல்லாம் பயமுறுத்துவது போல இருந்தாலும் மேற்கூறிய பல தீவிரமான வேலைகளைச் செய்ய எலும்புகள் உதவுகின்றன. உடலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்கவும் எலும்புகள் உதவுகின்றன. உடலில் உள்ள திசுக்களுக்கு கால்சியம் தந்து காப்பாற்றுகிறது.

    நீங்களும் உங்கள் பங்கிற்கு எலும்பின் வளர்ச்சிக்கு உதவலாம். அதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலில் உள்ள எலும்புகளில் அடிபடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

    முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
    தாய்மார்கள் பொதுவான சில விஷயங்களை நினைவில்கொள்ள வேண்டும். மகளிடம் பக்குவமாக அணுகவேண்டும். அவள் மீது அன்பும், அளவற்ற நம்பிக்கையும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    கல்லூரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பெண் ஒருவர், தனது மகளை பற்றி கவலையுடன் சொன்ன விஷயம் இது:

    ‘என் மகளின் கைகளில் இப்போது அடிக்கடி பரிசுப்பொருட்கள் புழங்குகிறது. சந்தேகப்பட்டு, அவள் இல்லாத நேரத்தில் அவளது ‘பேக்கை’ சோதனை போட்டேன். உள்ளே ஒரு செல்போன் இருந்தது. அது யார் வாங்கிக்கொடுத்தது என்றே தெரியவில்லை. என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ!’-என்று பயந்துபோய் கூறினார்.

    சுயதொழில் செய்து மகளை வளர்த்துக்கொண்டிருக்கும் தாயார் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்ட விஷயம் இது:

    ‘என் மகள் யாரோ ஒரு இளைஞனை காதலித்துக்கொண்டிருப்பதாகவும், அவ்வப்போது வகுப்புக்கு செல்லாமல் ‘கட்’ அடித்துவிட்டு அவனோடு ஊர் சுற்றுவதாகவும் கேள்விப்பட்டேன். அடுத்து என்ன நடக்குமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது’ என்று வேதனையுடன் சொன்னார்.

    ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் கண்ணீரோடு சொன்னது:

    ‘என் மகள் திருமணமானவர்கள் பார்க்கக்கூடிய மோசமான பாலியல் காட்சிகளை செல்போனில் பார்த்து பொழுதுபோக்குகிறாள். எனக்கு அதை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. அவளை நான் திருத்துவது எப்படி?’ என்று கேட்டார்.

    இந்த மூன்று விஷயங்களையும் நான் குறிப்பிட காரணம், இந்த தாய்மார்கள் மூவருமே 35 முதல் 40 வயதிற்கு உள்பட்டவர்கள். இவர்களது மகள்கள் மூவரும் பள்ளி இறுதி வகுப்பு படிப்பவர்கள். மூவருமே பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்படும் மகள்கள்!

    இந்த மாதிரியான பிரச்சினைகள், இந்த மூன்று தாய்மார்களுக்கு மட்டும் தலைவலியை தரவில்லை. நிறைய தாய்மார்கள் இதுபோன்ற நெருடலான பிரச்சினைகள் உருவாகும்போது, அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலே தடுமாறிப்போகிறார்கள். ‘வேறு எந்த வீட்டிலும் மகள்களால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. தமது வீட்டில்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துவிட்டது!’ என்று தடுமாறி, மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

    முதலில் தாய்மார்கள் தடுமாற்றத்தை கைவிடவேண்டும். ‘நேற்று எத்தனையோ குடும்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இன்று நம் வீட்டில் நடக்கிறது. நாளை வேறு குடும்பங்களிலும் நடக்கும். ஆணையும், பெண்ணையும் கொண்ட மனித சமுதாயம் இருக்கும்வரை இதுபோன்ற பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். அதனால் தடுமாற்றம் கொள்ளாமல், தன்னிலையை இழக்காமல் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றி யோசிப்போம்’ என்ற பக்குவநிலைக்கு தாய்மார்கள் வரவேண்டும்.

    இப்படிப்பட்ட தெளிவான மனநிலைக்கு வந்தால்தான் மகள்களால் உருவாகும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    தாய்மார்கள் பொதுவான சில விஷயங்களை நினைவில்கொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு 16 அல்லது 17 வயது. அதாவது உங்கள் வயதில் பாதியை கூட அவர்கள் தொட்டிருக்கவில்லை. அதனால், அவர்களிடம் உங்களுக்குரிய அறிவு, பக்குவம், அனுபவம் போன்றவைகளை எதிர்பார்க்காதீர்கள். அவர்களிடம் அந்த இளம் வயதிற்குரிய தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

    16,17 வயதுகளில் சிறுமிகளின் பாலின சுரப்பிகள் வேலை செய்யத்தொடங்கிவிடுகிறது. அவை சுரக்கும் ஹார்மோன்கள் அவர்களது உடலில் பெரும் ரசாயன மாற்றங்களை உருவாக்கும். எதிர்பாலின ஈர்ப்பும், வேட்கையும், இனம்புரியாத பரவசங்களும், ‘எதுவானாலும் அதையும் செய்து பார்ப்போமே’ என்ற உந்துதலையும் உருவாக்குவது இயல்பு. இதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் போகும்போதுதான், தாய்மார்கள் கவலைப்படும் அளவுக்குரிய பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அதனால் மகள்களை குறை சொல்லாமல், இந்த மூன்று சம்பவங்கள்போல் நடக்கும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம்.

    முதல் சம்பவம்! மகளிடம் அடிக்கடி பரிசுப்பொருட்கள் புழங்குகிறது. அவளிடமிருந்து செல்போனும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது!

    மகளின் தடுமாறும் வயது தவிக்குது தாய் மனது

    இது பெற்றோர் உடனடியாக கவனிக்கவேண்டிய பிரச்சினை. காதல்வசப்படுதலை போன்றில்லாமல், அதைவிடவும் ஆழமான சம்பவம் இது. அதனால் பரிசுப்பொருட்களின் பின்னணியை ஆராயவேண்டும். அவளது பள்ளிப்பருவ வாழ்க்கையில் ஏதோ ஒரு தவறு நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இன்னும் சில மாணவிகளோ, மாணவர்களோ இருக்கலாம். அவர்களால் இவள் வேறு ஏதாவது பிரச்சினைகளில் சிக்கி பெற்றோரிடம்கூட சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்.

    அதனால் மகளிடம் பக்குவமாக அணுகவேண்டும். அவள் மீது அன்பும், அளவற்ற நம்பிக்கையும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவளை சரியான முறையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதால், மறைக்காமல் உண்மையை சொல்லும்படி கூறவேண்டும். செல்போன் போன்ற பரிசுகளை தந்து கொண்டிருப்பது தனி நபரா? ஒரு குழுவா? என்ற உண்மையை சொல்லச்செய்ய வேண்டும். அதற்கு மிரட்டலை கையாளாமல், அன்பு வழியை பிரயோகிக்கவேண்டும். சூழ்நிலைக்குதக்கபடி இதில் முடிவெடுக்கவேண்டியதிருக்கும். தேவைப்பட்டால் போலீஸ் உதவியை நாட வேண்டும். மகளுக்காக மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையையும் பெறவேண்டும்.

    இரண்டாவது சம்பவத்தில், பள்ளி வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு மகள் வெளியே செல்வதற்கு காதல்தான் காரணம் என்றால் ‘பள்ளிப்பருவத்தில் அது தேவையில்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்த வேண்டும். அதற்காக மகளை அடித்து மிரட்ட வேண்டியதில்லை. இந்த பருவத்தில் இனக்கவர்ச்சி ஈர்ப்பு இயற்கையானதுதான் என்றாலும், அவர்களிடம் முடிவெடுக்கும் திறன் மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் அவள் மதிக்கும் ஒருவர் மூலம் அவளது எதிர்காலத்தை புரியவையுங்கள். ‘பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவத்தை கடந்த பின்பு காதலிக்கலாம். அதுதான் பக்குவமான காதல். அத்தகைய காதலுக்கு நாங்களும் துணை இருப்போம்’ என்று கூறி, படிப்பில் கவனம் செலுத்தச்செய்யவேண்டும்.

    (அடிப்பது, மிரட்டுவது, தனி அறையில் அடைத்து வைப்பது, அவசர கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வது போன்றவை மோசமான எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும். ஆத்திரமூட்டும் அத்தகைய தவறுகளை செய்யாதீர்கள்)

    மூன்றாவது சம்பவம் பாலியல் ஈர்ப்பு காரணமாக உருவாகியிருக்கிறது. ‘பாலியல் உறவுக்காட்சிகளில் என்னதான் இருக்கிறது?’ என்பதை காணும் ஆர்வத்தில் அதில் ஈடுபட்டிருக்கலாம். அதனால் இதை ஒரு குற்ற சம்பவம்போல் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதே நேரத்தில், அதுபோன்ற காட்சிகளை தொடர்ந்து பார்க்கவும் அனுமதிக்க வேண்டியதில்லை. மகள் அதுபோன்ற காட்சிகளை பார்ப்பது தனக்கு தெரியும் என்பதை தாய் உணர்த்தும் விதத்தில், ‘நீ இப்போதே அதுபோன்ற காட்சி களை பார்க்கவேண்டாம். பார்த்தால் மனக்குழப்பம் ஏற்பட்டு கவனம் சிதறும்’ என்று கூறி, அவள் பார்க்கத்தகுந்த இணைய தளங்களை பரிந்துரைக்கலாம். பெண்கள் பார்க்கக்கூடிய விஷயங்கள் இணையதளங்களில் கொட்டிக்கிடப்பதை அவளுக்கு புரியவைக்கலாம்.

    வளரிளம் பருவத்தில் பெண்களின் உடலுக்கு புதுவித சக்தியும், மனதுக்கு இனம்புரியாத பரவச உணர்வுகளும் ஏற்படுகின்றன. அப்போது அவர்களது உடலும், மனதும் அதிக ஆற்றலுடன் புத்துணர்வு கொள்கிறது. வித்தியாசமான சிந்தனைகளும் எழுகின்றன. இந்த காலகட்டத்தில் அவர்களிடம் இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த அவர்களை விளையாட்டு களிலோ, கலையிலோ திசை திருப்பிவிட வேண்டும். அதில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் அதை சுற்றியே அவர்கள் சிந்தனை செல்லும். தனது சிந்தனையையும் ஆற்றலையும் மேம்படுத்தி அந்த துறையில் சாதிக்க முனைவார்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுத்தினால் அவர்கள் புதுவிதமான அனுபவங்களை பெறுவார்கள். அது அவர்களை நல்வழிப்படுத்தும்.

    மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய மாணவி களிடம் பேசியபோது, ‘பெற்றோர்கள் எந்நேரமும் படி.. படி.. என்பார்கள். அதனால் வாழ்க்கையே போரடித்துவிட்டது. புதிதாக வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று தேடினோம். வாழ்க்கையை சுவாரசியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மாறுதலுக்காக இதுபோன்ற நட்பு வட்டத்திலும், பழக்கத்திலும் ஈடுபட்டோம்’ என்றார்கள். பக்குவமான ஆலோசனைகளுக்கு பிறகு தாங்கள் செல்வது தவறான பாதை என்பதை உணர்ந்து, அதில் இருந்து விலக முன்வந்தார்கள்!

    தாய்மார்களே புரிந்துகொள்ளுங்கள்! உங்கள் மகள்களை மனதறிந்து வளருங்கள். மனதறிந்து வளர்த்தால் மட்டுமே அவர்களது வாழ்க்கை நிலை உயரும்.

    - விஜயலட்சுமி பந்தையன்.
    படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்.
    பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்.

    படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும். பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும்.

    அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.

    செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
    ×